TNPSC CURRENT AFFAIRS PDF –22nd JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 22 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The Governor Banwarilal Purohit announced the constitution of a State level advisory committee for major Hindu temples to enhance facilities for devotees, improve maintenance and advise on related issues.

அனைத்து முக்கிய இந்துக் கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாநில அளவிலான ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் பன்வரிலால் புரோஹித் அவர்கள் அறிவித்துள்ளார்.

2.The Tamil Nadu government will introduce a separate annual Budget for agriculture with the objective of increasing agricultural productivity and protecting farmers’ welfare, Governor BanwarilalPurohit said on June 21.

வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவுள்ளது என்று ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஜூன் 21 அன்று அறிவித்துள்ளார்.

India 

3.The Chairperson of the National Human Rights Commission (NHRC) Justice Arun Mishra has constituted a 7-member Committee to enquire into the complaints of post-poll violence in the state of West Bengal.

மேற்கு வங்காள மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான புகார்களை விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா அமைத்துள்ளார்.

4.WWF India has inducted Upasana Kamineni, Director, Apollo Hospitals, as “Ambassador of Forest Frontline Heroes”.

அப்பல்லோ மருத்துவமனைகளின் இயக்குநர் உபாசனா கமினேனி, WWF இந்தியாவின் “வன முன்கள வீர்ர்களின் தூதர்” ஆக அறிவிக்கப்பட்டுள்ளர்.

International

5.Ships of the Indian Navy and Japanese Maritime Self-Defense Force (JMSDF) participated in a joint naval exercise at the Indian Ocean to realize “Free and Open Indo-Pacific (FOIP)”.

“சுதந்திரமிக்க மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் (FOIP) பகுதியை உருவாக்கும் நோக்கத்தில் இந்திய கடற்படை மற்றும் ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படை (JMSDF) கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் ஒரு கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றன.

6.Every year the World Hydrography Day (WHD) is observed on 21 June. The theme for 2021 WHD is “One hundred years of international cooperation in hydrography”.

ஒவ்வொரு ஆண்டும் உலக நீராய்வியல் தினம் (WHD) ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2021 WHD இன் கருப்பொருள் “நீராய்வியலில் நூறு ஆண்டுகால சர்வதேச ஒத்துழைப்பு”.

Sports

7.The New Zealand weightlifter Laurel Hubbard is the first transgender athlete to compete at an Olympic Games.

நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் அவர் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த 2013ஆம் நடந்த பளு தூக்குதல் போட்டிகளில் இவர் ஆண்கள் பிரிவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The Governor Banwarilal Purohit has announced the constitution of a State level advisory committee for

A.Agriculture

B.Major Hindu Temples

C.Local Government

D.Women

ஆளுநர் பன்வரிலால் புரோஹித் கீழ்காணும் எதற்காக மாநில அளவிலான ஆலோசனைக் குழு அமைக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்?

A.வேளாண்மை

B.முக்கிய இந்து கோவில்கள்

C.உள்ளூர் அரசு

D.பெண்கள்

2.The Tamil Nadu government has announced to introduce a separate annual Budget for

A.Agriculture

B.Major Hindu Temples

C.Local Government

D.Women

கீழ்காணும் எதற்காக தனி நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது?

A.வேளாண்மை

B.முக்கிய இந்து கோவில்கள்

C.உள்ளூர் அரசு

D.பெண்கள்

3.Who constituted a 7-member Committee to enquire into the complaints of post-poll violence in the state of West Bengal?

A.Carl Lewis

B.Laurel Hubbard

C.Arun Mishra

D.Upasana Kamineni

மேற்கு வங்காள மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை புகார்களை விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது யார்?

A.கார்ல் லூயிஸ்

B.லாரல் ஹப்பார்ட்

C.அருண் மிஸ்ரா

D.உபாசனா காமினேனி

4.Who has been inducted as Ambassador of Forest Frontline Heroes in WWF?

A.Carl Lewis

B.Laurel Hubbard

C.Arun Mishra

D.Upasana Kamineni

WWF இல் வன முன்கள வீரர்களின் தூதராக யார் அறிவிக்கப்பட்டுள்ளார்?

A.கார்ல் லூயிஸ்

B.லாரல் ஹப்பார்ட்

C.அருண் மிஸ்ரா

D.உபாசனா காமினேனி

5.World Hydrography Day is observed every year on

A.June 21

B.June 22

C.June 23

D.June 24

உலக நீராய்வியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூன் 21

B.ஜூன் 22

C.ஜூன் 23

D.ஜூன் 24

6.Recently, Indian Navy and Japanese Maritime Self-Defense Force (JMSDF) participated in a joint naval exercise at

A.Pacific Ocean

B.Atlantic Ocean

C.Indian Ocean

D.Arctic Ocean

சமீபத்தில், இந்திய கடற்படை மற்றும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படை (JMSDF) இணைந்து எங்கு கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்றன?

A.பசிபிக் பெருங்கடல்

B.அட்லாண்டிக் பெருங்கடல்

C.இந்திய பெருங்கடல்

D.ஆர்டிக் பெருங்கடல்

7.Who is the first transgender athlete to compete at an Olympic Games?

A.Carl Lewis

B.Laurel Hubbard

C.Arun Mishra

D.Upasana Kamineni

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை விளையாட்டு வீரர் யார்?

A.கார்ல் லூயிஸ்

B.லாரல் ஹப்பார்ட்

C.அருண் மிஸ்ரா

D.உபாசனா காமினேனி

         

DOWNLOAD  Current affairs -22 JUNE- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: