தமிழக காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைக்கு 6,000 பணியிடங்கள்

TNUSRB 2019 Recruitment for 6000 Vacancies

தமிழக காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, இரண்டாம் நிலை காவலர்கள், 6,000 பேரை தேர்வு செய்ய, போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைக்கு, எஸ்.ஐ.,க்கள் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கு, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இரண்டாம் நிலை காவலர் என்ற நிலையில், 2017ல், 15 ஆயிரத்து, 621 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல, இந்த ஆண்டு, நவ., 23ல், 6,119 பேர் தேர்வு செய்யப்பட்டு, காவலர் பள்ளிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.அதே நேரத்தில், காவலர் பணி ஓய்வு, திடீர் மரணம் காரணமாக, காவல் துறை உள்ளிட்ட மூன்று துறைகளிலும், காலி பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இப்பணியிடங்களை நிரப்ப, 6,000 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆயத்த பணிகளும் துவக்கப்பட்டு உள்ளன.

1. பொது வகுப்பினர் (General) – 18 வயது நிறைவு பெற்றவராக மற்றும் 24 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். 

2.பிற்படுத்தப்பட்ட(BC) / மிகவும் பிற்படுத்தப்பட்ட(MBC) / சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் – 18 வயது நிறைவு பெற்றவராகவும் 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

3. ஆதிதிராவிடர்(SC) / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடினர் வகுப்பினைச்(ST) சார்ந்தவர்கள் – 18 வயது நிறைவு பெற்றவராகவும் 29 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

4. ஆதரவற்ற விதவைகள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் – 18 வயது நிறைவு அடைந்தவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

5. முன்னாள் ராணுவத்தினர் / மத்திய துணை ராணுவப்படையினர் – 45 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
Note : wait for Official Notification

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us