TNPSC CURRENT AFFAIRS PDF – 13th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 13 August  2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. Chief Minister M.K. Stalin released the books for the use at Temples for Annai Thamizhil Archanai.

அன்னைத் தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 12.8.2021 அன்று வெளியிட்டார்.

2. Minister for Information Technology T. Mano Thangaraj chaired a Seminar on Artificial Intelligence and its Impact on Health Care Sector held at South Indian Chamber of Commerce and Industries on August 12, 2021.

ஆகஸ்டு 12, 2021 அன்று தென்னிந்திய தொழில் வர்த்தக சபை கூட்டரங்கில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் அதன் தாக்கம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

3. Chief Minister M.K. Stalin on August 13, 2021 inaugurated through video conference a Fulfilment Centres of Amazon India in Chennai and Coimbatore.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 13, 2021 அன்று சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் புதிய மற்றும் விரிவாக்க கிடங்கு மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

4. Eight inspectors in the State have been awarded the Union Home Minister’s Medal for Excellence in Investigation for 2021. The list includes

M. Saravanan, Crime Branch CID, Nagapattinam;

A. Anbarasi, all women police station, Thiruvannamalai district;

P. Kavitha, Puduchatram police station, Cuddalore;

R. Jayavel,Vengal police station, Tiruvallur;

K. Kalaiselvi, Thiruporur circle police station,Chengalpattu;

G. Manivannan, intelligence section,east zone, Greater Chennai City police;

P.R. Chidambaram Murugesan, Greater Chennai City police; and

C.Kanmani, special branch,Nagercoil, Kanyakumari District.

தமிழகத்தை சேர்ந்த 4 பெண் காவல் ஆய்வாளா்கள் உட்பட 8 காவல்துறை ஆய்வாளர்களுக்கு, சிறந்த புலனாய்வுக்கான ஒன்றிய அரசின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் காவல் ஆய்வாளர்களான அன்பரசி, கவிதா, கலைச்செல்வி, கண்மணி மற்றும் சிதம்பர முருகேசன், மணிவண்ணன், ஜெயவேல், சரவணன் ஆகிய எட்டு பேரும் சிறந்த புலனாய்வுக்கான விருது பெறுகின்றனர்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

India

5. The “Union Home Minister’s Medal for Excellence in Investigation” for the year 2021 have been awarded to 152 Police personnel. This medal was constituted in 2018, with the objective to promote high professional standards of investigation of crime and to recognize such Excellence in Investigation by investigating officers.

2021-ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 152 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கவும், புலனாய்வில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும், 2018-ஆம் ஆண்டில் “சிறந்த புலனாய்வுக்கான ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கம்” நிறுவப்பட்டது.

6. The Indian Space Research Organisation’s second mission of the year (GSLV-F10/EOS-03) – to place an earth observation satellite by a GSLV rocket – faced a setback as it could not be accomplished fully due to a performance anomaly in the cryogenic stage of the rocket, the ISRO said on August 12, 2021.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமி கண்காணிப்புக்காக ஈ.ஓ.எஸ்-03 என்ற செயற்கைகோளை வடிவமைத்தது. இதனை ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தி, ஆகஸ்டு 12, 2021 அன்று ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.இந்நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் கிரையோஜெனிக் எஞ்ஜின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

7. A 54-member, largest ever Indian contingent was given a formal and virtual send-off on August 12, 2021 to the Tokyo Paralympic Games by Union Minister for Youth Affairs and Sports Anurag Singh Thakur.

இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அணியாக 54 பேர் கொண்ட இந்தியக் குழுவை டோக்கியோ 2020 மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் காணொலி மூலம் வாழ்த்துக் கூறி ஆகஸ்டு 12, 2021 அன்று வழியனுப்பி வைத்தார்.

8. Union Minister of Youth Affairs & Sports Anurag Singh Thakur will launch the Nationwide programme of Fit India Freedom Runs 2.0 as part of Azadi ka Amrit Mahotsav on 13th August 2021 from Major Dhyan Chand National Stadium, New Delhi.

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0-ஐ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு அரங்கில் 2021 ஆகஸ்டு 13 அன்று தொடங்கி வைக்கிறார்.

9. Dr. Dipti Gupta from IIT Bombay has developed low-cost soft, flexible, and wearable sensors that can be used for diagnosis of pulse rate variability in humans.

மனிதர்களின் நாடித் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டறிவதற்காக, குறைந்த விலையில், மென்மையான, வளைந்து கொடுக்கும் தன்மையுடன், அணிந்துகொள்ளும் உணரிகளை மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் தீப்தி குப்தா உருவாக்கியுள்ளார்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Days & Themes

10. World Elephant Day is celebrated every year on August 12.

உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who chaired a Seminar on Artificial Intelligence and its Impact on the Health Care Sector held at SICCI?

Anurag Singh Thakur

Dipti Gupta

T. Mano Thangaraj

M.K. Stalin

தென்னிந்திய தொழில் வர்த்தக சபை கூட்டரங்கில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் சுகாதாரத் துறையில் அதன் தாக்கம் குறித்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்தவர் யார்?

அனுராக் சிங் தாக்கூர்

தீப்தி குப்தா

த. மனோ தங்கராஜ்

மு.க. ஸ்டாலின்

2. How many police inspectors in Tamil Nadu have been awarded the Union Home Minister’s Medal for Excellence in Investigation in 2021?

5

6

7

8

2021ல் புலனாய்வில் சிறந்து விளங்குவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கம் தமிழ்நாட்டில் எத்தனை காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?

5

6

7

8

3. Who inaugurated the Fulfilment Centres of Amazon India in Chennai and Coimbatore?

Anurag Singh Thakur

Dipti Gupta

T. Mano Thangaraj

M.K. Stalin

அமேசான் இந்தியாவின் நிறைவு மையங்களை சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தொடங்கிவைத்தவர் யார்?

அனுராக் சிங் தாக்கூர்

தீப்தி குப்தா

த. மனோ தங்கராஜ்

மு.க. ஸ்டாலின்

4. The “Union Home Minister’s Medal for Excellence in Investigation” was constituted in

2016

2017

2018

2019

“விசாரணையில் சிறந்து விளங்குவதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கம்” எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

2016

2017

2018

2019

5. Who launched the Nationwide programme of Fit India Freedom Runs 2.0?

Anurag Singh Thakur

Dipti Gupta

T. Mano Thangaraj

M.K. Stalin

ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரன் 2.0 இன் நாடு தழுவிய திட்டத்தை தொடங்கியவர் யார்?

அனுராக் சிங் தாக்கூர்

தீப்தி குப்தா

த. மனோ தங்கராஜ்

மு.க. ஸ்டாலின்

6. Who has developed sensors for diagnosis of pulse rate variability in humans?

Anurag Singh Thakur

Dipti Gupta

T. Mano Thangaraj

M.K. Stalin

மனிதர்களில் துடிப்பு விகித மாறுபாட்டைக் கண்டறிவதற்கான உணரிகளை உருவாக்கியவர் யார்?

அனுராக் சிங் தாக்கூர்

தீப்தி குப்தா

த. மனோ தங்கராஜ்

மு.க. ஸ்டாலின்

7. World Elephant Day is celebrated every year on

August 11

August 12

August 13

August 14

உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

ஆகஸ்டு 11

ஆகஸ்டு 12

ஆகஸ்டு 13

ஆகஸ்டு 14

8. How many police inspectors in India have been awarded the Union Home Minister’s Medal for Excellence in Investigation in 2021?

150

152

154

156

2021 ல் புலனாய்வில் சிறந்து விளங்குவதற்காக இந்தியாவில் எத்தனை காவல் ஆய்வாளர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது?

150

152

154

156

DOWNLOAD  Current affairs -13 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: