TN Police Constable
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குடும்பத்திலிருந்து காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வருகிற 25-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது இந்த தேர்வை எவ்வாறு வெற்றி கொள்வது என சில தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
இந்த தேர்வு மொத்தம் என்பது நிமிடங்களுக்கு நடைபெறும் என்பது கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
உளவியல் பகுதியில் இருந்து 30 கேள்விகளும் பொது அறிவு பகுதியில் இருந்து 50 கேள்விகளும் கேட்கப்படும்.
பெரும்பாலான நபர்கள் உளவியல் பகுதியில் நன்றாகவும், இன்னும் சிலர் பொது அறிவு பகுதியில் சிறப்பாகவும் அவர்களால் விடையளிக்க முடியும். நீங்கள் எந்த பகுதியில் அதிக வினாக்களை விடையளிக்க முடியும் என்று இதுவரை நீங்கள் படித்ததை பொருத்து மாதிரி தேர்வுகளை எழுதி உங்கள் நிலையை அறிந்து கொண்டிருக்கலாம்.
மாதிரித் தேர்வு எழுத விரும்புபவர்கள்
TN Police Constable Model Test
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஐ நீங்கள் ஒருமுறை எடுத்துப் பார்ப்பது மிகவும் நன்று இதில் எந்த மாதிரியான வினாக்கள் தொடர்ந்து கேட்கப் படுகின்றன என்பது வரவிருக்கும் தேர்வுக்கு தயாராவதற்கு நிச்சயம் உதவும்.
? கட்-ஆப் மதிப்பெண் என்னவாக இருக்கும்
முந்தைய ஆண்டு வெளியிடப்பட்ட கட் ஆப் மதிப்பெண்கள்:
2019 PC Expected Cut Off Marks:
இந்த வருடம் நிச்சயமாக முந்தைய ஆண்டை விட கட் ஆப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது.
பொதுப்பிரிவினருக்கு இல் இருந்து 50- (+/- 3) வரை இருக்கலாம்.
MBC – 48 -(+/- 3)
SC -42 -(+/- 3)
உளவியல் மற்றும் கணித பகுதியில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள்:
1. ஒத்தத் தன்மை
2. எண்தொடர்பான வகைக் கணக்குகள்
3. எழுத்துத் தொடர்பான வகைக் கணக்குகள்
4. எழுத்து வரிசை
5, கருத்தியல் தொடர்பான வார்த்தைகள்
9. கால அளவைகள்
10. எண் வரிசை
11. தரவரிசை
12. வகைப்படுத்துதல்
13. தகவல்களைக் கையாளுதல்
14. வயது கணக்குகள்
15. எண்கள் இடமாற்றம்
16. உறவு முறைகள்
17. விடுபட்ட எண் வரைபடம்
18. படவரிசை
19. புதிர்கள் (அ) தரவரிசை அறிதல்
20. தருக்க முறை காரணமறிதல்
21. ஆங்கில அகராதி
22. புதிர் கணக்குகள்
23. விகிதம் மற்றும் விகிதாச்சாரம்
24. மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம
25. தனிவட்டி
26. கூட்டு வட்டி
27. சுருக்குதல்
குறிப்பிட்டுள்ள அனைத்து பகுதிகளையும் ஒருமுறை பார்த்து செல்வது நிச்சயம் தேர்விற்கு உதவும் எளிமையான கேள்வி மட்டுமே கேட்கப் படும் என்பதால் கேட்கப்படும் 30 கேள்விகளுக்கும் சரியாக விடை அளிக்க அதிகம் வாய்ப்புள்ளது.
தெரியாத கேள்விகளை அதிகநேரம் முயற்சி செய்து கொண்டிருப்பது நேரத்தை வீணடிக்கும் ஆதலால் விடை வராத கேள்விகளை தவிர்த்து அதற்கு அடுத்து உள்ள எளிமையான கேள்விகளுக்கு விடை அளிக்க முயற்சி செய்யுங்கள் அது உங்களது மதிப்பெண்களை அதிகப்படுத்தும் நேரத்தை மிச்சப்படுத்தும் இறுதியில் நேரமிருப்பின் தெரியாத கேள்விகளை முயற்சிசெய்து விடையளிக்கலாம் .கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால் கொடுக்கப்பட்டுள்ள 4 ஆப்ஷனை யும் பாருங்கள் அதில் எந்த 2 ஆப்ஷனை நீக்க முடியும் என்று பார்த்து மீதம் இருக்கக்கூடிய ஆப்ஷனை பயன்படுத்தி அந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முற்படுங்கள்.
நேர மேலாண்மை:
எந்த ஒரு தேர்வு எழுதும் போதும் நேர மேலாண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆதலால் குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்த தேர்வு எழுதி முடிக்க நீங்கள் விரைவாக பதிலளிக்க வேண்டும் புதியதாக தேர்வு எழுதுவோர் உங்களது நேரம் எவ்வாறு செல்கிறது என்பது உங்களுக்கு தெரியாது அதனால் ஒரே கேள்வி அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கவும்.
இந்தத் தேர்வை பொருத்தவரை சுலபமாக இருக்கக்கூடிய வினாக்கள் 60 லிருந்து 70 % கண்டிப்பாக உள்ளது. அதாவது ஐம்பதிலிருந்து அறுபது கேள்விகள் சுலபமானதாகவும் மீதி இருக்கக் கூடிய கேள்விகள் சற்று கடினமானதாகும் இருக்கும். இந்த 50 வினாக்களுக்கு நீங்கள் சரியாக விடை அளித்தால் நிச்சயமாக உங்களால் இந்த தேர்வில் வெற்றிபெற முடியும். அந்த 50 கேள்விகளை எது என்று தேடி விடையளிப்பது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. ஆதலால் தெரியாத கேள்விக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டாம்.
பகுதி அ வில் இருக்கக்கூடிய 50 வினாக்களில் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டியது.
அறிவியல் பகுதி அறிவியல் பகுதியில் இருக்கக்கூடிய உயிரியலில் மிக அதிக முக்கியத்துவம் கொடுங்கள். உயிரியலில் உடல் சார்ந்த தகவல்கள் நோய் சார்ந்த தகவல்கள், அதன் அறிகுறிகள், நோய்க்கான தடுப்பு முறைகள், மேலும் அதற்கான காரணிகள் விட்டமின் சார்ந்த தகவல்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் பற்றிய அடிப்படை வினாக்கள் இவற்றை தெளிவாக படித்துக் கொள்ளவும்.
முந்தைய வினாத்தாள்களை எடுத்து கேட்கப்பட்ட வினாக்கள் அந்த பகுதிகளை மீண்டும் ஒருமுறை திருப்புதல் செய்யவும்.
அமிலம் காரம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படக்கூடிய வேதியல் பொருட்கள் சலவை சோடா சமையல் சோடா இதுபோன்ற மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது தினசரி வாழ்வில் பயன்படக்கூடிய ஒவ்வொரு வேதியல் சார்ந்த தகவல்களையும் படித்துக்கொள்ளுங்கள்.
மேலும் இயற்பியல் பொறுத்தவரை அளவீடுகள் ஏற்கனவே சொன்னதுபோல் பயன்பாட்டு வினாக்கள் கேட்கப்படும் அடிப்படை விதிகள் எடுத்துக்காட்டாக நியூட்டனின் மூன்றாம் விதி இரண்டாம் விதி முதல் விதி இவை எல்லாம் எங்கு பயன்படுகிறது நம் வாழ்வில் எந்த செயல்களில் இந்த விதிகள் பயன்படுகின்றன போன்ற எளிமையான வினாக்கள் நிச்சயமாக கேட்கப்படும்.
நீங்கள் படிக்க வேண்டியது தமிழ்ப் பகுதி தமிழில் இருக்கக்கூடிய நூல் நூலாசிரியர் நூலின் சிறப்புப் பெயர்கள் ஆசிரியருக்கான சிறப்புபெயர்கள் இலக்கணத்தில் இருக்கக்கூடிய அடிப்படை வினாக்கள் வினா விடை வகைகள் வாக்கிய வகைகள் மேலும் அடிப்படை இலக்கண குறிப்பு வினையாலணையும் பெயர் வினைத்தொகை ஒரு சொற்றொடர் இதுபோன்ற எளிமையான இலக்கண குறிப்புகளையும் உவமை உருவகம் இது போன்ற இலக்கண பகுதிகளையும் ஒருமுறை திருப்புதல் செய்து கொள்ளவும். தமிழ் பகுதியில் இருந்து உங்களுக்கு குறைந்தபட்சம் 10 வினாக்கள் கேட்கப்படும். இதற்கு நீங்கள் குறைந்த நேரம் செலவிட்டால் உங்களால் எளிமையாக மதிப்பெண் பெறமுடியும்.
அடுத்ததாக நீங்கள் படிக்க வேண்டியது பொருளியல் பகுதி பொருளாதாரம் சார்ந்த நடப்பு நிகழ்வுகள் மேலும் பொருளாதாரம் சார்ந்த முக்கிய திட்டங்கள், இப்போது கொண்டுவரப்பட்ட மசோதாக்கள், இன்றைய பொருளாதார நிலை அதை சார்ந்த தகவல்களை நிச்சயமாக படித்துக் கொள்ளவும் மற்ற பகுதியில் இருந்து எளிமையான நாட்கள் மட்டுமே கேட்கப்படும். அவற்றை ஓரளவு நீங்கள் படித்தால் போதுமானது. எடுத்துக்காட்டாக வரலாறு சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்தது இந்திய தேசியக் கட்சியில் இருக்கக்கூடிய பாரதியார் பெரியார் போன்ற தலைவர்கள் பற்றிய தகவல்கள் வரை நீங்கள் ஏற்கனவே படித்ததுதான். குடிமையில் இருக்ககூடிய அடிப்படை வினாக்களை படித்துக் கொள்ளவும் இவையே தேர்வுக்கு போதுமானது இதைத்தாண்டி புவியியல் மற்றும் நடப்புகளை ஒருமுறை வாசித்துக் கொள்ளவும்.