Daily Current Affairs – 2019 Sep 10 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(10 Sep 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  10 Sep 2019

முக்கியமான நாட்கள்

 

செப்டம்பர் 10 -உலக தற்கொலை தடுப்பு தினம்[ World Suicide Prevention Day (WSPD)]

  • உலக தற்கொலை தடுப்பு தினம் (WSPD) செப்டம்பர் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது . இந்த தினத்தை தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கத்தால் (IASP) ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • தற்கொலையைத் தடுக்க முடியும் என்று உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.

தேசிய செய்திகள்

 

சிறந்த தூய்மையான இடம்

மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவின் இரண்டாவது “சிறந்த தூய்மையான இடமாக” (சுத்தமான இடம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையரான எஸ்.விசாகன் சமீபத்தில் புது டில்லியில் மத்திய ஜல் சக்தி அமைச்சரான கஜேந்திர சிங் செகாவத்திடமிருந்து இதற்கான விருதைப் பெற்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட “சிறந்த தூய்மையான இடங்கள்” என்ற  முன்முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசால் பத்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாநாடு

 

ஹெலிகாப்டர் உச்சி மாநாடு – 2019 

  • உத்தர காண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள சஹஸ்த்ரதாரா ஹெலிடிரோம் என்ற இடத்தில் நாட்டின் முதலாவது ஹெலிகாப்டர் உச்சி மாநாட்டை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
  • இந்த உச்சி மாநாடானது “ஹெலிகாப்டர்கள் மூலம் இணைப்பை விரிவுபடுத்துதல்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப் பட்டது.
  • மேலும் இந்த உச்சி மாநாட்டில் (Indian Air Force – IAF) ‘மெடேவக்கில் (தேசிய அளவில் மருத்துவ முகாம்) இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்களின் பங்கு’ குறித்து பேசுவதற்காக இந்திய விமானப் படையும் அழைக்கப்பட்டது.

மரக்கோதுமை பற்றிய சர்வதேசக் கருத்தரங்கு

  • மரக்கோதுமை பற்றிய நான்கு நாள் நடைபெறக் கூடிய சர்வதேசக் கருத்தரங்கானது மேகாலயாவில் நடத்தப்பட்டது.
  • இக்கருத்தரங்கின் கருப்பொருள் “உடல்நலம் மற்றும் ஊட்டச் சத்துப் பாதுகாப்பிற்கான உணவு முறைகளை பல்வகைப்படுத்துதல்” என்பதாகும்.

குறிப்பு 

  • மரக்கோதுமை ஒரு குறைந்த உள்ளீட்டுப் பயிராகும். இது குறைசத்து கொண்ட மண்ணில் (தரம் குறைந்த மண்ணில்) கூட அதிக மகசூலைத் தருகின்றது.
  • இது மண்ணிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை சேர்க்கின்றது. எனவே இது ஒரு நல்ல நிலவளங் காப்புப் பயிர்  அல்லது சுழற்சிப் பயிராக இருக்கின்றது.
  • இது பெரும்பாலான தானிய வகை நிலவளங் காப்புப் பயிர்களை விட சிறந்த முறையில் மண்ணிலிருந்துப் பாஸ்பரஸைப் பிரித்தெடுக்கின்றது.

தரவரிசை

இந்தியாவின் தங்க இருப்பு

  • மொத்தத் தங்க இருப்பின் அடிப்படையில் இந்தியா நெதர்லாந்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
  • உலக தங்க ஆணையத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் மொத்தம் 618.2 டன்கள் தங்கம் இருப்பு உள்ளது.
  • இந்தப் பட்டியலில் 8,133.5 டன்கள் தங்க இருப்புடன் அமெரிக்கா முதலிடத்திலும் 3,366.8 டன்கள் தங்க இருப்புடன் ஜெர்மனி இரண்டாம் இடத்திலும் உள்ளன.
  • சர்வதேச நாணய நிதியமானது 2,451.8 டன்கள் தங்கத்துடன் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அறிவியல் செய்திகள்

விக்ரம் லேண்டர்

  • திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தின் (Space Physics Laboratory – SPL) விஞ்ஞானிகள் சந்திரயான் 2இன் விக்ரம் என்ற பெயர் கொண்ட லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
  • சந்திரயன் 2ல் மொத்தம் உள்ள 14 விண்வெளி ஆய்வுக் கருவிகளில் நான்கு விண்வெளி ஆய்வுக் கருவிகள் விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்தவையாகும்.
  • SPL என்பது விக்ரம் சாரபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் முதன்மை அறிவியல் ஆய்வகமாகும்.
  • இது புவியின் வளிமண்டலத்தின் கீழ் மற்றும் மேல் அடுக்கு, அயன மண்டலங்கள் & காந்த மண்டலங்கள் மற்றும் பிற சூரிய மண்டல அமைப்புகளில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றது.

விளையாட்டு செய்திகள்

அமெரிக்க ஓபன் 2019 போட்டி  

மகளிர் பிரிவு

  • 2019 ஆம் ஆண்டின் அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 19 வயதான பியான்கா வனேசா ஆண்ட்ரெஸ்கு என்பவர் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் கனடிய வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.
  • 1968 ஆம் ஆண்டிலிருந்து, ஓபன் போட்டி சகாப்தத்தில் அறிமுகப் போட்டியில் அமெரிக்க ஓபனை வென்ற முதல் பெண்மணி ஆண்ட்ரெஸ்கு ஆவார்.
  • இது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகும்.

ஆடவர் பிரிவு

  • ஸ்பானிய வீரரான ரஃபேல் நடால் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி தனது நான்காவது அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார்.
  • இது அவரது 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
  • சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை (20) வைத்துள்ளார்.

வெனிஸ் சர்வதேசத் திரைப்படத் திருவிழா

  • 76வது வெனிஸ் சர்வதேசத் திரைப்படத் திருவிழா இத்தாலியின் வெனிஸில் நடத்தப்பட்டது.
  • இது 1932இல் தொடங்கப்பட்டது. இது உலகின் மிகப் பழமையான திரைப்படத் திருவிழா ஆகும்.
  • ‘ஓரிசோன்டி’ (ஹொரைஸன்ஸ்) போட்டிப் பிரிவின் ஒரு பகுதியாக சனல் குமார் சசிதரனால் இயக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான “சோழா” என்ற திரைப்படமும் இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது.
  • சிறந்த படத்திற்கான கோல்டன் லயன் விருதானது டோட் பிலிப்ஸால் இயக்கப்பட்ட ‘ஜோக்கர்’  என்ற படத்திற்கு வழங்கப்பட்டது.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- Sep – 10]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: