Daily Current Affairs – 2019 Sep 9 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(9 Sep 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  9 Sep 2019

விளையாட்டு செய்திகள்

 

கார்கில் முதல் கோஹிமா வரையிலான அல்ட்ரா மராத்தான்

 • கார்கிலிலிருந்து கோஹிமா வரையிலான  4,500 கி.மீ தூரம் செல்லும் ‘கார்கிலில் இருந்து கோஹிமா (கே 2 கே): புகழ்பெற்ற ஓட்டம் ’ என்ற அல்ட்ரா மராத்தானை இந்திய விமானப் படையானது ஏற்பாடு செய்து வருகிறது.
 • இது ‘விஜய் திவாஸ்’ அல்லது ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்ற நடவடிக்கையின்   (வெற்றிகரமாக நடத்தப்பட்ட விஜய் நடவடிக்கையின் பெயர்) 20ஆம் ஆண்டை நினைவு கூறுதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • புதுடெல்லியில் வாயு பவனில் நடைபெற்ற விழாவில் விமானப்படை தலைமைத் தளபதியான  B.S தனோவா இந்த மராத்தான் ஓட்டத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
 • இந்த தனித்துவமான கார்கில் முதல் கோஹிமா வரையிலான அல்ட்ரா மாராத்தான் பயணமானது வரும் செப்டம்பர் 21 அன்று தொடங்கி நவம்பர் 6 ஆம் தேதி நிறைவடையும்.
 • இது ஜம்மு-காஷ்மீரில் உள்ள திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னம் மற்றும் நாகாலாந்தின் கோஹிமாவில் உள்ள கோஹிமா போர் கல்லறை ஆகியவற்றிலிருந்துத் தொடங்கும்.

மாநாடு

மேற்கு விமானப் படை கட்டுப்பாட்டக கமாண்டோக்கள் மாநாடு 2019

 • 2019 ஆம் ஆண்டின் மேற்கு விமானப்படை கட்டுப்பாட்டக கமாண்டோக்களின் இரண்டு நாள் மாநாடு  ஆனது புதுடில்லியில் நடத்தப்பட்டது.
 • விமானப் படை தலைமைத் தளபதியான B.S தனோவா இம்மாநாட்டின் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
 • செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் போர் கருவிகளின் உயர் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பயிற்சிகளின் முக்கியமான பகுப்பாய்வு குறித்த விவாதங்கள் இம்மாநாட்டில் நடைபெற்றன.

2019 தெற்காசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு

 • ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசரக் கால நிதியமானது (யுனிசெப்) இலங்கை நாடாளுமன்றத்துடன் இணைந்து இரண்டு நாள்கள் நடைபெறும் 2019 ஆம் ஆண்டின்  யுனிசெப் குழந்தைகள் உரிமைகள் ஒப்பந்தம் மீதான தெற்காசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டை நடத்தியது.இது கொழும்பு நகரில் நடத்தப்பட்டது.
 • குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகளை மேம்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
 • இது குழந்தையின் உரிமைகள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட 30வது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகிறது.
 • நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து குழந்தைகளுக்காக யுனிசெப் நடத்திய 3வது மாநாடு இதுவாகும்.

திட்டம் 

நீலச் சாலைத் திட்டம் 

 • கத்தாரில் உள்ள பொதுப் பணித் துறை ஆணையமானது தோஹாவில் ஒரு முன்னோடித் திட்டமான “குளிர்ப் பாதை” என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
 • சாலைகளில் உள்ள தாரின் வெப்பநிலையைக் குறைக்க ஒரு கிரையோஜெனிக் பொருளைப் பயன்படுத்துவது இத்திட்டத்தில் அடங்கும்.
 • சூரிய ஒளியில் 50 சதவிகிதத்தைப் பிரதிபலிக்கும் இந்த ‘குளிர்ப் பாதையானது’  ஒரு முதன்மை பொருளின் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து உள்ள பொருள்களின் மூன்று அடுக்குகள் சூரியக் கதிர்வீச்சினால் உறிஞ்சப்படும் வெப்பத்தைக் குறைக்கின்றன.

விருதுகள்

 

வருடாந்திர ஆசியச் சாதனையாளர் விருதுகள்

 • 19வது வருடாந்திர ஆசியச் சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது.
 • வேதாந்த வளத்தின் நிறுவனத் தலைவர் அனில் அகர்வாலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
 • 19வது வருடாந்திர ஆசிய சாதனையாளர் விருதுகளுக்கான கருத்துரு, ‘உள்ளடக்கம்’ என்பதாகும்.

தேசிய செய்திகள்

ராம் ஜெத்மலானி மறைவு

 • நீதித்துறையில் புகழ் பெற்றவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியாவின் சிறந்த குற்றவியல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி சமீபத்தில் காலமானார்.
 • இவர் வடமேற்கு மும்பை மக்களவை தொகுதியில் 1977 மற்றும் 1980 ஆண்டுகளில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
 • இவர் 1988 ஆம் ஆண்டில் முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் மத்திய சட்ட அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
 • மேலும் இவர் 2010 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கூட்டமைப்பின்  தலைவராகவும் பணியாற்றினார்.

ரோஹித்4ரைனோஸ் (Rohit4Rhinos) பிரச்சாரம்

 • உலக வனவிலங்கு நிதியம் மற்றும் அனிமல் பிளானட் (Animal Planet) உடன் இணைந்து இந்தியாவின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ரோஹித்4ரைனோஸ் என்ற பிரச்சாரத்தைத்  தொடங்கியுள்ளார்.
 • பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் (அ) இந்திய காண்டாமிருகத்தினை பராமரிக்கும் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதலே இதன் நோக்கமாகும்.
 • உலக காண்டாமிருக நாளான செப்டம்பர் 22 இன் நினைவாக அனிமல் பிளானட் சேனலில் இந்த பிரச்சாரம் தொடங்கப்படவுள்ளது.
 • வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும், இனப்பெருக்கக் கால நோய்களினால் ஏற்படும் அதிக அளவு இறப்பு போன்ற பலவிதமான அச்சுறுத்தல்களை இந்தக் காண்டாமிருகங்கள் எதிர்கொள்கின்றன.
 • நேபாளின் தராய் புல்வெளிகள், உத்திரப் பிரதேசத்தின் வட பகுதி, பீகாரின் வட பகுதி, மேற்கு  வங்காளத்தின் வட பகுதி மற்றும் அசாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குகளில் மட்டுமே இவை வாழ்கின்றன.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- Sep – 9]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: