Daily Current Affairs in Tamil October 7 to 8 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(7 & 8 oct 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : 7-8 Oct , 2019

முக்கியமான நாட்கள்

 

உலக விண்வெளி வாரம்

  • சர்வதேச விண்வெளி வாரமென்பது, அறிவியல், தொழினுட்பம் மற்றும் மனித மேம்பாட்டிற்கும், அமையபெற்று தங்கள் பங்களிப்பை கொடுப்பதாகும். 1999 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுசபையால் அக்டோபர் 4 – 10 இரு நாட்கள் (இரு நிகழ்வுகள்) இடைநாட்கள், நினைவுகூரும் வகையில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  •  உலக விண்வெளி வாரம் நிகழ்ச்சி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா என 3 மாநிலங்களில் மட்டும் நடைபெறுகிறது. 
  • 2019 ஆம் ஆண்டிற்கான கருப் பொருள் “நிலவு: நட்சத்திரங்களுக்கான நுழைவாயில்” என்பதாகும்.

உலக ஆசிரியர் தினம் – அக்டோபர் 05

  • 1994ம் ஆண்டு முதல் உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இது யுனிசெப், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் சர்வதேச கல்வி ஆகியவற்றுடன் இணைந்து அனுசரிக்கப் படுகின்றது.
  • ஆசிரியர்களுக்கான பொறுப்புகளையும் உரிமைகளையும் குறித்து தரங்களை நிர்ணயித்த 1996ம் ஆண்டின் யுனெஸ்கோ/சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதன் வருடாந்திர அனுசரிப்பை இது நினைவு கொள்கின்றது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு “இளம் ஆசிரியர்கள் : தொழிலின் எதிர்காலம்” என்பதாகும்.

உலக வசிப்பிட தினம் – அக்டோபர் 7

  • ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கள் கிழமையை உலக வசிப்பிட தினமாக நிர்ணயித்துள்ளது.
  • இத்தினம் நமது நகரங்களின் நிலையையும் அனைவருக்கும் போதுமான வசிப்பிடத்திற்கான அடிப்படை உரிமையையும் பற்றிப் பிரதிபலித்திட அனுசரிக்கப் படுகின்றது.
  • 1986ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் முதல்முறையாக உலக வசிப்பிட தினத்தை அனுசரித்தது.
  • 2019ம் ஆண்டின் அனுசரிப்பிற்கான கருத்துரு “குப்பைகளைச் செல்வங்களாக மாற்றிடுவதற்கான புதுமையான கருவியாக அதிநவீன தொழில் நுட்பங்கள்” என்பதாகும்.

முதலாவது உலக பருத்தி தினம் – அக்டோபர் 7

  • உலக வர்த்தக அமைப்பானது (World Trade Organisation – WTO) முதலாவது உலக பருத்தி தின கொண்டாட்டங்களை சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடத்தியது.
  • உலகப் பருத்தி தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்குமாறு “பருத்தி – 4 நாடுகள்” ஐ.நா பொதுச் சபைக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்வு உருவாகியது.
  • இத்தகைய தினமானது ஒரு உலகளாவியப் பண்டமாக பருத்தியின் முக்கியத்துவத்தைப்  பிரதிபலிக்கின்றது.

நோக்கங்கள்

  • இது உலகெங்கிலும் உள்ள பருத்திப் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப்  படம் பிடித்துக் காட்டுகின்றது.
  • உலகளவில் குறைந்த அளவில் வளர்ச்சி பெற்ற, வளரும் மற்றும் வளர்ந்த பொருளாதாரங்களுக்குப் பருத்தி முக்கியமானதாக விளங்குகின்றது.

இந்திய விமானப் படை தினம் – அக்டோபர் 08

  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் 87வது இந்திய விமானப் படை தின அணிவகுப்பு நடத்தப்பட்டது.
  • பாலகோட் வான்வழித் தாக்குதலில் பங்கேற்ற IAF அதிகாரிகள் “அவென்ஜர் அமைப்பை உருவாக்கும் விதமாக” மூன்று மிராஜ் – 2000 ரக விமானங்களிலும் இரண்டு சு-30 எம்.கே.ஐ ரகப் போர் விமானங்களிலும் பறந்தனர்.
  • இந்தத் தினக் கொண்டாட்டமானது தேசப் பாதுகாப்பின் ஒரு முக்கியப் பகுதியாக விளங்கும் IAFன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க முயல்கின்றது.

தரக்குறியீடு

உலகளாவிய ஆயுதத் திறன் குறியீடு -2019

  • உலகளாவிய ஆயுதத் திறன் அமைப்பு  உலகளாவிய ஆயுதத் திறன் குறியீடு (Global Firepower Index – GFP) / ராணுவ வலிமைத்  தரவரிசை 2019 என்ற ஒன்றை வெளியிட்டது.
  • இது நிலம், கடல் மற்றும் வான்வெளி முழுவதும் வழக்கமான ஆயுதங்களுடன் ஒவ்வொரு நாட்டின் போர் உருவாக்கும் திறனைக் கொண்டு அவற்றைத் தரவரிசைப் படுத்துகிறது.
  • இந்த திறன் குறியீட்டில் இந்தியா 4வது இடத்தில் இருந்தது. மேலும் இந்தியா  தெற்காசியாவில் முதலிடத்தில் இருந்தது.
  • உலகளவில், இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது.
  • உலகளாவிய ஆயுதத் திறன் அமைப்பு ஆனது  2006 ஆம் ஆண்டு முதல் 137 நவீன இராணுவ சக்திகளைப் பற்றிய தரவுகளின் பகுப்பாய்வுக் காட்சியை வழங்கி வருகிறது.

WEF உலகளாவிய போட்டித் திறன் குறியீடு

  • 2019 ஆம் ஆண்டின் உலகளாவிய போட்டித் திறன் குறியீட்டில் இந்தியா 10 புள்ளிகள் குறைந்து 68வது இடத்தில் உள்ளது.
  • இந்த அறிக்கையானது உலக பொருளாதார மன்றத்தினால் (WEF – World Economic Forum) வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் மதிப்பெண் ஆனது மொத்தமுள்ள 12 அளவுருக்களில் 8 அளவுருக்களில் குறைந்துள்ளது. மற்ற நாடுகள் இந்தியாவை விட வேகமாக தங்களது உள்நாட்டு வணிகச் சூழலை மேம்படுத்தியுள்ளன.
  • இந்த ஒட்டுமொத்த போட்டித் திறன் தரவரிசையில், சிங்கப்பூர் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

விருது

 

நோபல் பரிசு பெற்றவர்கள் 

ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. 

வேதியியலுக்கான நோபல் பரிசு 

  • 2019-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 97 வயது மிக மூத்த விஞ்ஞானி ஜான் குட்எனஃப் உள்ளிட்ட 3 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  •  எடைக் குறைவான லித்தியம்-அயன் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சியில் புதிய வளர்ச்சியை எட்டியதற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  1.  ஜான் பி குட்எனஃப் (ஜெர்மனி), 
  2. ஸ்டான்லி விட்டிகாம் (பிரிட்டன்),
  3.  அகிர யோஷினோ (ஜப்பான்) 

ஆகிய  மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம்

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்குத் தோந்தெடுக்கப்பட்டவர்கள் 

  1. வில்லியம் ஜி கேலின் (61), அமெரிக்கா, ஹாா்வா்டு பல்கலைக்கழகம்
  2. கிரெக் எல் செமென்ஸா (63), அமெரிக்கா, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
  3. பீட்டா் ஜே ராட்கிளிஃபும் (65), பிரிட்டன், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம்

இவர்கள் உடலியல் துறையில் ஆக்ஸிஜன் அளவுகளை உயிரணுக்கள் எவ்வாறு உணா்கின்றன, அந்த அளவு மாற்றங்கள் உயிரணுக்களில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து மேற்கொண்ட ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதன் மூலம், ரத்த சோகை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தனர்.இதற்காக நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்,

 இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்குத் தோந்தெடுக்கப்பட்டவர்கள் 

  • ஜேம்ஸ் பீபள்ஸ் (84), கனடா-அமெரிக்கா, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
  • மைக்கேல் மேயா் (77), ஸ்விட்சா்லாந்து, ஜெனீவா பல்கலைக்கழகம்
  • டிடையா் குவிலோஸ் (53), ஸ்விட்சா்லாந்து, ஜெனீவா பல்கலைக்கழகம்

பெரு வெடிப்புக்குப் பிறகு நமது அண்டம் எவ்வாறு உருவானது என்பதற்கான கோட்பாடுகளை உருவாக்கியமைக்காக அவா்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் தோவுக் குழு தெரிவித்துள்ளது.

 

மாநில செய்திகள்

FSSAI இன்  இலட்சினை

  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (Food Safety & Standards Authority of India – FSSAI) மாறுபக்க கொழுப்புகள் அல்லாத பொருள்களுக்கான ஒரு இலட்சினையை வெளியிட்டார்.
  • இது புது தில்லியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் 8வது சர்வதேச சமையல்காரர்களின் மாநாட்டின் போது தொடங்கப்பட்டது.
  • FSSAI இன் ‘சரியான உணவு உண்ணும் இயக்கத்தை’ ஊக்குவிக்க இந்த இலட்சினை தொடங்கப்பட்டது.
  • இந்நிகழ்ச்சியில் அமைச்சர் “மாறுபக்க கொழுப்புகள் அல்லாத பொருள்களுக்கான  சமையல்காரர்கள்” என்ற வாசகத்தையும் வெளியிட்டார்.

மாநாடு

 

காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு

  • 2019 ஆம் ஆண்டிற்கான 64வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு உகாண்டாவின் கம்பாலா என்னும் இடத்தில் நடத்தப் பட்டது.
  • மாநாட்டின் கருப்பொருள்: ‘வேகமாக மாறிவரும் காமன்வெல்த் நாடாளுமன்றங்களின் ஏற்புடைமைத் தன்மை, ஈடுபாடு மற்றும் பரிணாமம்’.                                                                                                                                                                                                                                   

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- oct – 7 to 8]

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: