அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகள்:
வீட்டிற்கோர் புத்தகசாலை
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு இந்திய அரசு அண்ணா நூற்றாண்டு நாளான 15.9.2009 அன்று சென்னையில், அண்ணா உருவம் பொறித்த சிறப்பு நாணயம் (வெள்ளியில்) ஒன்றை வெளியிட்டது.
- “நான் இன்னும் வாசிக்காத நல்லபுத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்று கூறியவர் ஆபிரகாம் லிங்கன்.
- நடுவண் அரசு அறிஞர் அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு – 2009
- தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கிய ஆண்டு – 2010
அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகள்:
1. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
2. கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு.
3. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
4. சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
5. மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை;
தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.
6. நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
7. இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
8. இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
9. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
10. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
11. வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்!
Download TNPSC App
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் – அறிஞர் அண்ணா
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! – கதே
- இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் நூலகவியலாளருமான சீர்காழி இராமாமிர்தம் ரங்கநாதன் (சீர்காழி. இரா.அரங்கநாதன்] 09.08.1892 – ல் பிறந்தார். இவரது பிறந்த தினம் “தேசிய நூலக நாள்” ஆகும்.
- இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படும் இவர், நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் என்னும் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்.
- நூலகவியலின் சிந்தனைகளுக்காக உலக அளவில் பல பரிசுகளைப் பெற்ற பெருந்தகையாளர். இந்திய அரசு இவருக்குப் பத்ம ஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
- இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நூலகத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
- நூலகவியலின் உயர்பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட “இந்திய நூலகவியல் பள்ளியில்” பணியாற்றினார்.
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்தர நூலகங்களில் உறுப்பினராகவும், உயர்பதவிகளையும் பெற்றிருந்தார். - ஐதராபாத்தில் உள்ள “நகர நடுவ நூலகத்தில்” இவரது உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.
- 27.09.1972ல் பெங்களுரில் இறுதிநிலை அடைந்த, சீர்காழி இரா. அரங்கநாதனின் மேற்கூறிய பெருமைகளே, அவரது பிறந்தநாளை “தேசிய நூலக தினமாக” கொண்டாடு வதற்கான காரணங்கள் ஆகும்.