TN FOREST WATCHER EXAM 2019 – Online Mock Test

 TN FOREST WATCHER EXAM 2019 – Online Mock Test

தமிழ்நாடு வனத்துறையில் இருந்த நடத்தப்படும் மனம் காவலர் பணியிடங்கள் காண ஆன்லைன் தேர்வு எவ்வாறு எழுதுவது என்ற முழுவிவரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது மாதிரி தேர்வு எழுதுவதற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது இந்த லிங்கை பயன்படுத்தி மாதிரி தேர்வை பயிற்சி செய்து கொள்ளுங்கள்

 

Click here to Take Online Model Test

Please Read All the Instructions

Negative Marking for every wrong Answer: NIL
தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைவு இல்லை.

Please Note: In Actual Examination, the details will be as below
CBT of 150 MCQs: 3 Hours (180 minutes)
குறிப்பு: அசல் தேர்வில் 3 மணி (180 நிமிடங்கள்) நேரத்தில் 150 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்

General Instructions for Actual Examination:
அசல் தேர்விற்கான பொதுவான அறிவுரைகள்:

1. Reference is made to your registration for Forest Watcher
தங்களுடைய பதிவிற்கான குறியீடு வனக்காவலர் தேர்வுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2. Please ensure that you are not in possession of any prohibited items and you must ensure that you only have your Admit Card and ID proof (in original) with you.
தங்களுடைய நுழைவுச் சீட்டு மற்றும் ஆளறி அடையாள அட்டை (அசல்) ஆகியவற்றைத் தவிர வேறு ஏதேனும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தங்கள் வசம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

3. On the Computer Screen available in front of you, you are required to type your Registration Number & PASSWORD as indicated on your Admit Card.
தங்களுடைய நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள பதிவெண் மற்றும் கடவுச்சொல்லை தங்களின் எதிரில் உள்ள கணினித்திரையில் பதிவு செய்ய வேண்டும்.

4. Please read the Instructions carefully, then click on I HAVE READ THE INSTRUCTIONS.
கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமுடன் படித்த பிறகு I HAVE READ THE INSTRUCTIONS என்பதனை சொடுக்க வேண்டும்.

5. You will be required to go through a SAMPLE TEST before you access the Main Examination.
அசல் தேர்விற்கு செல்லும் முன்னர் மாதிரித் தேர்வினை மேற்கொள்ள வேண்டும்.

6. Note that the items listed below are strictly NOT allowed inside the examination centre campus: Mobile Phone, Bag, Handbag, Water Bottle, Papers, notes, books, calculator, electronic gadgets, etc. It is clarified that there shall be no arrangements at the Examination Centre for keeping the aforesaid items. If any item is lost, the Centre or Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC) will not be responsible for such loss. Candidates are, therefore, advised either not to carry the aforementioned items to the test centre or to make their own arrangements for keeping such items in safe custody at their sole risk. Any candidate found using or to be in possession of such unauthorized material or indulging in copying or adopting unfair means is liable to be summarily disqualified.

கீழ் குறிப்பிட்டுள்ள பொருட்கள் தேர்வுக் கூடத்தில் வைத்திருக்க கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது. கைப்பேசி, பை, கைப்பை, தண்ணீர் புட்டி, தாள்கள், குறிப்புகள், புத்தகம், கணிப்பொறி, மின்சாதனப் பொருட்கள் ஆகியன. மேற்குறிப்பிட்ட பொருட்களை தேர்வு மையங்களில் பாதுகாப்பாக வைக்க குழுமத்தால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. தேர்வு மையத்தில் தங்களுடைய பொருட்கள் ஏதேனும் தொலைந்துவிடும்பட்சத்தில் அவ்வாறு தொலையும் பொருட்களுக்கு தேர்வு மையம் அல்லது தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் பொறுப்பேற்காது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய பொருட்களை தேர்வு மையத்திற்கு எடுத்துவர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் அல்லது மேற்குறிப்பிட்ட பொருட்களை அவர்களின் சொந்த பொறுப்பில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அனுமதிக்கப்படாத பொருட்களை உபயோகப்படுத்துதல் அல்லது கொண்டு வருதல் மற்றும் நகல் எடுத்தல் அல்லது தவறான வகையில் ஈடுபடுத்துவதோ கண்டறியப்பட்டால் எந்தவித அறிவிப்புமின்றி தகுதி இழப்பு ஏற்படுத்தப்படும்.

7. In case you face any technical issue while logging into the examination or during the exam, please contact the Invigilator immediately to address the issue. You are requested to avoid touching the wires and cables as it could lead to the computer shutting down.

தேர்விற்கு உள்நுழையும் பொழுதோ அல்லது தேர்வு நடைபெறும்பொழுதோ ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் தேர்வு கண்காணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். மேலும் கணினி தொடர்பான ஒயர்களையும் கேபிள்களையும் தொட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செய்தால் இணையவழி துண்டிப்பிற்கு வழிவகுக்கும்.

8. In the event of any technical issue faced during the examination, Candidates are requested to be seated inside the lab for further instructions by the examination conducting authority. Any candidate walking out of the lab before the completion of the exam time i.e. the stipulated 3 hour (180 minutes), without the permission of examination functionaries such candidates under any circumstances will not be permitted to re-enter the examination lab and it may also be noted that his/her candidature will be cancelled. On completion it is mandatory to handover the used scribble pad back to the Invigilator.

தேர்வு நடைபெறும் பொழுது ஏதேனும் தொழில்நுட்ப இடையூறுகள் ஏற்பட்டால் விண்ணப்பதாரர்கள் தேர்வு நடத்தும் அதிகாரியிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை தங்களுடைய இருக்கையிலே அமர்ந்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் எவரும் தேர்விற்கு ஒதுக்கப்பட்டுள்ள மூன்று மணி நேரத்திற்கு (180 நிமிடங்கள்) முன்பு எந்த சூழ்நிலையிலும் அனுமதியின்றி வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வாறு வெளியேறினால் அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு முடிந்த பின்னர் தங்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

9. Please make sure you sign in the space provided against your details in the Attendance Sheet. Signing on the Attendance Sheet is mandatory and without signing the attendance sheet your candidature will be NULL and VOID.

வருகைப்பதிவேட்டில் தங்களுக்கு அளிக்கப்பட்ட இடத்தில் கையொப்பமிட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட வேண்டியது அவசியமானதாகும். அதில் கையொப்பமிடவில்லையெனில் தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

10. Candidates are NOT required to provide their personal particular like mobile no., email id, address etc. to anybody in or outside the centre to appear in the test.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் போன்றவற்றை தேர்வு கூடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் யாரிடமும் பகிர வேண்டிய அவசியமில்லை.

11. All Examination Labs are under Video Surveillance and all activities of candidates are being closely monitored. You are therefore strictly cautioned not to indulge in any unfair means. Such activities would lead to cancellation of your candidature for this exam and you may also be debarred from future examinations conducted by Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee.

அனைத்துத் தேர்வுத் கூடங்களில் அனைத்து செயல்களும் கண்காணிப்பு கேமரா மூலம் நுணுக்கமாகக் கண்காணிக்கப்படும். ஆகையால் விண்ணப்பதாரர்கள் எந்தவித தவறான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுவதுடன் அவ்வாறு செய்தால் தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு உண்டு என்பதுடன் அடுத்து வரும் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் நடத்தும் தகுதித் தேர்வில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்படும்.

About Actual Question Paper:
அசல் கேள்வித்தாள் குறித்து

1) The Question Paper consists of multiple choice objective type questions with four options out of which only one is correct.

கேள்வித்தாள் கொள்குறி வகையில் நான்கு விடைகளில் மூன்று விடை தவறாகவும் ஒன்று மட்டும் சரியாகவும் இருக்கும்.

2) The computer based examination will be Bi-lingual i.e. English & Tamil.

இணையவழித் தேர்வு ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கும்.

3) There is a TIMER (Clock) available on the TOP RIGHT HAND CORNER of the Screen; you are requested to keep an eye on the TIMER (Clock) for knowing the time remaining for the completion of the examination.

கடிகாரம் கணினித்திரையின் வலது பக்க மேல் மூலையில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை அடிக்கடி கண்காணித்து மீதம் இருக்கும் நேரத்தை தெரிந்துகொண்டு தேர்வினை முடிக்கவும்.

4) Each question carries equal marks.

அனைத்து கேள்விகளுக்கும் சமமான மதிப்பெண் அளிக்கப்படும்.

5) For each correct answer candidate will get equal marks. No mark/s will be deducted for incorrect answer. Also, No mark/s will be deducted for unanswered questions.

சரியாக பதிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கு சமமான மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது. அதேபோல விடையளிக்கப்படாத கேள்விகளுக்கும் மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது.

6) Only one question will be displayed on the computer screen at a time. To attempt next question the candidates should click on  or to go back click on  button provided at the bottom of the screen.

ஒரு நேரத்தில் ஒரு கேள்வி மட்டும் கணினித்திரையில் வழங்கப்படும். அடுத்த கேள்விக்கு விடையளிக்க விரும்பினால் கணினித் திரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள  என்பதையும் முன்னர் உள்ள கேள்விக்கு விடையளிக்க விரும்பினால்  என்பதையும் சொடுக்கவும்.

7) The questions can be answered in any order within the given time frame. The candidate should click with the mouse on the correct choice, from the four options given. In case, the candidate does not wish to attempt a question, it can be left unanswered.

வினாக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கால வரையறைக்குள் எந்த முறையிலும் விடையளிக்கலாம். விண்ணப்பதாரர் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விருப்பங்களில் சரியான தேர்வை சொடுக்கவும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கேள்விக்கு விண்ணப்பதாரர் பதிலளிக்க விரும்பவில்லை எனில், அவ்வினா பதில் பதிவு செய்யாததாக விட்டுவிட முடியும்.

8) The candidate can change the option of a question later by selecting a new option in case he/she wishes to. In case candidate does not want to answer the question, he/she can deselect the answer by clicking  button provided against the question.

விண்ணப்பதாரர் ஒருவேளை வினாக்குரிய பதிலை மாற்றி அளிக்க விரும்பினால்  பொத்தானை சொடுக்கி மாற்றி அளிக்கலாம். அதே போல விடையளித்த கேள்விக்கு விடையளிக்க வேண்டாம் என நினைத்தாலும் Erase பொத்தானை சொடுக்கி பதிலை அழிக்கலாம்.

9) To move back and forth between questions, candidates should use the  OR  button or click on the question number on the right hand side of the computer screen where question numbers would be displayed along with the `attempted` and `not attempted` status.The summary of the status of all the questions across all sections would also be displayed on the screen.

விண்ணப்பதாரர்கள் முன்னர் உள்ள வினா அல்லது பின்னர் உள்ள வினாக்களுக்கு விடையளிக்க விரும்பினால் அல்லது  என்பதை சொடுக்கலாம். மேலும் வலது பக்கத்திலுள்ள “attempted” அல்லது “not attempted” நிலையில் உள்ள எண்ணிக்கைகளை சொடுக்குவதன் மூலமும் அந்தந்த கேள்விகளுக்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து கேள்விகளின் நிலைகளையும் கணினித்திரையில் அறியலாம்.

10) The answers will be saved and marked green in right side question palette whenever the candidate goes for next question, by clicking on  OR  button.

விண்ணப்பதாரர்கள்  அல்லது  என்பதை சொடுக்கி வேறு வினாவிற்கு செல்லும்பொழுது அளிக்கப்பட்ட பதில்கள் வலப்பக்கத்திலுள்ள வினாத்தட்டுகளில் (Question Palette) சேமிக்கப்பட்டு பச்சை நிறத்தில் குறிக்கப்படும்.

Note: “Candidates are requested to Click on  only once while moving from 1 question to the other. Clicking the  multiple times will lead to the Page freezing and the exam will have to be restarted.”

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் ஒருமுறை மட்டும்  அல்லது  சொடுக்கவும். பலமுறை சொடுக்கினால் இணையதளம் செயலற்றுபோவதற்கு அல்லது தேர்வு மீண்டும் முதலில் இருந்து தொடங்கவோ நேரிடலாம்.

11) The candidate can change the option of a question later by selecting a new option in case he/she wishes to. In case candidate does not want to answer the question, he/she can deselect the answer by clicking  button provided against the question.

விண்ணப்பதாரர் ஒருவேளை வினாக்குரிய பதிலை மாற்றி அளிக்க விரும்பினால்  பொத்தானை சொடுக்கி மாற்றி அளிக்கலாம். அதே போல விடையளித்த கேள்விக்கு விடையளிக்க வேண்டாம் என நினைத்தாலும்  பொத்தானை சொடுக்கி பதிலை அழிக்கலாம்.

12) Candidates have the option to bookmark a question in case they want to review it at a later stage by clicking on the  button available at the bottom of the screen. The Bookmark on a particular question can be removed by clicking on  button.

விண்ணப்பதாரர்கள் வினாவினை மீண்டும் திருப்பிப் பார்க்க அடையாளம் செய்ய விரும்பினால் கணினித் திரையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள  என்பதை சொடுக்கலாம். அவ்வாறு அடையாளமிட்டதனை நீக்க  என்பதனை சொடுக்கவும்.

13) The question palette at the right of the screen shows the following status of each of the questions numbered

 You have answered the question
 You have not answered the question and marked for review
 You have answered the question but marked for review
 You have not answered the question.

விண்ணப்பதாரர்கள் வினாத்தட்டில் உள்ள எண்கள் கீழ் உள்ள நிலைகளை குறிக்கும்.

 நீங்கள் விடையளித்துள்ளீர்கள்.
 நீங்கள் வினாவிற்கு விடையளிக்காமல் திருப்பிப் பார்க்க அடையாளப்படுத்தி உள்ளீர்கள்.
 நீங்கள் விடையளித்துள்ளீர்கள். ஆனால் திருப்பிப்பார்க்க அடையாளப்படுத்தி உள்ளீர்கள்.
 நீங்கள் வினாவிற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

PS: Questions which are attempted and marked for review would be treated as attempted questions only as long as the candidate does not  the option selected.

குறிப்பு:  பொத்தானை பயன்படுத்தி விடைகளை மாற்றியமைக்காவிடில் விடையளித்த கேள்வி மற்றும் விடையளிக்க அடையாளபடுத்தப்பட்ட கேள்வி ஆகியவை விடையளித்த கேள்விகளாகவே கருதப்படும்.

14) On the completion of the test duration, even if the candidate does not click on the , his test will be automatically submitted by the computer.

சோதனைத்தேர்வு காலம் முடிந்த தருவாயில் விண்ணப்பதாரர்கள்  என்பதனை சொடுக்காவிட்டாலும் தானாகவே கணினியால் சொடுக்கப்படும்.

15) The candidate will not be able to submit the test before completion of the stipulated 3 hours i.e. (180 minutes). The system will automatically submit the test on the completion of stipulated time i.e. 3 hours (180 minutes).

விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு ஒதுக்கப்பட்ட மூன்று மணி (180 நிமிடங்கள்) நேரத்திற்குள் தேர்வினை முடிக்க இயலாது. மூன்று மணி (180 நிமிடங்கள்) நேரத்திற்கு பிறகு தானாகவே கணினியால் தேர்வு முடிக்கப்படும்.

“ALL THE BEST”

“வாழ்த்துக்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: