Daily Current Affairs May 2nd to 10th CA For All Exams -2020

Athiyaman Team Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(May 2nd to 10th – Current Affairs  2020 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : May 2nd to 10th  Current Affairs. 

 

உலக பத்திரிகை சுதந்திர தினம் (World Press Freedom Day) – மே 3

  • பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கங்கள் மதிக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 1991 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஐ உலக பத்திரிகை சுதந்திர தினமாக அல்லது உலக பத்திரிகை தினமாக அறிவித்துள்ளது.
  •  1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் 75 வது ஆண்டு நினைவு தினம் மே 8

இரண்டாம் உலகப்போர்(Second World War) என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். மே 8, 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.மேற்கு ஐரோப்பிய நாடுகள் மே 8- ஐ ‘ஐரோப்பிய வெற்றி தினமாக’ கொண்டாடுகின்றன.

அன்னையர் தினம் – மே 10

  •  ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு  மே 10 ஆம் தேதி அன்று உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
  • அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை தோன்றும். அப்படிப்பட்ட அன்னையைக் கொண்டாடவே உலக அன்னையர் தினம் 1908ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.1
  • 914 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் விடுத்த அறிவிப்பின்படி ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
  •   அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் ஜார்விஸ் என்பவரால் முதன்முதலில் அன்னையர் தினம் அறிவிக்கப்பட்டது. அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது. தனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமை இவரையே சாரும்.

 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி 

  • நவம்பரில் ஸ்பெயினில் நடைபெறுவதாக இருந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் 2021-ல் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 போட்டி நடைபெறவுள்ளது.

‘போஸ்ட் இன்போ’ செயலி

ஊரடங்கு காலத்தில் அஞ்சல்துறை வாடிக்கையாளா்கள் வீடுகளில் இருந்தபடியே அஞ்சல் சேவையைப் பெற, ‘போஸ்ட் இன்போ’ என்னும் செயலி  தபால் துறை அறிமுகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பறியும் நிபுணர் ‘பெலூடா’ பெயரில் கரோனா வைரஸை விரைவாக கண்டறியும் சோதனை அறிமுகம்

  • கரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறிய உதவும் சோதனை முறை இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (சிஎஸ்ஐஆர்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முறைக்கு பிரபல துப்பறியும் கதாபாத்திரமான பெலுடாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லிபல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற ஒரு பரிசோதனைக்கு, ‘டிடெக்டர் ஷெர்லாக்’ என்று பெயரிட்டுள்ளனர். அதேபோல், இந்தியாவில் சிஎஸ்ஐஆர் கண்டறிந்துள்ள பரிசோதனை முறைக்கு, ‘பெலுடா’ என பெயரிடப்பட்டுள்ளது. இது, மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே கதைகளில் வரும் துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பேப்பர் ஸ்டிரிப் என்று அழைக்கப்படும் நீண்ட காகித துண்டில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த பெலுடா சோதனை முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

பிரதமர் கரீப் கல்யான் திட்டம் (பிஎம்ஜிகேபி)

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், ஏழைகளுக்கு உதவ, மார்ச் 26ம் தேதி அன்று பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் (பிரதமரின் ஏழைகள் நலத்திட்டம்) கீழ், ரூ 1.70 லட்சம் கோடி நிவாரண உதவிகளை மத்திய அரசு அறிவித்தது.

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கோவிட்-19க்கு எதிராகப் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்’ பின்வரும் விதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது:

  1. மொத்தம் 22.12 லட்சம் பொது சுகாதார சேவையாளர்களுக்கு தொண்ணூறு (90) நாட்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு இது காப்பீடு அளிக்கும். இதில் சமுதாய சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவார்கள். கோவிட்-19 பாதித்த நோயாளிளுடன் நேரடியான தொடர்பில் ஈடுபட்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் பரவும் ஆபத்து வாய்ப்பில் இருக்கும் இந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது. கோவிட்-19 தாக்கி எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டாலும் இந்தக் காப்பீடு கிடைக்கும்.
  2. முன் எப்போதும் சந்தித்திராத சூழ்நிலைகள் காரணமாக, கோவிட் – 19 தொடர்பான பொறுப்புகளில் பணியாற்ற  அழைக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை அலுவலர்கள்/ ஓய்வுபெற்ற / தன்னார்வலர்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / ஒப்பந்த / தினசரி கூலி அடிப்படையிலான / தற்காலிக / அயல்பணி அடிப்படையில் மாநில / மத்திய அரசு மருத்துவமனைகள் / மத்திய / மாநில / யூனியன் பிரதேச அரசுகள், எய்ம்ஸ் & INI தன்னாட்சி மருத்துவமனைகள் / மத்திய அமைச்சகங்களின் மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைவரும் இதில் சேர்க்கப்படுவார்கள். சுகாதாரம் மற்றும்  குடும்ப நல அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு உட்பட்டு இந்த நேர்வுகளும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படும்.
  3. பயனாளி வேறு எந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவராக இருந்தாலும், அதற்கும் கூடுதலாக, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்கள் கிடைக்கும்.

சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீட்டு அறிவிக்கை

1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, மத்திய அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 என்னும் எஸ்.ஓ 1199 (இ) எண்ணின் படியான 2020 மார்ச் 23-ம் தேதியிட்ட வரைவு அறிவிக்கையை ஏப்ரல் 11-ஆம்தேதி அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டது.

வரைவு அறிவிக்கையில் காணப்படும் உத்தேச அம்சங்களால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள பொதுமக்களிடமிருந்து, ஆட்சேபனைகள் மற்றும் யோசனைகளை அரசிதழ் அறிவிப்பு மக்களுக்கு வெளியிடப்பட்ட, 60 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பால்  அமைச்சகம் நீண்ட பரிசீலனைக்குப் பின்னர், 2020 ஜூன் 30-ஆம் தேதி வரை அறிவிக்கை காலத்தை நீட்டிக்கும்.

சஞ்சீவனி செயலி

  • கோவிட்-19 நிலைகள் தொடர்பான ஆயுஷை அடிப்படையாகக் கொண்ட மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் சஞ்சீவனி செயலி மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிமுகம் செய்து வைத்தார்.
  •  இந்தச் செயலி ஆயுஷ் அமைச்சகம் மற்றும் MEITYயால் உருவாக்கப்பட்டது.
  • ஆயுஷ் மருந்துகளின் பயன்பாடு, அதற்கான பலன் உள்ளிட்டவை தொடா்பான தகவல்களை பெறுவதற்காக இந்த செயலில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து இதை உருவாக்கியுள்ளன.

புவிசார் குறியீடு

  • ஒவ்வொரு ஊரிலும் தனித்தன்மையுடன் தயாராகும் அல்லது விளையும் உணவுப்பொருட்களுக்கு, அதன் தரம், பாரம்பரியம் மற்றும் மக்களின் பேராதரவை கருத்தில் கொண்டு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது
  • மணிப்பூர் மாநிலத்தில் விளையும் கருப்பு அரிசி மற்றும் காஷ்மீரின் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ‘சாக் ஹாவ்’ என்றும் அழைக்கப்படும் இந்த கருப்பு அரிசி ஊதா நிறத்தில் இருக்கும்.
  • இதில் வைட்டமின், தாதுப்பொருட்கள், ஆந்தோசயானின் உட்பட உடல்நலனுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துகள் உள்ளன
  • இதுபோல காஷ்மீர் குங்குமப்பூவு சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தவும் கற்றல், நினைவாற்றல் திறனை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி

  • இந்தியாவில் 1986 முதலும், தமிழகத்தில் 2001 முதலும் இந்த விளையாட்டு தொடங்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
  • இந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.
  • இந்தியாவில் வளர்ந்து வரும் விளையாட்டுகளில் ‘ஊசூ’ தற்காப்புக்கலை போட்டியும் ஒன்று. இந்த விளையாட்டு சீனாவைத் தாயகமாகக் கொண்டது. ‘ஊ’ என்பதற்கு ‘ராணுவம்’, ‘சூ’ என்பதற்கு பயிற்சி என்பது பொருள். ‘ஊசூ’ என்றால் ராணுவப் பயிற்சி எனப்படும்.
  • இந்திய ‘ஊசூ’ சம்மேளனத்தின் அனுமதியுடன், தமிழ்நாடு ‘ஊசூ’ கழகம் சார்பில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஜூம் செயலி வழியாக  நடைபெற்றது

காவிரி மேலாண்மை ஆணையம்

  • மத்திய அரசின் கட்டுப்பாடில் உள்ள ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம் கொண்டுவர மத்திய அரசானது முடிவு செய்துள்ளது.
  • காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு கடந்த  2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது..

“வந்தே பாரத் திட்டம்”

  • வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியக் குடிமக்களைத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான மிகப் பெரிய முன்னெடுப்பு முயற்சியாக வந்தே பாரத் திட்டத்தை இந்திய அரசு மே 7-ம் தேதி அன்று தொடங்கியது.
  • இந்த “வந்தே பாரத் திட்டம்” முழுவதும் ஏர் இந்தியா நிறுவனத்தினால் மேற்கொள்ளப் படுகின்றது.

 IMD – Indian Meteorological Department

  • முதல்முறையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம்   (IMD – Indian Meteorological Department) வெளியிட்டுள்ளது.
  • ஜம்மு காஷ்மீர், லடாக்கின் வடக்கு பகுதியான கில்ஜித் – பல்திஸ்தான் மற்றும் முசாபராத் ஆகிய பகுதிகள் இந்திய வானிலை ஆய்வு மண்டலத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் மொகபத்ரா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நிலவும் வானிலை குறித்து கடந்த ஆகஸ்ட் முதல் அறிக்கை வெளியிடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
  • தற்போது இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வானிலை நிலவரங்களை ஜம்மு காஷ்மீர் பிரிவு கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • GeM என்பது தேசியப் பொதுக் கொள்முதல் தளமாக அரசாங்கத்தால் நிர்வகிக்கப் படும் ஒரு தளமாகும். இது மத்திய மற்றும் மாநில அரசுகளினால் அதற்குத் தேவைப் படும் சரக்குகள் மற்றும் சேவைகளைக் கொள்முதல் செய்வதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நீக்கியது.. அப்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு திருத்தப்பட்ட புதிய இந்திய வரைபடத்தை வெளியிட்டிருந்தது

இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் 

  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்- 1969இன் கீழ், ஒவ்வொரு பிறப்பு மற்றும் இறப்புகளையும் 21 நாட்களுக்குள் பதிவு செய்வது கட்டாயம் ஆகும்; 
  • தமிழ்நாட்டில் 2000-ஆம் ஆண்டில் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது,
  • தமிழ்நாட்டில் திருத்தியமைக்கப்பட்ட புதிய செயல்திட்டம் (Revamped system). தமிழ்நாட்டில் 01-01-2000 முதல் செயல்பட்டு வருகிறது.
  • இந்திய அளவில் இந்திய தலைமைப் பதிவாளர் – இவர் மத்திய அரசால் நியமனம் செய்யப்படுகிறார்.
  • மாநில அளவில் மாநில முதன்மைப் பதிவாளர் – மாநில அரசு இவரை நியமனம் செய்கிறது.

தமிழகத்தின் முதன்மைப் பதிவாளர் :

தமிழகத்தின் பொதுச் சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர் அவர்களே முதன்மைப் பதிவாளர் ஆவார். இணை இயக்குநர் (State Bureau of Health Intelligence) பிறப்புகள் மற்றும் இறப்புகள் துணை முதன்மைப் பதிவாளராக உள்ளார்.

மாவட்ட அளவில்:

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட வருவாய் அலுவலரே மாவட்டப் பதிவாளராகவும்,

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கூடுதல் மாவட்டப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூங்கில் மாநாடு

  • மூங்கில் வளம் குறித்த மாநாட்டில் காணொளி மூலம் அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை மத்திய இணை அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார். .
  • நூறு ஆண்டுகள் பழமையான இந்திய வனச் சட்டத்தை மோடி அரசு 2017இல் திருத்தியது பற்றிக் குறிப்பிட்ட அவர், இதன் விளைவாக வீடுகளில் மூங்கில் வளர்ப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்றும், இதனால் மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரங்கள் பெருகும் என்றும் கூறினார்.
  • இந்திய வனச் சட்டம்,  1927 என்ற சட்டமானது மூங்கிலைப் புல் வகை இனமாக மாற்றுவதற்காக 2017 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது
  • இந்தியாவின் வடகிழக்குப் பகுதியானது நாட்டின் 60% மூங்கில் இருப்பைக் கொண்டுள்ளது.

CARES திட்டம்

  • Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund தான் இந்த நிதித் திட்டத்தின் முழு பெயர். இது ஒரு அவசர கால நிதித் திட்டம். இந்த திட்டத்தின் வழியாக திரட்டப்படும் பணம், கொரோனா வைரஸ் போன்ற அவசர காலத்தில், பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி செய்ய பயன்படும். 
  • இந்த திட்டப்படி, இந்தியாவுக்கு 1.5 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

சரஸ் சேகரிப்பு

  • மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், புது தில்லியில் உள்ள கிருஷி பவனில் அரசு மின்சந்தை (GeM) தளத்தில் “சரஸ் சேகரிப்பை” May 4   தொடங்கினார். 
  • GeM மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் (DAY-NRLM) தனித்துவ முயற்சியான இந்த சரஸ் சேகரிப்பு, கிராமப்புற சுய உதவிக்குழுக்கள் (சுய உதவிக்குழுக்கள்) தயாரிக்கும் தினசரிப் பயன்பாட்டுத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், கிராமப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் சந்தை அணுகலுடன் மத்திய மாநில அரசு வாடிக்கையாளர்களை சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது
  • தேசிய, மாநில, மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் செயல்படுவோருக்கான முகப்புப் பெட்டிகளை (Dashboard) GeM அளிக்கும். இது, சுய உதவிக் குழுக்களால் பதிவேற்றப்பட்ட தயாரிப்புகளின் எண்ணிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட ஆர்டர்களின் மதிப்பு மற்றும் அளவு பற்றிய நிகழ் நேரத் தகவல்களை அவர்களுக்கு வழங்கும்.

TNPSC Group 2 2A Video Course

TNPSC Group 4 Exam Video Course 

For TNPSC Video Course & Test Batch Call : 8681859181 

 

 

Check All Month Current Affairs

Download May 2nd to 10th  Current Affairs PDF 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

NoDateDownload link
11.01.2020Download PDF
22.01.2020Download PDF
33.01.2020Download PDF
44.01.2020Download PDF
55.01.2020Download PDF
66.01.2020Download PDF
77.01.2020Download PDF
88.01.2020Download PDF
99.01.2020Download PDF
1010.01.2020Download PDF
1111.01.2020
1212.01.2020
1313.01.2020
1414.01.2020
1515.01.2020
1616.01.2020
1717.01.2020
1818.01.2020
1919.01.2020
2020.01.2020
2121.01.2020
2222.01.2020
2323.01.2020Download
2424.01.2020Download
2525.01.2020Download
2626.01.2020Download
2727.01.2020Download
2828.01.2020Download
2929.01.2020Download
3030.01.2020Download
3131.01.2020Download

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us