TNPSC CURRENT AFFAIRS PDF –7th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 7 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The Tamil Nadu government has constituted green committees at the State and district levels to regulate the cutting and planting of trees in public lands and public offices following a Madras High Court directive. Environment, Climate Change and Forests Department Secretary Supriya Sahu will be the chairperson of the state committee.The Principal Chief Conservator of Forests and head of the Forest Department will be the member secretary. The Secretaries of Industries, Rural Development, Municipal Administration, Revenue, Tourism, PWD, Highways and the DGP will be the members. The Collector will be the chairperson of the district committee, with the district forest officer as the member secretary.

அரசு நிலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள மரங்களை வெட்டவும், அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் உரிய அனுமதிகளை வழங்குவதற்கு பசுமைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்.30ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநில பசுமைக் குழுவானது, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், பருவகால மாறுபாடு மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாகு தலைமையில் அமைக்கப்படுகிறது. இக்குழுவில், தொழில், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய், சுற்றுலா, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளின் செயலாளர்கள், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உறுப்பினர் செயலாளராக இருப்பார்.

அதேபோல், மாவட்ட அளவிலான பசுமை குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்படுகின்றன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, வருவாய், நெடுஞ்சாலை, பொதுப்பணி, அறநிலையம், தொழில்துறை உயர் அதிகாரிகள் அல்லது பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் சார்பில் இரு வல்லுநர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மாவட்ட வன அதிகாரி உறுப்பினர் செயலராக இருப்பார்.

2.Five more sportspersons from Tamil Nadu have qualified for the Tokyo Olympics, in addition to the seven who have already qualified. They are Revathi Veeramani, SubhaVenkatesan and S. Dhanalakshmi (4 x 400 m mixed relay) and Arokia Rajiv and Naganathan Pandi (4 x 400 m relay).

ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பேர் தகுதி பெற்றுள்ள நிலையில், மேலும் ஐந்து தடகள வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர், அவர் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் மற்றும் எஸ்.தனலட்சுமி (4 x 400 மீ கலப்பு ஓட்டம்) மற்றும் அரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி (4 x 400 மீ ஓட்டம்).

India

3.Recently, the Justice Department commemorated the milestone of crossing 9 lakh beneficiaries under its Tele-Law programme through Common Service Centres. It was launched by the Ministry of Law and Justice in collaboration with the Ministry of Electronics and Information Technology (MeitY) in 2017 to address cases at the pre–litigation stage.

அண்மையில், நீதித்துறை தனது தொலை-சட்டசேவை திட்டத்தின் கீழ் 9 லட்சம் பயனாளிகளை கடந்துள்ளது. இத்திட்டம் 2017 ஆம் ஆண்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) ஒத்துழைப்புடன் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பொது சேவை மையங்கள் (CSCs) மூலம் வழக்குக்கு முந்தைய சட்ட சேவைகளை வழங்குகிறது.

4.Eight states on July 6 got new governors as President Ram Nath Kovind made several appointments and changes. The new governors of the eight states are:

    1. P.S. Sreedharan Pillai: Goa

    2. Satyadev Narayan Arya: Tripura

    3. Ramesh Bais: Jharkhand

    4. Bandaru Dattatreya: Haryana

    5. Thaawarchand Gehlot: Karnataka

    6. Hari Babu Kambhampati: Mizoram

    7. Mangubhai Chhaganbhai Patel: Madhya Pradesh

    8. Rajendra Vishwanath Arlekar: Himachal Pradesh

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் புது நியமனங்கள் மற்றும் மாற்றங்களைச் செய்துள்ளார். இதனால், எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் பொறுப்பேற்கவுள்ளனர். எட்டு மாநிலங்களின் புதிய ஆளுநர்கள்:

  1. பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை: கோவா

  2. சத்யதேவ் நாராயன் ஆர்யா: திரிபுரா

  3. ரமேஷ் பைஸ்: ஜார்கண்ட்

  4. பன்டாரு தத்தாத்ரேயா: ஹரியானா

  5. தாவர்சந்த் கெல்லாட்: கர்நாடகா

  6. ஹரி பாபு கம்பம்பதி: மிசோரம்

  7. மங்குபாய் சாகன்பாய் படேல்: மத்தியப் பிரதேசம்

  8. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: இமாச்சல பிரதேசம்

International 

5.The UK India Business Council (UKIBC) has released a report titled ‘Road to a UK-India Free Trade Agreement: Enhancing the Partnership and Achieving Self-reliance’.

‘இங்கிலாந்து-இந்தியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பாதை: கூட்டாண்மையை மேம்படுத்துதல் மற்றும் தற்சார்புடைமை அடைதல்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை இங்கிலாந்து இந்தியா வர்த்தக கவுன்சில் (UKIBC) வெளியிட்டுள்ளது.

6.The World Health Organization (WHO) has declared China as “malaria-free”.

உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவை “மலேரியா இல்லாத நாடு” என்று அறிவித்துள்ளது.

7.World Chocolate Day or International Chocolate Day is observed on 7th July every year.

உலக சாக்லேட் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the Chairperson of the State Green Committee?

A.Principal Chief Conservator of Forests

B.Chief Minister

C.Environment Secretary

D.Chief Secretary

மாநில பசுமைக் குழுவின் தலைவர் யார்?

A.முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்

B.முதலமைச்சர்

C.சுற்றுச்சூழல் செயலாளர்

D.தலைமைச் செயலாளர்

2.Who is the Member Secretary of the District Green Committee?

A.District Collector

B.District Forest Officer

C.Member of Parliament

D.Member of Legislative Assembly

மாவட்ட பசுமைக் குழுவின் உறுப்பினர் செயலாளர் யார்?

A.மாவட்ட ஆட்சியர்

B.மாவட்ட வன அலுவலர்

C.பாராளுமன்ற உறுப்பினர்

D.சட்டமன்ற உறுப்பினர்

3.Tele-Law services programme was launched in

A.2016

B.2017

C.2018

D.2019

தொலை-சட்ட சேவைகள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A.2016

B.2017

C.2018

D.2019

4.Who is the new governor of Goa?

A.P.S. Sreedharan Pillai

B.Sathyadev Narayan

C.Ramesh Bais

D.Hari Babu

கோவா மாநிலத்தின் புதிய ஆளுநர் யார்?

A.பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை

B.சத்யதேவ் நாராயண்

C.ரமேஷ் பைஸ்

D.ஹரி பாபு

5.A report titled ‘Road to a UK-India Free Trade Agreement: Enhancing the Partnership and Achieving Self-reliance’ was recently launched by

A.UKIBC

B.USIBC

C.UNESCO

D.UNICEF

இங்கிலாந்து-இந்தியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பாதை: கூட்டாண்மையை மேம்படுத்துதல் மற்றும் தற்சார்புடைமை அடைதல்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை சமீபத்தில் எந்த அமைப்பால் வெளியடப்பட்டது?

A.UKIBC

B.USIBC

C.UNESCO

D.UNICEF

6.Which country was recently declared as malaria-free by WHO?

A.India

B.China

C.Pakistan

D.Nepal

சமீபத்தில், உலக சுகாதார அமைப்பால் மலேரியா இல்லாத நாடு என்று அறிவிக்கப்பட்ட நாடு எது?

A.இந்தியா

B.சீனா

C.பாகிஸ்தான்

D.நேபாளம்

7.Who is the new governor of Jharkhand?

A.P.S. Sreedharan Pillai

B.Sathyadev Narayan

C.Ramesh Bais

D.Hari Babu

ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநர் யார்?

A.பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை

B.சத்யதேவ் நாராயண்

C.ரமேஷ் பைஸ்

D.ஹரி பாபு

8.World Chocolate Day is observed every year on

A.July 5

B.July 6

C.July 7

D.July 8

ஒவ்வொரு ஆண்டும் உலக சாக்லேட் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூலை 5

B.ஜூலை 6

C.ஜூலை 7

D.ஜூலை 8

DOWNLOAD  Current affairs -7 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: