TNPSC CURRENT AFFAIRS PDF –29th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 29 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.To bring about transparency and efficiency in the registration processes, Minister for Commercial Taxes, Registration and Stamp Law P. Moorthy has called for certain reforms. They include online payment of registration fee by registrants, adherence to guideline value irrespective of the last registered price of property in the same survey number, and the launch of a grievances cell for the public to file complaints on phone, WhatsApp and email.

பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டுவரும் நோக்கில் சில சீர்திருத்தங்களை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். அவை, இணையவழியில் பதிவு கட்டணம் செலுத்துதல், சொத்தின் வழிகாட்டுதல் மதிப்பைக் கடைப்பிடித்தல் மற்றும் தொலைபேசி, வாட்ஸ்அப், மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் புதிதாக கட்டுப்பாட்டு அறை திறத்தல் ஆகும். இங்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India

2.Prime Minister Narendra Modi paid tributes to former Prime Minister PV Narasimha Rao on his 100th birth anniversary (June 28, 2021).

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அவர்களின் 100 வது பிறந்த நாளை (ஜூன் 28, 2021) நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினார்.

3.The Union Minister of Health & Family Welfare Dr. Harsh Vardhan chaired the 29th meeting of the high-level Group of Ministers (GoM) on COVID-19 by a video-conference.

கோவிட்-19 குறித்த உயர்மட்ட அமைச்சர்கள் குழுவின் (GoM) 29 வது கூட்டத்திற்கு வீடியோ-கான்ஃபரன்சிங் மூலம் ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் தலைமை தாங்கினார்.

4.President of India, in exercise of the powers conferred by Article 223 (Appointment of acting Chief Justice of High Court) of the Constitution of India, appointed Justice Ravi Vijaykumar Malimath, senior-most Judge of Himachal Pradesh High Court, to perform the duties of the office of the Chief Justice of that High Court consequent upon the retirement of Justice Lingappa Narayana Swamy.

இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி லிங்கப்பா நாராயண சுவாமி சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 223 (உயர்நீதிமன்றத்தின் செயல்படும் தலைமை நீதிபதி நியமனம்) வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான ரவி விஜய்குமார் மாலிமத் அவர்களை தலைமை நீதிபதியாக பணியாற்ற இந்திய குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

5.The Government has been celebrating National Statistics Day on the birth anniversary of Late Prof. P C Mahalanobis, on 29th June, in recognition of his invaluable contribution in establishing the National Statistical System.

தேசிய புள்ளிவிவர முறையை நிறுவுவதில் பேராசிரியர் P C மஹலானோபிஸ் செய்த மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்த தினமான ஜூன் 29 ஆம் தேதியை தேசிய புள்ளிவிவர தினமாக இந்திய அரசு கொண்டாடி வருகிறது.

International 

6.Engineers India Limited (EIL) Chairman & Managing Director (CMD), RK Sabharwal has been honoured with the highest civilian award of Mongolia ‘The Order of Polar Star’ by His Excellency for recognising his outstanding contribution towards the establishment of the first-ever oil refinery in Mongolia.

பொறியியலாளர்கள் இந்தியா லிமிடெட் (EIL) தலைவரும் நிர்வாக இயக்குநருமான (CMD), ஆர்.கே.சபர்வால், மங்கோலியாவின் மிக உயர்ந்த விருதான ‘தி ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார்’ விருதை பெற்றுள்ளார். மங்கோலியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிறுவியதில் அவர் செய்த பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

7.Turkmenistan’s capital Ashgabat has been named the most expensive city to live in for expatriates, according to Mercer’s 2021 Cost of Living city ranking. The two other cities following Ashgabat are Hong Kong and Beirut.

மெர்சர் 2021 – நகரங்களின் அன்றாட வாழ்க்கை  செலவுகள் தரவரிசைப்படி, துர்க்மெனிஸ்தானின் தலைநகரான அஷ்காபாத் வெளிநாட்டினர் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக பெயரிடப்பட்டுள்ளது. அஷ்காபாத்தைத் தொடர்ந்து வரும் மற்ற இரண்டு நகரங்கள் ஹாங்காங் மற்றும் பெய்ரூட் ஆகும்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the Minister for Commercial Taxes, Registration and Stamp Law in Tamil Nadu?

A.Thiagarajan

B.Moorthy

C.Ramachandran

D.Periyakaruppan

தமிழகத்தில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் யார்?

A. தியாகராஜன்

B.மூர்த்தி

C.ராமச்சந்திரன்

D.பெரியகருப்பன்

2.Who is the Chairperson of the Group of Ministers (GoM) on COVID-19?

A.Prime Minister

B.Home Minister

C.Minister of Health

D.Minister of Cooperation

கோவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழுவின் (GoM) தலைவர் யார்?

A.பிரதமர்

B.உள்துறை அமைச்சர்

C.சுகாதாரத்துறை அமைச்சர்

D.கூட்டுறவுத்துறை அமைச்சர்

3.Former Prime Minister PV Narasimha Rao’s 100th birth anniversary was celebrated on

A. June 27, 2021

B. June 28, 2021

C.June 29, 2021

D.June 30, 2021

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் 100 வது பிறந்த நாள் எந்த தேதியில் கொண்டாடப்பட்டது?

A.ஜூன் 27, 2021

B.ஜூன் 28, 2021

C.ஜூன் 29, 2021

D.ஜூன் 30, 2021

4.Which article of the Indian Constitution provides for the appointment of acting Chief Justice of the High Court?

A.123

B.143

C.213

D.223

உயர்நீதிமன்றத்தின் ‘செயல்’ தலைமை நீதிபதியை நியமிக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த சரத்து அதிகாரம் வழங்குகிறது?

A.123

B.143

C.213

D.223

5.National Statistics Day is celebrated on

A.June 27

B.June 28

C.June 29

D.June 30

தேசிய புள்ளிவிவர தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

A.ஜூன் 27

B.ஜூன் 28

C.ஜூன் 29

D.ஜூன் 30

6.`The Order of Polar Star’ is the highest civilian award of which country?

A.South Korea

B.Turkmenistan

C.Mongolia

D.Japan

‘தி ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார்’ எந்த நாட்டின் மிக உயர்ந்த விருதாகும்?

A.தென் கொரியா

B.துர்க்மெனிஸ்தான்

C.மங்கோலியா

D.ஜப்பான்

7.Which is the most expensive city to live in for expatriates, according to Mercer’s 2021 Cost of Living city ranking?

A.Hong Kong

B.Beirut

C.Delhi

D.Ashgabat

மெர்சர் 2021 – நகரங்களின் அன்றாட வாழ்க்கை செலவுகள் தரவரிசைப்படி, வெளிநாட்டவர்கள் வாழ மிகவும் விலையுயர்ந்த நகரம் எது?

A.ஹாங்காங்

B.பெய்ரூட்

C.டெல்லி

D.அஷ்காபாத்

8.Who has been recently honoured with ‘The Order of Polar Star’ award?

A.RK Sabharwal

B.Nalin Shinghal

C.M R Kumar

D.Alok Sharma

சமீபத்தில் ‘தி ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார்’ விருது பெற்றவர் யார்?

A.ஆர்.கே.சபர்வால்

B.நலின் ஷிங்கால்

C.எம் ஆர் குமார்

D.அலோக் சர்மா

       

DOWNLOAD  Current affairs -29 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: