TNUSRB Police Constable Exam Question Analysis

TNUSRB Police Constable Exam Question Analysis

ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர்   மாவட்ட/ மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் நிலை சிறைக் காவலர் தீயணைப்ப்பாளர்  போன்ற 8826 பணிக்கு தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் எந்த பகுதியிலிருந்து கேட்கப்பட்டது என்ற விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பொதுஅறிவு கேள்விகள் புத்தகத்தின் பின் புறத்தில் உள்ள வினா விடை பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன.

மேலும் புத்தகத்தில் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்தும் கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்புகள் தெரிந்து கொள்க இதுபோன்ற பகுதியிலிருந்து வினாக்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

 

S.No Topic No.Of.Questions
1 Psychology (Puzzles) 30
2 Physics and Chemistry 10
3 Tamil 9
4 Aptitude 8
5 History 5
6 Geography 5
7 Botany and Zoology 5
8 Economics 4
9 English 3
10 Polity 1

வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை விடைகளை விண்ணப்பதாரர் சரி பார்த்துக் கொள்வதற்காக 27. 8. 2019 அன்று அதிகாரப்பூர்வ இணையதளமான  http://www.tnusrbonline.org/  இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர் .கேள்விகள் மற்றும் விடைகளில் ஏதேனும் மாறுபாடு இருப்பதாக தெரிவிக்க விரும்பினால் அதற்கான முறை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக 3.9. 2019க்குள் இக்குழுமம் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இந்த வினாத்தாளில் சில தவறுகள் உள்ளன சில கேள்விகளில் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது அதற்கான விடைகள் அதிகாரபூர்வ Answer Key –ல் வெளியிடப்படும்.

Page 145 -10th maths Old Book:

சார் அமைப்பின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?

சார்க் அமைப்பின் முதல் மாநாடு  எங்கு நடைபெற்றது என்று கேள்விக்கு சார்  என்று மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது  இது போட்டியாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.

குழப்பத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான கேள்விகள் உளவியல் பகுதியிலிருந்துதான்   கொடுக்கப்பட்டுள்ளது எந்தெந்த கேள்விகள் குழப்பத்தை ஏற்படுத்துமாறு உள்ளன என்று காணலாம்.

      1. A மற்றும் B என்ற இரண்டு எண்களில் ab=0 என்றால் பிறகு
        இந்தக் கேள்விக்கான விடைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியாக உள்ளன
      2. தனித்து நிற்கும் எழுத்து எது என்பதைக் குறிக்கவும் -SMBE
        இந்த கேள்வியில் 4 விடை சரியாக உள்ளது. கடந்த வருடம் கேட்கப்பட்ட கேள்வி திரும்பவும் கேட்கப்பட்டுள்ளது ஆதலால் இந்த கேள்விக்கு  அனைவருக்கும் மதிப்பெண் வழங்கலாம்.
      3. A என்பவர் ஒரு பெண்ணிடம், உன் தாயாரின் கணவரின் தங்கை எனக்கு அத்தை” என கூறினார். A விற்கு அப்பெண் என்ன உறவு?
        இந்த கேள்விக்கான விடை சகோதரி என்று கொடுக்கப்பட்டிருந்தால் சரியாக இருக்கும் ஆனால் தங்கை என்று மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது அக்கா வாய்ப்பு உள்ளது.

      4. இதில் எதன் அடிப்படையில் வரிசைப்படுத்துவது என்ற குழப்பம் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்டது அடிப்படையிலோ அல்லது உபயோகத்தில் உள்ளது அடிப்படையிலோ அல்லது அந்த உலகத்தின் மதிப்பை பொறுத்தா ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் வருகிறது

      5. இந்த கேள்வி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை.
      6. நெடுங்கணக்கில் என்ற வார்த்தை அகராதி முறையில் வரிசைப்படுத்துக என்பதைக் குறிக்கலாம். அப்படி அகராதி முறை வரிசைப்படுத்திய வரிசை படுத்தினால் எந்த எழுத்துகள் அதிக முறை அதே இடத்தில் இருக்கிறது என்று கேட்கப்பட்ட உள்ளதா அல்லது அதிக முறை இந்த வார்த்தையில் எந்த எழுத்துக்கள் உள்ளன என்று கேட்கப்பட்டுள்ள தான் என்ற குழப்பம் வருகிறது.

TN Police (TNUSRB) Answer Key 2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: