Daily Current Affairs in Tamil October 1 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(1 oct 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : Oct 1 2019

முக்கியமான நாட்கள் 

 

சர்வதேச முதியோர் தினம் oct 1

முதியோர்களை தவிக்க விடாமல் ஆதரவளித்து கவனித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அக்., 1ல் சர்வதேச முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘முதியோருக்கு சமவாய்ப்பு வழங்குதல்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.

 

விளையாட்டு செய்திகள் 

 

உலக தடகளப் போட்டி

 • கத்தாரின் தோஹாவில் உலக தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.ஆடவர் பிரிவு 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
 •  23 வயதான அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் 9.76 விநாடிகளில் ஓடி முதலிடம் பிடித்தார். மற்றொரு அமெரிக்க வீரரான ஜஸ்டின் காட்லின் 9.89 விநாடிகளில் ஓடிவந்து 2-வது இடத்தையும், கனடா வீரர் ஆந்த்ரே டி கிராசி 9.90 விநாடிகளில் ஓடி வந்து 3-வது இடத்தையும் பிடித்தனர்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ‘

 •  தோஹாவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்  ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முதல் இந்திய பெண் அனு ராணி தகுதி பெற்றுள்ளார்.

குறியீடு

கல்வி தர குறியீடு

 • மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு 2016-17-ம் ஆண்டுக்கான கல்வி தர குறியீட்டை வெளி யிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.கேரளாவில் பள்ளிக் கல்வியின் தரம் 76.6 சதவிகிதமாக உள்ளது என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
 •  ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், அசாம், மகாராஷ்டிரா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகம் 8-வது இடத்தில் உள்ளது.
 • தமிழகத்தைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஹரியாணா, ஒடிசா, சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பிஹார், பஞ்சாப், காஷ்மீர் ஆகியவை உள்ளது உத்தர பிரதேசம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
 • சிறிய மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திரிபுரா, கோவா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மிசோரம், அருணாச்சல பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 
 • யூனியன் பிரதேசங்கள் பட்டியலில், சண்டிகர் முதலிடத் தில் உள்ளது. ஹவேலி, டெல்லி, புதுச்சேரி, டையூ-டாமன், அந்த மான் தீவுகள், லட்சத் தீவுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
 • கற்றல் அணுகலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கற்றல் முடிவுகளில் சிறந்த பலனை எட்டிய மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தையும் சிறந்த உள்கட்டமைப்பில் ஹரியாணா முதலிடத்தையும் பெற்றுள்ளன.

 

விருதுகள் 

 

 குளோபல் டீச்சர் விருது – 2019 

 • பீட்டர் மொகயா தபிச்சி (37), கென்யா நாட்டைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர், பிரான்சிஸ்கன் துறவியுமான இவர் ப்வானி கிராமத்தில் உள்ள கெரிகோ மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் இந்த ஆண்டுக்கான ‘குளோபல் டீச்சர் 2019’ சர்வதேச விருதை வென்றுள்ளார். இந்த விருதின் மதிப்பு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
 • இவர் சிறந்த ஆசிரியர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்; 2020ல் இந்த விருதுக்காக அவர்கள் பரிந்துரைக்கப்பட வேண்டுமென உலகின் சிறந்த ஆசிரியருக்கான’குளோபல் டீச்சர் விருது 2019′ என்று  தெரிவித்து உள்ளார்.

 

காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது

 • கள்ளச்சாராய ஒழிப்பு பணியில், சிறப்பாக செயல்பட்ட, ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு, ‘காந்தியடிகள் காவல் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
 • முதல்வர் உத்தரவின்படி, திருப்பூர் மாநகரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரமோகன்; திருச்சி மத்திய புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன்; கடலுார் மாவட்டம், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை.விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு, எஸ்.ஐ., அழகிரி; கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலைய ஏட்டு பார்த்திபநாதன் ஆகியோருக்கு, காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 • அவர்களுக்கு, ஜனவரி, 26, குடியரசு தின விழாவில், முதல்வர் விருது வழங்குவார். விருதுடன், பரிசுத் தொகையாக, ஒவ்வொருவருக்கும், 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஐஐடி விருது 

 • ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற56-வதுபட்டமளிப்பு விழாவில்,2015-19-ம் ஆண்டு வரை கணினி இளநிலை அறிவியல் பயிலும்மாணவியானகவிதா,’கல்வியில் சிறந்துவிளங்கும்மாணவி’ என்ற ஜனாதிபதி விருது, பாரத ரத்னாவிஸ்வேஸ்வரையா விருது, ரவிச்சந்திரன் நினைவுப் பரிசு என்ற மூன்று விருதுகளைப்பெற்றுள்ளார்.
 • இத்தனை வருட ஐஐடி வரலாற்றில், ஒரு பெண் மூன்று விருதுகளைப் பெறுவது இதுவேமுதல் முறையாகும்.

கோளுக்கு, பிரபல வாய்ப்பாட்டு கலைஞர் பெயர் 

 • சூரிய குடும்பத்தில், செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே, ‘ஆஸ்ட்ராய்டு’ எனப்படும் சிறிய கோள், 2006, நவ., 11ல் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில், கேடலினா வானியல் ஆய்வுக் குழு, இதைத் கண்டுபிடித்தது.
 • இக்கோளுக்கு புதிய சிறிய கோளுக்கு, பிரபல வாய்ப்பாட்டு கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ், 89, பெயரைச் சூட்டி, ஐ.ஏ.யு., எனப்படும், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி சங்கம் கவுரவித்துள்ளது.இவ்வாறு புதிதாக கண்டுபிடிக்கப்படும் கோள்களுக்கு, ஆராய்ச்சியாளர்கள் பெயரை சூட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. 
 • ஹரியானா மாநிலம், ஹிசாரைச் சேர்ந்தவரான, பண்டிட் ஜஸ்ராஜ், பிரபல வாய்ப்பாட்டு கலைஞர். பத்ம பூஷண், பத்மவிபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது என, பல விருதுகளை பெற்றவர்.

உலக செய்திகள் 

டாக்ஸிங் சர்வதேச விமான நிலையம்

 • பெய்ஜிங்கில் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையத்தை, சீன அதிபர் ஜி ஜின்பிங் திறந்துவைத்தார். இதுவே, உலகின் மிகப்பெரிய சிங்கிள் டெர்மினல் விமான நிலையமாகும்.
 • 11 மில்லியன் சதுர அடியில், நட்சத்திர வடிவிலான இந்த விமான நிலையத்தை இராக்-பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் ஜஹா ஹதீத் வடிவமைத்துள்ளார்.இது, சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

 

ஒப்பந்தம் 

அமெரிக்கா & பிரிட்டன் ஒப்பந்தம் 

 • அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தத்தின்படி, முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் பயனர்கள் தொடர்பான குறியாக்க தகவல்களை பிரட்டிஷ் காவல்துறையிடம் அந்த நிறுவனங்கள் வழங்க வ‍ேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
 • தீவிரவாதம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை போன்ற மோசமான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவும்பொருட்டு இந்தத் தகவல்கள் கோரப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

 

அறிவியல் செய்திகள் 

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை

 உலகிலேயே அதிவேகத்தில் செல்லக் கூடிய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்தியா – ரஷியா கூட்டு தயாரிப்பான ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு வேகமாக செல்லும் பிரமோஸ் 2.5 டன் எடை கொண்டது. இது, 290 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தகர்க்கும். சுகோய் விமானத்தில் பொருத்தப்படும் மிக அதிக எடை கொண்ட ஏவுகணை பிரமோஸ் ஆகும்.

நியமனங்கள் 

இந்திய விமானப்படை புதிய தளபதி 

 • இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா பதவி ஏற்றார்.
 • இதற்க்கு முன்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் தளபதியாக பதவி வகித்து வந்த பிரேந்தர் சிங் தனோவா பணியில் இருந்து ஓய்வு பெற்றார்
 • 1978ம் ஆண்டு இந்திய விமானப்படையில் போர் விமானியாக இணைந்த பதாரியா, பல்வேறு போர் விமானங்களை திறம்பட இயக்கியவர். விமானங்களை இயக்குவதிலும், வழிகாட்டுவதிலும், எதிரி விமானங்களை தாக்குவதிலும் ‘ஏ’ பிரிவு தகுதி பெற்றவர். இவர் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதால், தேசிய பாதுகாப்பு அகாடமி  ‘Sword of Honour’ என்ற பெருமையை வழங்கி சிறப்பித்துள்ளது.

ஐஎம்எப்.,பின் இந்திய செயல் இயக்குனர்

ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின், இந்திய செயல் இயக்குனர் பதவியில், பிரபல பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். 

இந்திய விமானப்படை துணைதளபதி

இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் சந்தீப் சிங், துணைதளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

விமானப்படை தளபதி

 இந்திய விமானப்படை தளபதியாக இருந்த, பி.எஸ். தனோவாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை ஓய்வு பெற்றார்.இதையடுத்து, விமானப்படையின், 26வது தளபதியாக ராகேஷ் குமார் சிங் பதுரியா(60), நேற்று பதவியேற்றார். தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று, 1980ல், விமானப்படையில் சேர்ந்த பதுரியா, ‘ஜாகுவார்’ படைப் பிரிவில் பல ஆண்டுகள் பணியாற்றினார். தன் திறமையான பணியால், ‘ஸ்வார்ட் ஆப் ஹானர்’ உள்ளிட்ட, பல விருதுகளை பெற்றுள்ளார். 

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- oct – 1]

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: