Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(9 & 10 oct 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 9-10 Oct , 2019
முக்கியமான நாட்கள்
அக்டோபர் 9 சே குவேரா நினைவுநாள்
- உலக இடதுசாரி சிந்தனையாளர்களாலும், இளைஞர்களாலும் கொண்டாடப்படும் புரட்சியாளர் சே குவேரா நினைவுநாள் இன்று.சே குவேரா 1928ம் ஆண்டு ஜூன் 14ம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார்.
- இவரது தந்தை சோசலிச ஆதரவாளராக இருந்தார். இதனால் இவருக்கும் சோசலிசம் மீது பற்று ஏற்பட்டது.
- அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன், மோட்டார் சைக்கிளில் தென்அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். இப்பயணத்தின் போது அவருக்கு கிடைத்த அனுபவங்களை ‘மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்’ என்னும் தலைப்பில் நூலாக எழுதினார்.
தபால் வார விழா
- இந்தியா முழுவதும் தபால் துறையின் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 9 முதல் 15-ம் தேதி வரை தபால் வார விழா கொண்டாடப்படுகிறது.
- சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச தபால் ஒன்றியம் கடந்த 1874 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ஆம் தேதி உலக தபால் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- இதனையொட்டி இந்திய அஞ்சல் துறை சார்பில், அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஒரு வாரக் காலத்திற்கு தபால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக தபால் தினம் – அக்டோபர் 9
- உலக தபால் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
- இது 1874ம் ஆண்டில் உலகத்தின் தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தின் உருவாக்கத்திற்கான நினைவு தினமாகும்.
- 1948ம் ஆண்டில் அந்த அமைப்பு ஐக்கிய நாடுகளின் அமைப்புகளில் ஒன்றாகியது.
- 1969ம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தின் மாநாட்டில் அக்டோபர் 9ம் தேதி முதல் முறையாக உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது.
- இந்த முன்மொழிவு அந்த அமைப்பில் உள்ள இந்தியப் பிரதிநிதித் தரப்பின் ஒரு உறுப்பினரான ஆனந்த் மோகன் நரூலா என்பவரால் சமர்ப்பிக்கப்பட்டது.
அக்டோபர் 10 – நடிகை மனோரமா மறைந்தார்
- 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை மனோரமா மறைந்தார்.
அக்டோபர் 10 – தமிழறிஞர் மு.வரதராஜன் மறைந்தார்
- 1974ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தமிழறிஞர் மு.வரதராஜன் மறைந்தார்.
விளையாட்டு செய்திகள்
கேரள ஒலிம்பிக் சங்கம் பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு
- சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில், ஆக.25ம் தேதியன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒக்குஹாராவை பி.வி.சிந்து எதிர்கொண்டார்.
- பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். இதன்மூலம் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்
- அந்த வகையில், கேரள ஒலிம்பிக் சார்பில் பி.வி.சிந்துவுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநில அரசின் தொகையான ரூ.10 லட்சத்தை இன்று கேரள ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் வி.சுனில் குமார், பி.வி.சிந்துவுக்கு வழங்கி அவரை கவுரவித்தார். .
10வது ஆசியத் தலைமுறைப் பிரிவினர் சாம்பியன்ஷிப் போட்டி
- 2019 ஆம் ஆண்டிற்கான 10வது ஆசியத் தலைமுறைப் பிரிவினர் சாம்பியன்ஷிப் (Asian Age Group Championships – AAGC) போட்டி கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்றது.
- ஆசிய தொழிற்சாரா நீச்சல் கூட்டமைப்பு (Asia Amateur Swimming Federation – AASF) மூலம் இந்திய நீச்சல் கூட்டமைப்பு இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தது.
- நீச்சல், நீரில் மூழ்குதல், நீர் விளையாட்டுக்கள் மற்றும் கலைசார் நீச்சல் போட்டிகளில் இந்தியா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
- இந்தியா இப்போட்டியில் மொத்தம் 64 பதக்கங்களை (20 தங்கம், 24 வெள்ளி மற்றும் 20 வெண்கலம்) பெற்றுள்ளது.
- இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா நீச்சல் போட்டியில் 4வது இடத்திலும், நீரில் மூழ்குதல் போட்டியில் இரண்டாவது இடத்திலும் இருந்தது.
அறிவியல் செய்திகள்
சனி கிரகத்தில் நிலாக்கள்
- விண் கற்களால் ஆன வளையத்தைக் கொண்டிருக்கும் சனி கிரகத்தை சுற்றி வரும் துணைக் கோள்களின் எண்ணிக்கை, 62 ஆக இருந்தது.உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து 20 புதிய நிலவுகளை கண்டுபிடித்துள்ளனர்.
- இதனால், சனி கிரகத்தை சுற்றி வரும் துணைக் கோள்களின் எண்ணிக்கை, 82 ஆக உயர்ந்துள்ளது.
இன்சுலின் மருந்து மாத்திரையாக உருவாக்கம்
- ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரிகையாக உருவாக்கி அமெரிக்க ஆய்வாளர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர்.
- அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன ஆய்வாளர்கள் தயாரித்த இந்த மாத்திரை, பன்றியிடம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
- இந்த மாத்திரையை உட்கொண்ட உடனேயே நேரடியாக சிறுகுடலை சென்றடையும் என்றும், 30 மி.மீ நீளத்திற்கு இந்த மாத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுகள்
ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருது
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் (UNEP – United Nations Environment Programme) மூத்த இந்திய வனத்துறை அதிகாரியான ரமேஷ் பாண்டே என்பவர் புகழ்பெற்ற ஆசிய சுற்றுச்சுழல் அமலாக்க விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த IFS அதிகாரியான இவர் லக்னோவில் தலைமை வனப் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பின்வருவனவற்றிற்காக பாராட்டப்பட்டுள்ளார்.
- வேட்டையாடுபவர்கள் குறித்த விசாரணை மற்றும் தகவல் சேகரிப்பு
- எல்லை தாண்டிய சுற்றுச்சூழல் சார்ந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுதல்
இந்த விருதானது எல்லை தாண்டிய சுற்றுச்சூழல் சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்கு ஆசியாவில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட தலைசிறந்த சாதனைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“ஆர்டர் ஆஃப் கிரீன் கிரசெண்ட்” விருது
- இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான எம்.வெங்கையா நாயுடு ஆப்பிரிக்கத் தீவு தேசமான கொமொரோஸின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான “ஆர்டர் ஆஃப் கிரீன் கிரசெண்ட்” என்ற விருதைப் பெற்றுள்ளார்.
- இந்த விருதானது மோரோனியில் அந்நாட்டு அதிபரான அசாலி அசாமவுனியால் இவருக்கு வழங்கப்பட்டது.
- மோரோனி நகரம் ஆனது ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள கொமொரோஸ் தீவுக் கூட்டத்தின் தலைநகரம் ஆகும்.
- 2017 ஆம் ஆண்டில் வெங்கையா நாயுடு துணைக் குடியரசுத் தலைவரான பிறகு இது அவருக்கு கிடைத்த இரண்டாவது சர்வதேச கௌரவமாகும்.
நாஸா விஞ்ஞானிக்கு ரஷியாவின் விருது
- இரண்டு ரஷிய விண்வெளி வீரா்களுடன் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி நிக் ஹேக் கடந்த ஆண்டு புறப்பட்ட ரஷிய ராக்கெட், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பழுதடைந்தது.
- அதையடுத்து, அந்த 3 பேரும் துணிச்சலுடன் தரையிறங்கினா். இதுதொடா்பாகவே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விஞ்ஞானி நிக் ஹேக், ரஷியாவின் தீர விருதுக்குத் தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு
- எத்தியோப்பியப் பிரதமரான அபி அகமது 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை வென்றுள்ளார்.
- அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான அவருடைய முயற்சிகளுக்காகவும் அண்டை நாடான எரித்திரியாவுடனான நீண்டகால மோதலைத் தீர்ப்பதற்காக அவர் எடுத்த நடவடிக்கைகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
உலக செய்திகள்
சாதனையாளர் பட்டியலில் இந்தியர்கள்
- அமெரிக்காவில் 40 வயதிற்குள் சாதனை படைத்த பல்வேறு துறைகளை சேர்ந்த 40 பிரபலங்களின் பெயர் பட்டியலை அமெரிக்காவின் ‘பார்ச்சூன்’ பத்திரிகை (அக்., 09) வெளியிட்டது.
- பார்ச்சூன்’ பத்திரிகை வெளியிட்ட சாதனையாளர் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் இடம்பெற்றுள்ளனர்.
- இதில் இண்டல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத்துறை துணை தலைவர் அர்ஜூன் பன்சால் ஸிலிங்கோ பேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் துணை நிறுவனருமான அன்கிதி போஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இளம் தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான இளைஞர் கூட்டுறவு
- நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்கத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்திக் கட்டமைப்பின் இந்திய ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் அமைப்பு ஆகியவை இணைந்து ஒரு புதிய இளைஞர் ஆய்வகத் திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
- இது “யூத் கோ: லேப் இந்தியா” என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.
- இது இந்திய இளைஞர்களிடையே புதுமை மற்றும் சமூகத் தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த சமூக கண்டுபிடிப்புச் சவால்களின் கீழ் தேசிய மற்றும் மாநில அளவில் 18-29 வயதுக்குட்பட்டவர்கள் இந்தத் திட்டத்திற்காக அழைக்கப்படுவர்.
- மேலும் 2020 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் பிராந்திய மையத்தில் இவர்களது புத்தாக்க யோசனைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் இந்த அமைப்பு இவர்களுக்கு வழங்கும்.
பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு
- ஜெனிவாவில் அமைந்துள்ள உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கி உள்ளது.
- இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 58 வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 68 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
- சந்தை நிலவரம் மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்றல் முறைப்படுத்துதல் போன்றவற்றில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.
- சுகாதாரமான வாழ்க்கை தரம் கொண்ட 141 நாடுகளை கொண்ட பட்டியலில் இந்தியா 109 வது இடத்தில் உள்ளது. திறன் வளர்ச்சி பட்டியலில் இந்தியா 107 வது இடத்தில் உள்ளது.
- திறன் மேம்பாட்டில் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 84வது இடத்திலும், வங்கதேசம் 105 வது இடத்திலும் உள்ளன. நேபாளம் 108 வது இடத்திலும், பாக்.,110 வது இடத்திலும் உள்ளன.
நியமனம்
ஆட்சியர்கள் நியமனம்
- அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்னா, மதுரை ஆட்சியராக டி.ஜி.வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளராக ராதாகிருஷ்ணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பயிற்சிகள்
கூட்டு இராணுவப் பயிற்சிகள்
காசிந்த் 2019
- 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 02 முதல் 15 வரை இந்தியாவிற்கும் கஜகஸ்தானிற்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான காசிந்த் 2019 என்ற பயிற்சியானது உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோரகார்கில் நடத்தப் படுகின்றது.
- இது கஜகஸ்தான் மற்றும் இந்தியா ஆகியவற்றில் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திரப் பயிற்சியின் நான்காவது பதிப்பாகும்.
ஏகுவெரின் 2019
- இந்திய ராணுவத்துக்கும் மாலத்தீவுகளின் தேசிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் பத்தாவது பதிப்பானது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 07 முதல் 20 வரை மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஆந்த் ராணுவ நிலையத்தில் நடத்தப் படுகின்றது.
- ஏகுவெரின் என்றால் மாலத்தீவின் திவேஹி மொழியில் ‘நண்பர்கள்’ என்று பொருள்படும்.
- இதுபோன்ற ஒரு முதலாவதுப் பயிற்சியானது 2009 ஆம் ஆண்டில் தொடங்கியது.
மைத்ரீ 2019
- 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 29 வரை இந்தியாவும் தாய்லாந்தும் கலந்து கொள்ளும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான MAITREE – 2019 என்ற பயிற்சியை வெளிநாட்டுப் பயிற்சி முனையமான உம்ரோயில் (மேகாலயா) இந்த இரு நாடுகளும் நடத்தின.
விமானிகளுக்கு ஏர்இந்தியா பயிற்சி
- 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இயக்கப்பட உள்ள 2 போயிங் 777 ரக விமானங்களில் முதல் முறையாக ஏர் இந்தியா விமானிகள் யாரும் இல்லாமல் ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட உள்ளது.
- பிரதமரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டு வரும் போயிங் 777 ரக விமானத்தை இயக்குவதற்காக இந்திய விமானப்படையை சேர்ந்த 10 விமானிகளுக்கு ஏர்இந்தியா சிறப்பு பயிற்சி அளித்து வந்தது.
திட்டம்
ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டம்
- ஆந்திர மாநில அரசு ‘ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், மூன்று சக்கர வாகனங்கள் அல்லது வாடகை மகிழுந்துகளின் உரிமையாளர்-ஓட்டுநருக்கு அரசாங்கம் ஆண்டுக்கு ரூ 10,000 நிதி உதவி வழங்கும்.
- இந்த உதவி அவர்களின் காப்பீட்டுத் தொகை, உரிமக் கட்டணம் மற்றும் பிற தொடர்ச்சியான செலவுகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- oct – 9 to 10]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.