Daily Current Affairs – June 14th to 17th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (June 14th – 17th )

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : June 14th – 17th

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

விளையாட்டு செய்திகள்

 

FIFA உலகக் கோப்பை

2018 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை ரஷ்யாவில் மாஸ்கோவின் லூசுனிகி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

 

KSS நினைவு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி

இடம்      : தில்லி கர்னி சிங் தூப்பாக்கி சுடுதல் தளம் மத்திய பிரதேசம்

போட்டி : 18 வது KSS நினைவு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி                  

வெற்றி பெற்றவர்  :  அனில் குமார்

வெற்றி பெற்றது    :  தங்கப் பதக்கம்

 

ஐ .டி.எப் பெண்கள் டென்னிஸ்

போட்டி                     :   ஐ .டி.எப் பெண்கள் டென்னிஸ்

பங்கேற்ற அணி    :   பிரார்த்தனா-லூகிகா ஜோடி (தாய்லாந்த்), பிரிட்டனின்  நவோமி   பிராடி மற்றும் அமெரிக்காவின் ஆசியா முகம்மது ஜோடி

வெற்றி பெற்றவர்  :   ப்ரார்த்தனா தொம்பரே மற்றும் லுகிக்கா கும்ஹம்(தாய்லாந்த்)

 

ஸ்டூட்கார்ட் இறுதி டென்னிஸ் போட்டி

ஸ்டூட்கார்ட் ஓபன் இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரர் நிக் என்பவர்  கிர்கோயியை தோற்கடித்தார்.

 

நியமனங்கள்

 

மேகனா ஷான்ஃபோ

மேகனா ஷான்ஃபோ என்பவர்  கர்நாடகாவின் முதல் விமானப்படையின் விமான பைலட் ஆவார்.

இவர் ஐ.ஏ.பியிடம் சேர்க்கப்படக்கூடிய ஆறாவது பெண் போர் விமானி ஆவார்.

 

முதல் பெண் காவல் துறை பொது இயக்குனர்

புதுச்சேரியின்  முதல் பெண் காவல் துறை பொது இயக்குனராக (DGP) எஸ் சுந்தரி நந்தா நியமிக்கப்பட்டார்.

 

மாநில செய்திகள்

 

டிரான்ஸ்யூனியன்  தொழில்நுட்ப மையம்  திறப்பு

TransUnion அதன் முதல் உலகளாவிய உள்ளக மையத்தை (ஜி.ஐ.சி) சென்னை நகரத்தில் திறந்தது.

 

நிதி ஆயோகின் 4ஆவது நிர்வாக குழுக்கூட்டம்

 

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 17 ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைப்பெற்ற நான்காவது NITI நிதி ஆயோக் நிர்வாக குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

 

கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டு

நாட்டின் கலப்பு நீர் மேலாண்மையில் முதல் மாநிலமாக குஜராத் மாநிலம் உருவாகியுள்ளது.

அதற்க்கு அடுத்த இடத்தில் மத்திய பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளது.

நாட்டில் முதன்முறையாக மாநிலங்களில் கலப்பு நீர்  மேலாண்மை செய்வதில் தரவரிசை குறியீடு வழங்கியுள்ளது.

ஜார்கண்ட், ஹரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை தேசிய அளவிலான நிதி ஆயோக் வெளியிட்ட தரவரிசை குறியீட்டில் பின்தங்கியுள்ளது.

உலக செய்திகள்

 

வியக்கத்தக்க இந்தியா சாலை நிகழ்ச்சி

“வியக்கத்தக்க இந்தியா” சாலைகள் நிகழ்ச்சிகள் 2018  ஜூன் 18 முதல் 22 வரை அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ & ஹூஸ்டன் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நடைபெற்றது   

இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜி.ஜே. அல்போன்ஸ்  என்பவர் பங்கேற்றார்.

 

ஐஎஸ்ஆர்ஓ நிறுவனம் வழங்கும் மின்-வாகன செல் தொழில்நுட்பம்  

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) அதன் தனித்துவமான வளர்ந்த லித்தியம் அயன் செல் தொழில்நுட்பத்தை, தொழில்துறை பயன்பாட்டிற்கு ஓரு கோடி ரூபாய்க்கு வழங்குகிறது.

இது E- வாகன பசுமை திட்டம் அரசாங்கத்தின் பூஜ்ஜிய உமிழ்வு கொள்கைக்கு ஊக்கமளிக்கும்.

 

அமெரிக்கா கிரீன்ஃபீல்டு நேரடி முதலீட்டு

2017 ஆம் ஆண்டில், கிரீன்ஃபீல்டு நேரடி முதலீட்டில் அமெரிக்கா இந்தியாவை தாண்டி முதலிடத்தில் வந்துள்ளது .

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

யூகோஸ்லாவிய குடியரசின் பெயர்  மாற்றம்

கிரீஸ், மாசிடோனியா முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசை “வடக்கு மசடோனியா குடியரசு” என மறுபெயரிடுவதற்கு கிரேக்கத்திலும் மாசிடோனியாவிலும் வெளிநாட்டு மந்திரிகள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

கியூபெக் மை ஒப்பந்தம்

மகாராஷ்டிரா அரசாங்கமும் கனடாவின் கியூபெக் மாகாணமும் பொருளாதார தகவல் தொழில்நுட்பம், உயிர்தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பழங்குடி சமூகத்தின் நலன் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

 

புத்தகங்கள்

நபார்டு புதுடில்லியிலுள்ள ஒரு விழாவில் ‘பெரிய இந்திய பயிர்களின் நீர் உற்பத்தித் தன்மை’ என்ற புத்தகத்தை  வெளியிட்டது.

 

முக்கியமான நாட்கள்

 

உலக இரத்த தானம் நாள் – ஜூன் 14

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 14 அன்று உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உலக இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.

2018 Theme : Be there for someone else. Give blood. Share life.

 

சர்வதேச வீட்டுத் தொழிலாளர்கள் தினம் (IDWD) – ஜூன் 16

சர்வதேச வீட்டுத் தொழிலாளர் தினம் (IDWD) ஜூன் 16 ம் தேதி  ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

 

அறிவியல் செய்திகள்

 

ரயில்கள் பயோ -கழிப்பறைகள்

ரயில் பெட்டிகளில் பயோ-கழிப்பறைகளை நிறுவிய பிறகு, இந்திய இரயில்வே அதை இப்போது மேம்படுத்தப்பட்ட வெற்றிட பயோ-கழிப்பறைகளாக மாற்றுகிறது.

 

நவீன நானோகாம்ப்ளெக்ஸ் அணுகுமுறை

ஒரு எளிய கரிம மூலக்கூறான (போர்பிரின்) பூசப்பட்ட தங்க நானோ துகள்களைப் பயன்படுத்தி, CSIR- இன் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தாவின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு நானோ காரியரை கண்டுபிடுத்துள்ளனர்.

இது புற்றுநோய் மருந்து விநியோகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

 

Glonass-M  செயற்கைக்கோள்

Glonass-M  செயற்கைக்கோள் ரஷ்யா அறிமுகப்படுத்துகிறது

சோயாஸ்-2.1 பி கேரியர் ராக்கெட் மூலம் Glonass-M நிலை செயற்கைக்கோள் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

விருதுகள்

 

பிளாக் விருது

விமானப் போக்குவரத்து அதிகாரி அபிஷேக் பாஜ்பாய் மற்றும் பிலைட் அதிகாரி பன்டி ஆகியோருக்கு முதன் முறையாக ஜனாதிபதி பிளாக் விருதை வழங்கினார் .

 

 


Download Daily Current Affairs [2018- June – 14&17]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us