TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 29 JUNE 2023

CURRENT AFFAIRS –29 JUNE 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ஜூன் 29 நடப்பு கால நிகழ்வுகள்

1. இந்தியாவில் முதல்முறையாக இணையம் மூலம் மண்வள விவரங்களை அறிந்து கொள்ள இணைய பக்கத்தை எந்த மாநிலம் உருவாக்கியுள்ளது?
A. உத்தரகாண்ட்
B. உத்திரபிரதேசம்
C. தமிழ்நாடு
D. கேரளா
குறிப்பு:
 மண்வளத்தை அறிந்து அதற்கு ஏற்ப உரமிடும் முறையை ஊக்குவிக்க தமிழ் மண்வளம் என்ற இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
 இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் காடுகள் சார்ந்த எவ்வகை பயிர்களை சாகுபடி செய்யலாம், தேர்ந்தெடுக்கும் பயிர்களுக்கு எவ்வளவு உரங்களை இடவேண்டும் என்பன போன்ற விவரங்களையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.
 இத்தகைய இணைய பக்கம் இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2. சைபர் குற்றவாளிகளை கண்டறிய எந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
A. Cyber app
B. Cyber alert app
C. Cyber help app
D. Cyber police app
குறிப்பு:
 சைபர் குற்றவாளிகளை கண்டறியும் வகையில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சைபர் அலர்ட் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த செயலியில் சைபர் குற்றவாளிகள் ஏற்கனவே பயன்படுத்திய கைபேசி எண்கள், வங்கி கணக்குகள், சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் முகவரிகள், இணையதளங்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
 இந்த தகவல்கள் சென்னை பெருநகர காவல் துறை சைபர் குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குகளில் இருந்து பெறப்பட்டுள்ளன.
 இதன் மூலம் புதிதாக பதியப்படும் ஒரு சைபர் குற்ற வழக்கிலிருந்து பெறப்படும் கைபேசிகள்,வங்கி கணக்குகள், மின்னஞ்சல்கள் சமூக ஊடக கணக்குகள் ஆகியவை செயலியில் உள்ளீடு செய்யும்போது அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி வேறு எங்கும் சைபர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளாரா அவர் மீது வேறு எங்கும் வழக்குகள் உள்ளனவா என்பதை உடனடியாக கண்டறிய முடியும் .
 இதனால் குற்றவாளியை விரைந்து கண்டறிந்து கைது செய்யும் வாய்ப்பு போலீசாருக்கு கிடைக்கும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. தமிழகத்துக்கும் சீன நாட்டுக்கும் இடையே உள்ள வணிக தொடர்பை உறுதி செய்யும் வகையில் உள்ள தொல்பொருட்கள் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?
A. பூதிநத்தம்
B. அருவி புரம்
C. ராமநாதபுரம்
D. மாளிகைமேடு
குறிப்பு:
 அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெறும் மூன்றாம் கட்ட ஆய்வுப் பணியில் சீனப் பானையோடு உள்ளிட்ட மூன்று பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளது.
 இந்த கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டிய பெருவுடையார் கோவிலில் அருகே உள்ள மாளிகை மேடு பகுதியில் தான் அரண்மனை கட்டப்பட்டதாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றன.
 இதனிடையே மாளிகை வீட்டில் தற்பொழுது மூன்றாம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன.
 இங்கு மாமன்னர் ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள்,சீன வளையங்கள், இரும்பினால் ஆன ஆணிகள் உட்பட இதுவரை 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 இந்த நிலையில் 11-ம் நூற்றாண்டில் தமிழகத்துக்கும் சீன நாட்டுக்கும் இடையிலான வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் சீன பானையோடுகள்,காசு வார்ப்பு,சுடுமண்னால் அலங்கரிக்கப்பட்ட அச்சு,முத்திரை ஆகிய பொருட்கள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

4. வடகிழக்கு பிராந்திய வேளாண் வணிக கழகம் சார்பில் கோஹிமாவில் நடைபெற்ற புவிசார் குறியீடு விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கில் நாகாலாந்து மாநிலத்துக்கு எந்தெந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
A. இஞ்சி, ஆரஞ்சு பழம்
B. ஏலக்காய், அன்னாசிப்பழம்
C. கருப்பு அரிசி, வாழைப்பழம்
D. தக்காளி, வெள்ளரி
குறிப்பு:
 நாகாலாந்தின் தக்காளி,வெள்ளரி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.
 நாகாலாந்தின் வீட்டு தோட்டங்களிலும்,பல தோட்டங்களிலும் அதிக அளவில் வளர்க்கப்படும் இவ்வகை தக்காளி செடிகளில் இருந்து பெறப்படும் தக்காளி பழம் அளவில் சிறியதாக இருப்பதுடன் நீள் வட்ட வடிவமுடன் மிகுந்த சுவையுடன் இருப்பதால் இவ்வகை தக்காளிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
 அதுபோல நாகாலாந்து வெள்ளை பழத்துக்கு அதன் சுவை விருது தன்மைக்காக புவிசார குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
 வட கிழக்கு பிராந்திய வேளாண் வணிக கழகம் சார்பில் கோஹிமாவில் நடைபெற்ற புவிசார் குறியீடு விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
 வேளாண் வணிக கழகமூலம் வடகிழக்கு மாநிலங்களில் ஆங்கிலாக் இஞ்சி, அசாம் லிஜ்ஜி, அருணாச்சலம் ஆரஞ்சு பழம், கருப்பு அரிசி, மணிப்பூர் எலுமிச்சை பழம், சிக்கிம் பெரிய ஏலக்காய், திரிபுரா அண்ணாசி பழம் உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.
 மாநிலங்களில் வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த 13 பொருட்களுக்கு எங்களது வேளாண் வணிகக் கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

5. சந்திராயன் -3 விண்கலம் என்று விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது?
A. ஜூலை 13 2025
B. ஜூலை 13 2024
C. ஜூலை 13 2023
D. ஜூலை 13 2026
குறிப்பு:
 நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் -3 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜூலை 13ஆம் தேதி ஏவ விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
 இதற்கான ஆய்வு பணிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகு சந்திராயன் மூன்று விண்கலம் ஜூலை 13ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
 இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது சந்திராயன்-3 திட்டத்திற்காக மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் லேண்டர், ரோவர் கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 இந்த முறை விண்கலத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.. சந்திராயன் 3 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 அதன் தொடர்ச்சியாக லேண்டர்கலனை ஆகஸ்ட் 22ஆம் தேதி நிலவில் தரையிருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 அதற்கான இறுதிக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று அவர்கள் தெரிவித்தனர்.

6.நாட்டிலேயே முதல்முறையாக எங்கு ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
A. ராய்ப்பூர்
B. சென்னை
C. ஜெய்ப்பூர்
D. நாக்பூர்

குறிப்பு:
 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள சைரன்களில் ஸ்மார்ட் சைரன் என்ற மென்பொருள் பொருத்தப்பட்டிருக்கும்.
 இந்த ஆம்புலன்ஸ் சாலையில் செல்லும்போது அதில் உள்ள ட்ரான்ஸ்மிஸ்டர் ஒரு சமிக்நையை வெளிப்படுத்தும் இந்த தகவல் 200 மீட்டர் தொலைவிற்கு முன்னரே சிக்னலில் உள்ள மென்பொருளில் ரிசிவர் பெற்று ஆம்புலன்ஸ் வரும் திசை குறித்த தகவலை எல் இ டி திரையில் ஒளிபரப்பும்.
 மேலும் சிக்னலில் உள்ள ஒலிபெருக்கி ஆம்புலன்ஸுக்கு வாகன ஓட்டிகள் வழி விடும்படி எச்சரிக்கை செய்யும் எல் இ டி திரையில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடும்படி எச்சரிக்கை வாகனங்களும் ஒளிபரப்பாகும்.
 இந்தத் திட்டம் சென்னையில் 3 தனியார் மருத்துவமனைகளில் 25ஆம் ஆம்புலன்ஸ்கள் மற்றும் 16 போக்குவரத்து சந்திப்புகளில் இந்த சேவை இணைக்கப்பட்டுள்ளது.
 மேலும் 40 போக்குவரத்து சாலை சந்திப்புகளிலும் இந்த சேவை இணைக்கப்பட உள்ளது.

7. அடுத்த மாதம் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்சிஓ) மாநாட்டை முதன்முறையாக எந்த நாடு தலைமை ஏற்க உள்ளது?
A. இந்தியா
B. அமெரிக்கா
C. சீனா
D. ரஷ்யா
குறிப்பு:
 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எஸ் சி ஓ மாநாடு முதன் முறையாக இந்தியா தலைமையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் புது தில்லி ஹால் என்ற பெயரில் இந்தியாவுக்கான அரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 இந்த அறை மினி இந்தியா என்ற வகையில் விளங்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
 பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் சீனா,ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளன.
 இதில் இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களால் ஆன சீனா, ரஷ்யா கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உள்ள அதன் செயலகத்தில் ஏற்கனவே அறைகள் உள்ளன.
 இதில் வரும் ஜூலை நான்காம் தேதி இந்தியா தலைமையில் காணொளியில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் முதன்முறையாக இந்தியாவுக்கான அறையும் எஸ்சிஓ செயலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

8. எந்த மாநிலத்தில் குழந்தைகளின் கல்வி செலவுக்காக பெண்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது?
A. பீகார்
B. மேகாலயா
C. தமிழ்நாடு
D. ஆந்திரா
குறிப்பு:
 ஆந்திரத்தில் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக பெண்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் நான்காவது ஆண்டாக 6,393 கோடியை மாநில அரசு அளிக்கவுள்ளது.
 ஜெகன் அண்ணா அம்மா வோடி என பெயரிடப்பட்ட இத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 43 லட்சம் தாய்மார்களின் வங்கி கணக்கில் தலா 15,000 செலுத்தப்பட உள்ளது.
 இதன் மூலம் ஒன்று பனிரெண்டாம் வகுப்பு வரை 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பலநடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. பனை சிறப்பை போற்றும் வகையில் ‘நெட்டை நெட்டை பனை மரமே’என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
A. வே இறையன்பு
B. மு க ஸ்டாலின்
C. உதயநிதி ஸ்டாலின்
D. மா. சுப்ரமணியன்
குறிப்பு:
 பனை சிறப்பை போற்றும் வகையில் தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பனைக்குறித்த கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 அந்த ஆய்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சேகரிக்கப்பட்ட செய்திகளை ‘நெட்டை நெட்ட பனை மரமே’ என்ற தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 இந்த புத்தகத்தை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்.

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 29 JUNE 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d