Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(2 oct 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : Oct 2, 2019
முக்கியமான நாட்கள்
Oct 2-லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள்
- 1904ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில் மொகல்சாரி என்ற கிராமத்தில் சாரதா ஸ்ரீவத்சவா ராம்துலாரி தேவி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமர் ஆவார்.இவர் தனது 16வயதில் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.
- இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சராக முதன்முதலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். அப்போது அங்கு நாட்டிலேயே முதல்முறையாக நடுத்துநர் பணிக்கு பெண்களை பணி அமர்த்திய பெருமை இவருக்கு உண்டு. அதன்பிறகு 1951ஆம் ஆண்டு இவர் மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றார்.
- 1961ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு தொடர்பான சந்தானம் குழுவை இவர் அமைத்தார். இந்த அமைப்பு தனது அறிக்கையை சமர்ப்பித்த போது லால் பகதூர் சாஸ்திரி இந்திய பிரதமராக இருந்தார்.இந்தியா சீனா இடையே டாஷ்கன்ட் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான போரைத் தடுத்தவர்.966ஆம் ஆண்டு பாரதத்தின் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் உயிரிழந்தார்.
Oct 2- மகாத்மா காந்தி பிறந்த நாள்
‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார்.
பிறப்பு: அக்டோபர் 02, 1869
இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர்
இறப்பு: ஜனவரி 30, 1948
நாட்டுரிமை: இந்தியன்
Oct 2-மிக்கெய்ல் கலாஷ்னிகோவ் நூறாவது பிறந்தநாள்
ஏகே-47 என்ற உலகப்புகழ் பெற்ற ஆயுதத்தைக் கண்டுபிடித்த மிக்கெய்ல் கலாஷ்னிகோவ் நூறாவது பிறந்தநாள் ரஷ்யாவில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது
Oct 2-காமராஜரின் நினைவு தினம்
தமிழகத்தின் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று.1954ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற காமராஜர் பின்னர் 1957 மற்றும் 1962ம் ஆண்டு தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று 3 முறை தொடர்ந்து முதல்வராக நீடித்தார். தனது ஆட்சி காலத்தில் ஏராளமான பள்ளிகளை திறந்ததோடு பள்ளி வேலை நாளை 180ல் இருந்து 200 ஆக அதிகரித்தார் காமராஜர். மதிய உணவு திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.அவரது தீவிரமான முயற்சியால் 7 சதவீதமாக இருந்த தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 37 சதவீதமாக அதிகரித்தது. அதனால் தான் ‘கல்விக் கண் திறந்த காமராஜர்’ என மக்கள் போற்றுகின்றனர்.55 ஆண்டுகள் நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த தினத்தில் விண்ணுலகம் புறப்பட்டார்.
தேசிய செய்திகள்
150 ரூபாய் நினைவு நாணயம்
- மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியின் போது 150 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
- முன்னதாக கடந்த ஜனவரி மாதம் சீக்கியர்களின் குருமார்களில் ஒருவரான குரு கோபிந்த் சிங்கின், 350வது பிறந்த தினத்தை முன்னிட்டு 350 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
ரஷிய நாடாளுமன்றத்தில் காந்தி பிறந்தநாள் விழா
- மகாத்மா காந்தி – லியோ டால்ஸ்டாய் இடையிலான நட்பை கொண்டாடும் வகையில் ரஷிய நாடாளுமன்றத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரஷியா இந்தியத் தூதர் – பாலா வெங்கடேஷ் வர்மா
விருதுகள்
தேசிய அளவில் சிறந்த மாநிலம் தமிழகத்திற்கு விருது
- அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஊரகத் தூய்மை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில், ஊரகத் தூய்மை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது.
திட்டம்
பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ – திட்டம்
- மாமல்லபுரத்தில் நெகிழிக்கான மாற்று பொருட்களை வழங்கி, ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற சிறப்பு முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. இதனையடுத்து நெகிழிக்கு மாற்றான பொருட்கள் குறித்து அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நெகிழிக்கு மாற்றான பொருட்கள் குறித்த முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
நியமனங்கள்
ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி
- ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதியை நீக்கியுள்ள பாகிஸ்தான் அரசு, முன்னாள் பிரதிநிதி முனிர் அக்ரமை புதிய பிரதிநிதியாக நியமித்துள்ளது.
- தற்போது புதிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள முனிர் அக்ரம், ஏற்கனவே 2002 முதல் 2008ம் ஆண்டு வரை ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியாக இருந்தவராவார்.
விளையாட்டு செய்திகள்
உலக தடகள போட்டி
- கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 200 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த நோவா லைல்ஸ் தங்க பதக்கம் வென்றார். பின் 800 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் டோனவின் பிரேசியா தங்கம் வென்றார்.
- ஆண்களுக்கான போல்வால்ட் போட்டியில், அமெரிக்க வீரர் சாம் கெனட்ரிக்ஸ் தங்கம் வென்றார். இதன் மூலம் அமெரிக்கா ஒரே நாளில் 3 தங்கம் வென்று முத்திரை பதித்தது.
- 5-வது நாள் போட்டி முடிவில் அமெரிக்கா 7 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் வென்று முதலிடத்தில் உள்ளது. சீனா 2 தங்கம், உள்பட 8 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜமைக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.
குழந்தை பெற்ற பிறகு தங்கம் வென்ற முதல் பெண்
- கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 32 வயது ஷெல்லி என்ற பெண் கலந்து கொண்டு 10.71 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
- இவர் இதற்கு முன் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் 2009 , 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றார்.மேலும் இவர் ஒலிம்பிக் போட்டியில் 2008 , 2012 ஆகிய ஆண்டுகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு தங்கம் வென்றார் .இதன் மூலம் குழந்தை பெற்ற பிறகு தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
உயரம் தாண்டுதல் போட்டி
- 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ஹோல்ம் 47.42 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
- பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ரஷியாவை சேர்ந்த மரியா லசிட்ஸ்கேனி, உக்ரைன் வீராங்கனை யரோஸ்லாவா மஹூசிக் ஆகியோர் தலா 2.04 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினர்.இதன் மூலம் உலக போட்டியில் தொடர்ச்சியாக 3 முறை (2015, 2017, 2019) தங்கம் வென்ற முதல் உயரம் தாண்டுதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஹாக்கி டெஸ்ட் போட்டி
- ஹாக்கி டெஸ்ட் தொடரில் நடப்பு உலக சாம்பியன் பெல்ஜியத்தை 2-ஆவது முறையாக வென்றது இந்திய அணி.
- ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு தயாராகும் வகையில் பெல்ஜியம், ஸ்பெயின் அணிகளுடன் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது இந்திய அணி.
- ஆன்ட்வொபில் நடைபெற்று வரும் இத்தொடரில் முதல் ஆட்டத்தில் பெல்ஜியத்தை வென்றது. அடுத்த 2 ஆட்டங்களில் உலகின் 8-ஆம் நிலை அணியான ஸ்பெயினை வீழ்த்தியது.
உலக ஜூனியா் கலப்பு அணி போட்டி
- ரஷியாவின் கஸான் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதல் ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கேம் கணக்கில் அமெரிக்காவையும், ஆா்மீனியாவை 5-0 என்ற கேம் கணக்கிலும் வீழ்த்தியது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் 4-1 என வெற்றி பெற்றது.
- உலக ஜூனியா் கலப்பு அணி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது.
- கடைசி ஆட்டத்தில் வலிமையான ஜப்பானை எதிா்கொள்கிறது இந்தியா.
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- oct – 2]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.