Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(14 Sep 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 14 Sep 2019
முக்கியமான நாட்கள்
செப்டம்பர் 14 – உலக முதலுதவி தினம் 2019 (World First Aid Day )
- உலக முதலுதவி தினமானது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Federation of Red Cross – IFRC) மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றினால் 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக் கிழமையானது உலக முதலுதவி தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
- இத்தினமானது அன்றாட மற்றும் நெருக்கடி கால சூழ்நிலைகளில் முதலுதவியின் மூலம் எவ்வாறு உயிரைக் காப்பாற்ற முடியும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அது மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் உட்பட அனைவருக்கும் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.
- 2019 ஆம் ஆண்டின் உலக முதலுதவி தினத்தின் கருத்துரு, “முதலுதவி மற்றும் விடுபட்ட மக்கள்” ஆகும்.
தேசிய செய்திகள்
ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் தொடக்கம்
- நாடு முழுவதும் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் 462 ஏகலைவா மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகளை (Ekalavya Model Residential Schools – EMRS) பிரதமர் மோடி தொடங்கினார்.
- இந்தப் பள்ளிகள் இந்தப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான தொடக்க நிலை, இடை நிலை மற்றும் உயர் இடை நிலைக் கல்வியை வழங்குவதற்குக் கவனம் செலுத்துகின்றன.
- இது மத்திய பழங்குடி விவகார அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படுகின்றது.
- EMRS என்பது இந்தியா முழுவதும் உள்ள இந்தியப் பழங்குடியினருக்கு (பட்டியல் பழங்குடியினர்) மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகளை ஏற்படுத்துவதற்கான இந்திய அரசின் ஒரு திட்டமாகும்.இது 1997-98 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- அவை இந்திய அரசியலமைப்பின் சரத்து 275 (1) இன் கீழ் மானியங்களுடன் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அமைக்கப் பட்டிருக்கின்றன.
குண்டு துளைக்காத கவச ஆடைகள்
- ஆடைகளை ஐரோப்பிய நாடுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.
- 360 கோண அளவில் பாதுகாப்பை வழங்கும் குண்டு துளைக்காத கவச ஆடைகளின் மீது தனது சொந்த தேசிய தரத்தை கொண்ட நான்காவது நாடு இந்தியா ஆகும். இதற்கு முன்பு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் குண்டு துளைக்காத கவச ஆடைகளின் மீது தனது சொந்த தேசிய தரத்தைக் கொண்டுள்ளன.
- பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் நிதி ஆயோக் ஆகிய அமைப்புகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியத் தர நிர்ணய அமைப்பானது குண்டு துளைக்காத கவச ஆடைகளுக்கான தேசியத் தரத்தை உருவாக்கியது.
- இது மிதானி, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆவடியில் உள்ள பாதுகாப்பு தளவாடத் தொழிற்சாலை ஆகிய பாதுகாப்பு சார்ந்த 2 பொதுத் துறை நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது.
திட்டம்
தேசிய ஓய்வூதியத் திட்டம்
- வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.
- இது ஆண்டு வருமானம் ரூ 1.5 கோடிக்கு மிகாமல் இருக்கும் கடைக்காரர்கள் / சில்லறை வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும்.
- இது 18 வயது முதல் 40 வயது வரையில் உள்ளவர்களுக்கான ஒரு திட்டமாகும். இவர்கள் 60 வயதை எட்டும்போது மாதந்தோறும் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக ரூ 3,000 வழங்கப்படும்.
- மாதாந்திர ஓய்வூதியப் பங்களிப்பில் 50% நிதியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 50% நிதியானது பயனாளியால் வழங்கப்படும்.
பிரதான் மந்திரி கிசான் மான் தன் திட்டம்
- பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா (Pradhan Mantri Kisan Maan Dhan Yojana – PM-KMY) என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கினார்.
- PM-KMY என்பது நாட்டில் உள்ள நிலம் வைத்துள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான (Small and Marginal Farmers – SMFs) ஒரு முதியோர் ஓய்வூதியத் திட்டமாகும்.
- இது 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகளுக்கான ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்புத் திட்டமாகும். இதில் விவசாயிகள் 60 வயதை எட்டும்போது மாத ஓய்வூதியமாக ரூ. 3000 வழங்கப்படும்.
- இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஓய்வூதிய நிதி மேலாளராகவும் ஓய்வூதிய நிதி வழங்குதலுக்கு பொறுப்புமிக்க அமைப்பாகவும் இருக்கும்.
குண்டு துளைக்காத கவச ஆடைகள்
- ஆடைகளை ஐரோப்பிய நாடுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.
- 360 கோண அளவில் பாதுகாப்பை வழங்கும் குண்டு துளைக்காத கவச ஆடைகளின் மீது தனது சொந்த தேசிய தரத்தை கொண்ட நான்காவது நாடு இந்தியா ஆகும். இதற்கு முன்பு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் குண்டு துளைக்காத கவச ஆடைகளின் மீது தனது சொந்த தேசிய தரத்தைக் கொண்டுள்ளன.
- பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் நிதி ஆயோக் ஆகிய அமைப்புகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியத் தர நிர்ணய அமைப்பானது குண்டு துளைக்காத கவச ஆடைகளுக்கான தேசியத் தரத்தை உருவாக்கியது.
- இது மிதானி, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆவடியில் உள்ள பாதுகாப்பு தளவாடத் தொழிற்சாலை ஆகிய பாதுகாப்பு சார்ந்த 2 பொதுத் துறை நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது.
விருதுகள்
ஐ.நா. கௌரவ விருது
- தெற்கு சூடானில் உலக அமைப்பின் பணியில் காவல் துறை அதிகாரிகளின் பாராட்டத்தக்க சேவைகளுக்காக ஐந்து இந்தியப் பெண் காவல்துறை அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபையினால் கௌரவிக்கப்பட்டனர்.
ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்ட பெண் அதிகாரிகள் பின்வருமாறு
- ரீனா யாதவ் (சண்டிகர் காவல்துறை ஆய்வாளர்)
- கோபிகா ஜாகிர்தார் (மகாராஷ்டிரா காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர்)
- பாரதி சமந்திரே (உள்துறை அமைச்சகத்தின் காவல்துறைக் துணைக் கண்காணிப்பாளர்)
- ராகினி குமாரி (உள்துறை அமைச்சகத்தின் காவல்துறை ஆய்வாளர்)
- கமல் சேகாவத் (ஏஎஸ்பி, ராஜஸ்தான் காவல்துறையின் உதவிக் கண்காணிப்பாளர்).
தெற்கு சூடானின் ஜூபாவில் நடைபெற்ற ஐ.நா. திட்டத்தின் விருது வழங்கும் விழாவில் அவர்களுக்கு ஐ.நா. விருது வழங்கப்பட்டது.
அறிவியல் செய்திகள்
உலகளாவிய நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம்
- இந்தியா ஒரு புதிய உறுப்பினராக உலகளாவிய நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு (Global Antimicrobial Resistance – AMR) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Research and Development – R&D) மையத்தில் இணைந்துள்ளது.
- AMR R&D ஆனது 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற உலக சுகாதாரச் சபையின் 71வது அமர்வின் முடிவில் தொடங்கப்பட்டது.
- இது நுண்ணுயிர்க் கொல்லிக்கு எதிரான தாங்கும் திறனை எதிர்ப்பதற்கான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு புதிய முயற்சியாகும்.
- இது முக்கியமாக ஜெர்மன் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுகின்றது. இதன் செயலகம் பெர்லினில் உள்ளது.
வேற்று கிரகத்தில் நீராவி
- வானியலாளர்கள் முதன்முறையாக K2-18b எனப்படும் ஒரு தொலைதூரக் கிரகத்தின் வளிமண்டலத்தில் “நீராவியைக்” கண்டுபிடித்துள்ளனர்.
- நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியின் தரவு இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது.
- K2-18b ஆனது வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. மேலும் அக்கிரகத்தில் தண்ணீரும் உள்ளது. இதனால் மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நீர் மற்றும் வெப்பநிலை ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும் ஒரேயொரு வெளிக்கோள் இதுவாகும்.
- இது பால்வீதியின் லியோ விண்மீன் மண்டலத்தில் பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றது.
- இது பூமியின் நிறையை விட 8 மடங்கு நிறை கொண்டது. இது பூமியை விட இரண்டு மடங்கு பெரியது.
- இது பூமி மற்றும் நெப்டியூன் ஆகியவற்றின் நிறைகளுக்கிடையேயான வெளிக் கோள்கள் அல்லது சூப்பர் எர்த் என்று அழைக்கப்படுகின்றது.
இந்தி திவாஸ்
- இந்தி திவாஸ் செப்டம்பர் 14 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று தேவநாகரியில் எழுதப்பட்ட இந்தியை அரசியலமைப்பு சபை நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.
மாநாடுகள்
15 வது இந்தோ-அமெரிக்க பொருளாதார உச்சி மாநாடு
- இதில் உணவு பதப்படுத்தும் துறையை உயர்த்துவதற்காக உணவு பதப்படுத்தும் அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு தற்போதைய ரூ .1,400 கோடியிலிருந்து ஆண்டுக்கு ரூ .3,000 கோடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
பசுமை முயற்சிகள் குறித்து ரயில்வே சி.ஐ.ஐ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- பசுமை முயற்சிகளை எளிதாக்குவதற்காக இந்திய ரயில்வே, புதுதில்லியில் உள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இது ரயில்வேக்குரியவைகளை பசுமையாக்குவது மற்றும் உற்பத்தி வசதிகள் மற்றும் ரயில்வே ஒர்க்ஷாப்களில் ஆற்றல் திறனை மேம்படுத்துவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.
விளையாட்டு செய்திகள்
இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன்
- 18 வீராங்கனைகளை கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார், இந்த அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது .
- இந்த தொடர் இங்கிலாந்தின் மார்லோவில் இந்த மாதம் 27 முதல் அடுத்த மாதம் 4 வரை நடைபெற உள்ளது. கோல்கீப்பர் சவிதா புனியா துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை
- ஃபிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பையை அடுத்த ஆண்டு நவம்பர் 2 முதல் 21 வரை இந்தியா நடத்தவுள்ளது.
- போட்டியை இந்தியா நடத்தும் என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. 2018 இல் நடந்த போட்டியின் பட்டத்தை வென்றதன் மூலம் ஸ்பெயின் நடப்பு சாம்பியன்களாக உள்ளது.
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- Sep – 14]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
S. No | Date | |
---|---|---|
1 | September 1,2019 | Download PDF |
2 | September 2,2019 | Download PDF |
3 | September 3,2019 | Download PDF |
4 | September 4,2019 | Download PDF |
5 | September 5,2019 | Download PDF |
6 | September 6,2019 | Download PDF |
7 | September 7,2019 | Download PDF |
8 | September 8,2019 | Download PDF |
9 | September 9,2019 | Download PDF |
10 | September 10,2019 | Download PDF |
11 | September 11,2019 | Download PDF |
12 | September 12,2019 | Download PDF |
13 | September 13,2019 | Download PDF |
14 | September 14,2019 | Download PDF |
15 | September 15&16,2019 | Download PDF |