TNPSC CURRENT AFFAIRS PDF –15th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 15 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.Tamil Nadu Minister for Medical and Family Welfare Ma. Subramanian launched the Pneumococcal conjugate vaccine for children under the age of five years at a public health centre at Poonamallee.

தமிழ்நாட்டில் உள்ள 9.23 லட்சம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான “நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி” (PCV) செலுத்தும் திட்டத்தினை தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு பொது சுகாதார மையத்தில் தொடங்கி வைத்தார்.

India

2.The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the Memorandum of Understanding (MoU) between the Ministry of Health & Family Welfare of the Government of the Republic of India and the Ministry of Health of the Kingdom of Denmark on Cooperation in the field of Health and Medicine.

சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையில் ஒத்துழைப்பிற்காக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் டென்மார்க் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

3.The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the Memorandum of Understanding (MoU) between the Ministry of Steel of the Republic of India and the Ministry of Energy of the Russian Federation on cooperation regarding coking Coal, which is used for Steel making.

எஃகு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கோக்கிங் நிலக்கரி தொடர்பான ஒத்துழைப்பிற்காக இந்திய எஃகு அமைச்சகம் மற்றும் ரஷிய எரிசக்தி அமைச்சகத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4.The Union Cabinet chaired by the Prime Minister Narendra Modi has approved the Eleventh Extension of the term of the Commission constituted under Article 340 of the Constitution to examine the issue of Sub-categorization within Other Backward Classes (OBCs) in the Central List by 6 months beyond 31st July 2021 and upto 31st January 2022.

மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்தலை ஆய்வு செய்ய அரசியலமைப்பின் 340-வது பிரிவின் படி அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் கால அவகாசத்தை 11-வது முறையாக நீட்டிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஜூலை 31, 2021 முதல் ஜனவரி 31, 2022 வரை ஆறு மாத காலத்திற்கு ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்படவுள்ளது.

5.The Cabinet Committee chaired by the Prime Minister Shri Narendra Modi has approved increasing the Dearness Allowance to Central Government employees and Dearness Relief to pensioners with effect from 01.07.2021 to 28% representing an increase of 11% over the existing rate of 17% of the Basic Pay/Pension.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும், ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் உயர்த்தி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஜூலை 1, 2021 முதல் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 17 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 28 சதவீதமாக, அதாவது 11 சதவீதம், உயர்த்தி வழங்கப்படவுள்ளது.

6.The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi today has given its approval for changing the nomenclature & mandate of North Eastern Institute of Folk Medicine (NEIFM) as North Eastern Institute of Ayurveda & Folk Medicine Research (NEIAFMR) for imparting quality Education and Research in Ayurveda & Folk Medicine at Pasighat, Arunachal Pradesh.

அருணாச்சலப் பிரதேசத்தின் பசிகாட்டில் உள்ள ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ மையத்தில் தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியை வழங்குவதற்காக, வடகிழக்கு நாட்டு மருத்துவ மையத்தை  வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்று பெயர் மாற்றி ஆணை பிறப்பிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

7.The Union Cabinet chaired by the Prime Minister Narendra Modi has approved continuation of the Centrally Sponsored Scheme (CSS) for Development of Infrastructure Facilities for Judiciary for further five years from 01.04.2021 to 31.03.2026 at a total cost of Rs.9000 crore, out of which Central share will be Rs.5357 crore including Rs.50 crore for the Gram Nyayalayas Scheme and their implementation in Mission Mode through National Mission for Justice Delivery and Legal Reforms.

நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய நிதியுதவித் திட்டத்தை 01.04.2021 முதல் 31.03.2026 வரை ரூ. 9000 கோடி செலவில் மேற்கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்கான ரூ. 5357 கோடியில் கிராம நியாயாலயா திட்டங்களுக்கு‌ ரூ. 50 கோடி வழங்கப்படவுள்ளது. இதையடுத்து, தேசிய நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் இயக்கம் வாயிலாக கிராம நியாயாலயா திட்டங்கள், இயக்க கதியில் அமல்படுத்தப்படவுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Pneumococcal conjugate vaccine in Tamil Nadu was launched by

A.M.K. Stalin

B.Banwarilal Purohit

C.Thangam Thennarasu

D.Ma. Subramanian

தமிழ்நாட்டில் நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

A.மு.க. ஸ்டாலின்

B.பன்வாரிலால் புரோஹித்

C.தங்கம் தென்னராசு

D.மா. சுப்பிரமணியன்

2.North Eastern Institute of Ayurveda & Folk Medicine Research (NEIAFMR) is located in

A.Arunachal Pradesh

B.Assam

C.Meghalaya

D.Chhattisgarh

வடகிழக்கு ஆயுர்வேத மற்றும் நாட்டுப்புற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (NEIAFMR) எங்கு அமைந்துள்ளது?

A.அருணாச்சல பிரதேசம்

B.அசாம்

C.மேகாலயா

D.சத்தீஸ்கர்

3.What is the increased Dearness Allowance for Central Government employees?

A.18%

B.20%

C.25%

D.28%

மத்திய அரசு ஊழியர்களுக்கான அதிகரித்த அகவிலைப்படி என்ன?

A.18%

B.20%

C.25%

D.28%

4.With which country, the Ministry of Health & Family Welfare has signed an MoU on Cooperation in the field of Health and Medicine?

A.Denmark

B.Russia

C.Germany

D.France

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எந்த நாட்டோடு சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?

A.டென்மார்க்

B.ரஷ்யா

C.ஜெர்மனி

D.பிரான்ஸ்

5.With which country, the Ministry of Health & Family Welfare has signed an MoU on cooperation regarding coking Coal?

A.Denmark

B.Russia

C.Germany

D.France

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் எந்த நாட்டுடன் நிலக்கரி கோக்கிங் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?

A.டென்மார்க்

B.ரஷ்யா

C.ஜெர்மனி

D.பிரான்ஸ்

6.What is the mission through Gram Nyayalayas Scheme implemented?

A.NMSSL

B.NMSDL

C.NMCSIR

D.NMJDLR

கிராம நியாயாலய திட்டம் எந்த மிஷன் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது?

A.NMSSL

B.NMSDL

C.NMCSIR

D.NMJDLR

7.Pneumococcal conjugate vaccine is for

A.Old age persons

B.Children

C.Pregnant women

D.Covid-19

நிமோகோகல் கான்ஜுகேட் தடுப்பூசி யாருக்காக/ எதற்காக செலுத்தப்படுகிறது?

A.வயதானவர்கள்

B.குழந்தைகள்

C.கர்ப்பிணி பெண்கள்

D.கோவிட் -19

DOWNLOAD  Current affairs -15 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: