Daily Current Affairs in Tamil October 21 to 25 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(21 & 25 Oct 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : 21-25 Oct , 2019

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

முக்கியமான நாட்கள்

 

அக்டோபர் 21 – போலீஸ் நினைவு நாள்

  • தேசத்திற்காக போலிஸ் பணியாளர்களின் விசுவாசத்தையும் உயர்ந்த தியாகத்தையும் நினைவுகூற  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி போலிஸ் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அக்டோபர் 24 -உலக போலியோ தினம்

  • போலியோ நோய் மற்றும் அதன் ஒழிப்பு முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 24 அன்று உலக போலியோ தினம் கொண்டாடப்படுகின்றது.
  • உலக போலியோ தினம் 2019 இன் கருப்பொருள் “முன்னேற்றக் கதைகள்: உலக போலியோ தினத்திற்கான கடந்த காலமும் நிகழ்காலமும்”.

அக்டோபர் 24 – ஐக்கிய நாடுகள் தினம்

  • ஐ.நா. தினம் ஐ.நா. சாசனத்தின் 1945 இல் நடைமுறைக்கு வந்த ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்த ஸ்தாபக ஆவணத்தை பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட அதன் கையொப்பமிட்டவர்களில் பெரும்பாலோர் ஒப்புதல் அளித்ததன் மூலம், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
  • அக்டோபர் 24, 1948 முதல் ஐக்கிய நாடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1971 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை உறுப்பு நாடுகளால் இந்த நாள் பொது விடுமுறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

அக்டோபர் 24 – உலக அபிவிருத்தி தகவல் தினம்

  • அபிவிருத்தி பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்க 1972 ஆம் ஆண்டில் பொதுச் சபை உலக அபிவிருத்தி தகவல் தினத்தை நிறுவியது.
  • அன்றைய தேதி ஐக்கிய நாடுகள் சபையின் தினமான அக்டோபர் 24 உடன் ஒத்துப்போக வேண்டும் என்று சட்டமன்றம் முடிவு செய்து இந்த நாளை உலக அபிவிருத்தி தகவல் தினமாக அறிவித்தது .

அக்டோபர் 25 – சர்வதேச கலைஞர் தினம்

  • சர்வதேச கலைஞர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 25 அன்று கொண்டாடப்படுகிறது. கலைஞர்கள் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பை கவுரவிப்பதற்காக சர்வதேச கலைஞர் தினம் 2004 இல் தொடங்கப்பட்டது. 

நியமனங்கள்

 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

  • இந்தியத்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வயது மூப்பின் அடிப்படையில் தனக்கு அடுத்துப் பதவிக்கு வருபவரை நியமிக்க,  மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.
  • இந்தியத்  தலைமை நீதிபதி கோகாய்க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக நீதிபதி போப்டே உள்ளார்.
  • போப்டே முன்னாள் இந்திய தலைமை நீதிபதி முகமது ஹிதயத்துல்லாவுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் நாக்பூர் பிராந்தியத்தைச் சேர்ந்த இரண்டாவது நீதிபதியாகவும்,  இந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாகவும் இருப்பார்.

 

தேசிய செய்திகள்

 

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் நூற்றாண்டு ஆண்டு விழா

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council of Medical Research – ICMR) கீழ் உள்ள ஒரு பழமையான நிறுவனம் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆகும்.
  • ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (National Institute of Nutrition – NIN) சிறப்பு நினைவு அஞ்சல் முத்திரையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வெளியிட்டார்.
  • இந்திய அஞ்சல்துறையின் “கார்ப்பரேட் மை ஸ்டாம்ப்”  என்ற திட்டத்தின் கீழ் இந்த முத்திரை வெளியிடப் பட்டுள்ளது.
  • தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் நூற்றாண்டு ஆண்டு விழாவிற்கான கருப்பொருள் ‘ஊட்டச்சத்தின் மூலம் தேசத்தை மேம்படுத்துதல்’ என்பதாகும்.

குறிப்பு 

  • சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், சென்னை எம்.எம்.சியின் பழைய மாணவருமான மருத்துவர் கோபாலன் இந்தியாவில் ஊட்டச்சத்து அறிவியலின் தந்தையாக கருதப்படுகிறார்.அவருக்கு 2002 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
  • தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில் நிறுவப்பட்ட “ICMR-NIN-நூற்றாண்டு விருது” என அழைக்கப் படுகின்ற ஒருமுறை வழங்கப்படும் விருதானது மருத்துவர் சி.கோபாலனுக்கு அவருடைய மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.

நிரந்தரப் பாலம்

  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் தளபதி செவாங் ரிஞ்சன் பாலம் எனப்படும் இந்தியாவின் மிக உயரமான அனைத்து வானிலை மாற்றங்களையும் தாங்கக் கூடிய ஒரு நிரந்தரப் பாலத்தைத் திறந்து வைத்தார்.
  • இது கிழக்கு லடாக்கில் சீனா-இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

குறிப்பு 

  • ஷியோக் ஆற்றின் மீது அமைந்துள்ள 1400 அடி நீளமுள்ள இந்தப் பாலமானது வடக்கில் உள்ள துணைப் பிராந்தியத்தில் 14,650 அடி உயரத்தில் அமைந்துள்ளது. “லடாக்கின் சிங்கமான” தளபதி செவாங் ரிஞ்சனின் நினைவாக இப்பாலத்திற்கு இவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை 2017 

  • 2017-ம் ஆண்டு இந்தியாவில் பதிவான சுற்றுச்சூழல் தொடர்பான குற்ற வழக்குகளில், அதிகபட்சமாக 49 விழுக்காடு வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் குற்றம் (Crime in India) என்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau – NCRB) வெளியிட்டுள்ளது.

இந்த வழக்குகளின் அதிகபட்ச எண்ணிக்கை பின்வரும் மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

  1. ஹரியானா (2,576)
  2. உத்தரப் பிரதேசம் (2,055)
  3. தமிழ்நாடு (1,802)

மாநில செய்திகள்

 

பாரத் கி லட்சுமி முன்னெடுப்பு

  • பெண்களைக் கௌரவிப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 57வது அத்தியாயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியால் #பாரத்கிலட்சுமி என்ற பிரச்சாரம் ஆனது சமூக ஊடகங்களில் தொடங்கப்பட்டது.
  • ‘பாரத் கி லட்சுமி’ பிரச்சாரம் ஆனது பொது நலனுக்காக பல்வேறு துறைகளில் பெண்கள் செய்த சாதனைகளை அடையாளப் படுத்தும் விதத்தில் பெண்மணிகளை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, தீபிகா படுகோனே மற்றும் விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பிரதமர் மோடியின் ‘பாரத் கி லக்ஷ்மி’ என்ற முன்னெடுப்பு முயற்சிக்கு ஜோதியைத் தாங்கிச் சென்றனர்.

 FATFன் “சாம்பல் நிறப் பட்டியலில் இருந்து நீக்கம்

  • நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவானது (FATF – Financial Action Task Force) இலங்கையை அதன் ‘சாம்பல் நிறப் பட்டியலில்’ இருந்து நீக்கியுள்ளது.
  • FATFன் செயலகமானது பாரிஸில் உள்ள OECD இன் (Organisation for Economic Co-operation and Development – பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு) தலைமையகத்தில் அமைந்துள்ளது.
  • பண மோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சர்வதேச நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கான பிற தொடர்புடைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • FATF என்பது G7 இன் முன்னெடுப்பின் அடிப்படையில் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
  • FATF ஆனது தனது உறுப்பு நாடுகளின் நிதி மோசடி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உறுப்பு நாடுகளின் தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்தலைத் தடுப்பதற்கான (AML / CFT – Anti-Money Laundering and Countering the Financing of Terrorism) நடைமுறைகள் ஆகியவற்றைக் கண்காணிக்கின்றது.

 

விளையாட்டு செய்திகள்

 

ஹன்ரட் கிரிக்கெட்

  • 2020 ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப் பட்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடத்தப்பெறும் சுமார் 100 பந்துவீச்சுகளைக் கொண்ட ஒரு தொழில்சார் கிரிக்கெட் போட்டியின் பெயர் ஹன்ரட் கிரிக்கெட் ஆகும்.
  • இந்தக் கிரிக்கெட் போட்டி ஒரு புதிய முறையில் விளையாடப்படும்.
  • இதில் இரண்டு அணிகளும் தலா 100 பந்துவீச்சுகளை உள்ளடக்கிய ஒரு இன்னிங்ஸில் விளையாடுகின்றன.

இராணுவ விளையாட்டுகள்

  • சீனாவின் வுஹானில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் முதலாவது தங்கப் பதக்கத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த குணசேகரன் வென்றுள்ளார்.
  • 7வது சிஐஎஸ்எம் உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறன் கொண்ட ஆண்களின் 100 மீ மற்றும் 400 மீ ஐடி 1 போட்டிகளில் பாரா-தடகள வீரரான ஆனந்தன் குணசேகரன் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
  • ஏழாவது இராணுவ உலக விளையாட்டுக்கள் சீனாவில் முதன்முறையாக நடத்தப்படுகின்றன. மேலும் இது சீனாவில் நடைபெறும் மிகப்பெரிய இராணுவ விளையாட்டு நிகழ்வாகும்.

ரொனால்டோ சிங் 

  • தென் கொரியாவின் இஞ்சியோனில் நடைபெற்று வரும் ஆசிய ட்ராக் மிதிவண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் இளையோர் கெய்ரின் நிகழ்வில் இந்திய மிதிவண்டி வீரரான ரொனால்டோ சிங் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • இப்போட்டியில் ரொனால்டோவைத் தவிர, ஜேம்ஸ் சிங் என்பவர் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • ஆண்கள் மற்றும் பெண்களின் இளையோர் தடகள அணியானது இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc


Download Daily Current Affairs [2019- Oct – 21 to 25]

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள். தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: