இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2019
ஆர்பிஐ என அழைக்கப்படும் வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான “பி” கிரேடு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கி பணியே குறிக்கோளாக கொண்டு படித்து வரும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையவும்.
மொத்த காலியிடங்கள்: 196
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Officers in Grade ‘B’(DR)- General
காலியிடங்கள்: 156
பணி: Officers in Grade‘B’(DR)- DEPR
காலியிடங்கள்: 20
பணி: Officers in Grade ‘B’(DR)- DSIM
காலி.யிடங்கள்: 23
மேற்கண்ட 3 பணியிடங்களில் பொருளாதார கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான துறையில் 20 பணியிடங்களும், புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மைத் துறையில் 23 பணியிடங்களும், பொதுப் பிரிவில் 156 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தகுதி: பொதுப் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். DEPR மற்றும் DSIM பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் துறைசார்ந்ச பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்ககை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 01.09.2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 30 வயதிற்குள்இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். எம்.பில் முடித்தவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பில் 32 என்றும், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பு 34 ஆகும்.
எழுத்துத் தேர்வு: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வு தாள் 1, தாள் 2, தாள் 3 என மூன்று எழுத்துத்தேர்வுகளாக நடைபெறும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: தமிழகத்தில் மட்டும் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி
விண்ணப்பக்கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.rbi.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
RBI recruitment notification PDF
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதி: 21.09.2019
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 11.10.2019
பொது, DEPR, DSIM துறைக்கான தாள் 1 தேர்வு நடைபெறும் தேதி: 09.11.2019
பொதுத் துறைக்கு மட்டுமான தாள் 2 தேர்வு தேதி: 01.12.2019
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.10.2019
athiyaman team providing all latest notifications regarding TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, TNPSC Jobs, TN Police Jobs, TN SI Exams, TN PC Police Exams, TRB Jobs, TN TET Jobs, Court Jobs, Aavin Jobs, E-Court Jobs, Navy Jobs, TN MRB Jobs, RPF Exams, Army Jobs, Banks Jobs, RRB, SSC, Defence, Medical Jobs, LIC Jobs, College Jobs, ESIC Jobs, New Jobs in Govt Department, TN EB Jobs, Tangedco Jobs, FCI Jobs, Food Corporation Jobs, TNUSRB Jobs, RRB NTPC, Paramedical Jobs, UPSC Jobs and All other Govt Job Details.