குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

TNPSC GROUP4 குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பணிகளுக்கு கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு என்று இருப்பதால், முதல் ஒரு வாரத்திலேயே சுமார் 7 லட்சம் பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகின. கடந்த 24ஆம்தேதி நிலவரப்படி, இந்த பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்றிரவு வரையிலான தகவலின்படி மொத்தம் 21,11,357 பேர் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சுமார் 7,300 பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 24- ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மார்ச் 30- ஆம் தேதி முதல் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில், நேற்று (28/04/2022) நள்ளிரவு 12.00 மணியுடன் கால அவகாசம் நிறைவடைந்தது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட, இத்தேர்வுக்கு 21 லட்சத்துக்கு 83 ஆயிரத்து 225 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

 

கடைசி நாளான நேற்று (28/04/2022) மட்டும் மூன்று லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு வரலாற்றிலேயே இந்த தேர்வுக்கு தான், இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த ஆண்டு முதல் குரூப் 4 தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொது அறிவு வினாக்கள் திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d