சூரியா சென் கல்பனா தத்

சூரியா சென்

 • 1920களின் நடுப்பகுதியில் யுகந்தர்அனுஷிலன் சமிதி போன்ற புரட்சிகரக் குழுக்கள் தேக்கம் அடைந்துவிட, அவற்றிலிருந்து புதிய குழுக்கள் தோன்றின.
 • அவற்றுள் வங்காளத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த சூரியா சென்னின் தலைமையில் செயல்பட்ட குழு முக்கியமானதாகும்.
 • சூரியா சென் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்ததுடன்கதரையும் அணிந்து வந்தவர்.
 • சூரியா செனின் குழு இந்திய தேசிய காங்கிரசின் சிட்டகாங் பிரிவுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது.

சூரியா சென்னின் இந்தியக் குடியரசு இராணுவம்

 • சூரியா சென்னின் புரட்சிகரக் குழு இந்தியக் குடியரசு இராணுவம்.
 • ஐரிஷ் குடியரசுப் படையை பின்பற்றி இந்தியக் குடியரசு இராணுவம் அது போன்று பெயரை சூட்டிக் கொண்டது .
 • சிட்டகாங்கைக் கைப்பற்றுவதற்காக மறைந்திருந்து தாக்கும் கொரில்லா பாணி தாக்குதலை நடத்த சூரியா சென்னின் புரட்சிகரக் குழு இந்தியக் குடியரசு இராணுவம் திட்டமிட்டது.

 கல்பனா தத் (1913 – 1995)

 • வீரம் செறிந்த போராளிகளின் பட்டியலில் இடம் பெறும் இன்னொரு பெயர் கல்பனா தத்.
 • 1920ல் கல்பனா தத் கம்யூனிஸ்ட் தலைவர் பி.சி.ஜோஷியைத் திருமணம் செய்து கொண்டார்.
 • கல்பனா தத் திருமணம் செய்து கொண்ட பின்னர் கல்பனா ஜோஷி என்று அறியப்பட்டார்.
 • கல்பனா ஜோஷி சிட்டகாங் ஆயுதப்படைத் தளம் தாக்குதலில் ஈடுபட்டார்.
 • தாய்நாட்டைக் காப்பதற்காய் இளம் பெண்களின் பிரதிநிதியாய் கல்பனா தத் துப்பாக்கிக் கொண்டு ஆண்களுடன் இணைந்து போராடினர்.

 சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதல் – சூர்யா சென்னும் கல்பனா தத்தும்

 • 1930 ஏப்ரல் 18 அன்று இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்குதல் நடத்தப்பட்டது.
 • ரயில்வே உட்பட அனைத்துத் தகவல் தொடர்பு வலைப் பின்னல்களையும் துண்டிக்கும் பொருட்டு தந்தி, அலுவலகங்கள், படைத்தளங்கள்காவல்துறை முகாம்கள் ஆகியவற்றின் மீது அது போன்ற தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.
 • சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதலில் புரட்சியாளர்கள் தேசியக் கொடியை ஏற்றி வந்தே மாதரம்புரட்சி ஓங்குக’ போன்ற கோஷங்களை முழங்கிக் குறிப்புணர்த்தினர்.
 • சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதல்களும் எதிர்ப்பும் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன.
 • சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதல் ஈடுபட்டவர்கள் பெரிதும் கிராமங்களிலிருந்து செயல்பட்டனர்.
 • சிட்டகாங் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் கல்பனா தத்தும் ஒருவர் ஆவார்.
 • சிட்டகாங் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றதினால் சூர்யா சென்னும் கல்பனா தத்தும் வாழ்நாள் முழுதும் நாடு கடத்தப்பட்டனர்.
 • சூரியா சென்னைக் கைது செய்ய 3 ஆண்டுகள் பிடித்தன.
 • சூரியா சென் 1933 பிப்ரவரியில் கைதானார்.
 • 11 மாதங்கள் கழித்து 1934 ஜனவரி 12ல் சூரியா செனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 • சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டு யாதெனில் “பேரரசருக்கு எதிரான போரை நடத்தியது.”
 • சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதல் தொடங்கி அவர்கள் மீதான ஒட்டுமொத்த வழக்கு விசாரணை வரை சிட்டகாங் ஆயுதக் கிடங்கு வழக்கு என அறியப்படுகிறது.

கல்பனா தத்தின் சுயசரிதை (Chittagong Armoury Raiders’ Reminiscences)

 • சிட்டகாங்கின் புரட்சிகர இளைஞர்கள் நம்பிக்கையுடன் போரிட்டால் வெளியாட்களின் உதவியின்றி கூட அரசாங்கத்தை எதிர்த்துப் போராட முடியும் என்று நிரூபித்துள்ளதை Chittagong Armoury Raiders’ Reminiscences என்னும் தனது நூலில் கல்பனா தத் நினைவூட்டுகிறார்.
 • 1932 ஜூன் 13ல் இருவர் அரசுப் படைகளுக்கு எதிராக நேருக்கு நேர் மோதல் ஏற்பட்ட போது கொல்லப்பட்டனர்.
 • தல்காட் கிராமத்தில் ஒரு ஏழை பிராமண விதவையான சாவித்ரி தேவி என்பாரின் வீட்டில் அரசுப் படைகளின் கேப்டன் கேமரூனை அவர்கள் கொன்றனர்.
 • இந்த சம்பவத்திற்குப் பிறகு அவ்விதவைப் பெண்மணி அவரது குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டார்.
 • கல்பனா தத்தின் சுயசரிதைய (Chittagong Armoury Raiders’ Reminiscences).

சூரியா சென் – ஆனந்த குப்தா

 • சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதலின் புரட்சிகரத் தலைவர் சூரியா சென்.
 • “தனிப்பட்ட நடவடிக்கைகளின் இடத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஏற்பாடு செய்வது என்னும் பாதையை ஓர் அர்ப்பணிப்பு மிக்க இளைஞர் பட்டாளம் காட்டித் தர வேண்டும்.
 • அதன் போக்கில் நம்மில் பலர் இறக்க நேரிடும்.
 • ஆனால் அத்தகைய உன்னத நோக்கத்திற்கான நமது தியாகம் வீண் போகாது“ என்று சூரியா சென் ஆனந்த குப்தாவிடம் கூறினார்.https://athiyamanteam.com/product/athiyaman-group-4-vao-2-2a-pothu-tamil-general-studies-15-books/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: