காவல் தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும்

தமிழக காவல் துறையில் ஆயுதப்படையில் காலியாக உள்ள 5,538 இரண்டாம் நிலை காவலர்கள் (ஆண், பெண், மூன்றாம் பாலினம்), சிறைத்துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண், பெண்), தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் (ஆண்) மற்றும் 46 பின்னடைவு காலி பணியிடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 6,140 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 11.3.2018 நடைபெற்றது.

இதில் பட்டதாரிகள் உட்பட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதியுள்ளனர்.

போலீஸ் வேலைக்கான கேள்வித்தாள் 80 மதிப்பெண்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. இதில் 50 மதிப்பெண்கள் பொது அறிவு சம்பந்தப்பட்டதாக இருந்தது. தேர்வுக்கான நேரம் 1 மணி நேரம் 20 நிமிடமாக வரையறை செய்யப்பட்டிருந்தது

தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு சீறுடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்ததாக உடல் தகுதி தேர்வுக்காக அழைக்கப்படுவர்.

தேர்வு வினாத்தாள் எவ்வாறு இருந்தது ?
Section Level Good Attempts
General Knowledge Easy – Moderate 30-35
Psychology Easy – Moderate 25-28
Overall Easy-Moderate 55-63

 

, , , ,

5
Leave a Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Subscribe  
Notify of
Mohd Firthouz
Guest
Mohd Firthouz

Result july 11 nu sonnathu unmaiya