TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 14 July 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC July Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1.NTPC Renewable Energy (NTPC REL) sets up a 4750 MW Renewable Energy Park at Rann of Kutch in Khavada, Gujarat. This will be India’s single largest solar park to be built by the largest power producer of the country.
தேசிய அனல் மின் நிறுவனத்தின் துணை நிறுவனமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் (NTPC REL) குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ராண் என்ற இடத்தில் 4750 மெகாவாட் திறனுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா ஒன்றை அமைக்கிறது. இதுவே நாட்டின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்காவாகும்.
2.NTPC Renewable Energy (NTPC REL) signed an MoU with the union territory of Ladakh on July 13 to set up India’s first green Hydrogen Mobility project in Ladakh.
லடாக் பகுதியில் நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் இயக்கத் திட்டத்தை உருவாக்குவதற்காக தேசிய அனல்மின் கழகத்தின் துணை நிறுவனமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமும் (NTPC REL), லடாக் யூனியன் பிரதேசமும் ஜூலை 13 ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திட்டுள்ளன.
3.The Union Territory of Ladakh became the first ever to vaccinate all its residents and the guest population with the first dose of COVID-19 vaccine.
லடாக் யூனியன் பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு முடிக்கப்பட்டுள்ளது.
4.National Thermal Power Corporation’s (NTPC) Simhadri Super Thermal Power Plant in Visakhapatnam has commissioned a 10 MW floating solar plant, which is part of the 25 MW plant. It is India’s largest floating installation as on date.
விசாகப்பட்டினத்தில் உள்ள தேசிய வெப்ப மின் கழகத்தின் (NTPC) சிம்ஹாத்ரி சூப்பர் வெப்ப மின் நிலையம் 10 மெகாவாட் மிதக்கும் சூரிய ஆலையை செயல்படுத்தியுள்ளது, இது 25 மெகாவாட் ஆலையின் ஒரு பகுதியாகும். இன்றைய தேதிப்படி, இதுவே இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலையாகும்.
5.The Union Minister Dr Jitendra Singh discussed with scientific experts the modalities of installing the latest UV-C Disinfection Technology in the Parliament House, on the eve of the upcoming session on July 19. The technology has been developed by the Council of Scientific & Industrial Research (CSIR).
இந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்னிட்டு, பாராளுமன்ற வளாகத்தில் சமீபத்திய யு.வி.-சி கிருமிநாசினி தொழில்நுட்பத்தை நிறுவும் முறைகள் குறித்து விஞ்ஞான வல்லுநர்களுடன் ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள் கலந்துரையாடினார். இந்த தொழில்நுட்பத்தை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) உருவாக்கியுள்ளது.
International
6.The Union Minister for Tourism G. Kishan Reddy chaired the BRICS Tourism Ministers’ meeting on 13 July, 2021, as part of India’s BRICS chairship.
பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமையேற்பதன் ஒரு பகுதியாக ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கிஷண் ரெட்டி அவர்கள் ஜூலை 13 அன்று பிரிக்ஸ் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா என அனைத்து உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர். பிரிக்ஸ் நாடுகளிடையே சுற்றுலாவை வளர்க்கும் வகையில் பிரிக்ஸ் அமைச்சர்கள் கூட்டத்தை இந்தியா நடத்தியது.
7.The Union Minister of Finance Nirmala Sitharaman and the Finance Minister of Bhutan Mr Lyonpo Namgay Tshering jointly launched BHIM–UPI in Bhutan. Bhutan is the first country to adopt UPI standards for its QR deployment.
ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் பூடான் நிதி அமைச்சர் திரு லியோன்போ நாம்கே ஷெரிங்க் ஆகியோர் இணைந்து BHIM-UPI-யை பூடானில் காணொலி நிகழ்ச்சி மூலம் அறிமுகப்படுத்தினர். இதன்மூலம், பீம் செயலி மற்றும் யுபிஐ தரநிலைகளை ஏற்றுக்கொண்டுள்ள முதல் நாடாக பூடான் திகழ்கிறது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Where is India’s single largest solar park to be built?
A.Bhilai
B.Khavada
C.Ladakh
D.Visakhapatnam
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய பூங்கா எங்கே கட்டப்பட உள்ளது?
A.பிலாய்
B.கவாடா
C.லடாக்
D.விசாகப்பட்டினம்
2.UV-C Disinfection Technology was developed by
A.ICMR
B.ICAR
C.CSIR
D.DRDO
யு.வி-சி கிருமிநாசினி தொழில்நுட்பம் எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டது?
A.ICMR
B.ICAR
C.CSIR
D.DRDO
3.Where is India’s first green Hydrogen Mobility project to be setup?
A.Bhilai
B.Khavada
C.Ladakh
D.Visakhapatnam
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் இயக்கத் திட்டம் எங்கு அமைக்கப்படுகிறது?
A.பிலாய்
B.கவாடா
C.லடாக்
D.விசாகப்பட்டினம்
4.Which organisation is setting up Renewable Energy Park at Rann of Kutch?
A.NTPC ESC
B.NTPC NVVN
C.NTPC REL
D.NSPCL
குஜராத்தின் கட்ச் பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவை அமைக்கும் அமைப்பு எது?
A.NTPC ESC
B.NTPC NVVN
C.NTPC REL
D.NSPCL
5.Which is the first Union Territory to vaccinate all its residents?
A.Puducherry
B.Lakshadweep
C.Ladakh
D.Jammu and Kashmir
அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்ட முதல் யூனியன் பிரதேசம் எது?
A.புதுச்சேரி
B.லட்சத்தீவு
C.லடாக்
D.ஜம்மு-காஷ்மீர்
6.Which is India’s largest floating solar power plant as on date?
A.Anantapur Solar Power Plant
B.Mandasur Solar Power Plant
C.Singrauli Solar Power Plant
D.Simhadri Solar Power Plant
இன்றைய தேதிப்படி, இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் எது?
A.அனந்தபூர் சூரிய மின் நிலையம்
B.மண்டசூர் சூரிய மின் நிலையம்
C.சிங்க்ராலி சூரிய மின் நிலையம்
D.சிம்ஹாத்ரி சூரிய மின் நிலையம்
7.Who chaired the BRICS Tourism Ministers’ meeting on 13 July, 2021?
A.L. Murugan
B.Jitendra Singh
C.Amit Shah
D.G. Kishan Reddy
ஜூலை 13, 2021 அன்று பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
A.எல்.முருகன்
B.ஜிதேந்திர சிங்
C.அமித் ஷா
D.ஜி. கிஷன் ரெட்டி
8.Simhadri Super Thermal Power Plant is located in
A.Bhilai
B.Khavada
C.Ladakh
D.Visakhapatnam
சிம்ஹாத்ரி சூப்பர் வெப்ப மின் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
A.பிலாய்
B.கவாடா
C.லடாக்
D.விசாகப்பட்டினம்
9.Which is the first country to adopt UPI standards?
A.Bangladesh
B.Maldives
C.Bhutan
D.Nepal
யுபிஐ தரநிலையை ஏற்றுக்கொண்ட முதல் நாடு எது?
A.வங்கதேசம்
B.மாலத்தீவுகள்
C.பூட்டான்
D.நேபாளம்
DOWNLOAD Current affairs -14 JULY- 2021 PDF
MAY MONTH FULL CURRENT AFFAIR PDF