பொது தமிழ் வினா விடைகள்
- திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல்கள் எழுதியவர் யார்
அ. கண்ணதாசன் ஆ. முடியரசன் இ. வாணிதாசன் ஈ. சுரதா (விடை : கண்ணதாசன்)
- கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்?
அ. கண்ணதாசன் ஆ. பாரதிதாசன் இ. வாணிதாசன் ஈ. பாரதியார்
(விடை : பாரதியார்)
3. நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்? அ. திரு.வி.க. ஆ. மு.வ. இ. வேங்கடசாமி நாட்டார் ஈ. வெ.இராமலிங்கனார்
(விடை : வெ.இராமலிங்கனார்)
- கவிமணி தேசிக விநாயகத்தின் முதல் கவிதை நூல் எது? அ. அழகம்மை ஆசிரிய விருத்தம் ஆ. மலரும் மாலையும் இ. ஆசிய ஜோதி ஈ. குழந்தைச் செல்வம்
(விடை : அழகம்மை ஆசிரிய விருத்தம்)
- இவற்றுள் வாணிதாசன் எழுதாத நூல் எது?
அ. தீர்த்த யாத்திரை ஆ. இன்ப இலக்கியம்
இ. பொங்கல் பரிசு
ஈ. சுவரும் சுண்ணாம்பும்
(விடை : சுவரும் சுண்ணாம்பும்)
- தேசிய கவி என்று போற்றப்படும் கவிஞர் யார்? அ. பாரதியார் ஆ. பாரதிதாசன் இ. நாமக்கல் கவிஞர் ஈ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(விடை : பாரதியார்)
- பாரதியார் அவர்கள் மதுரையில் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியின் பெயர் என்ன?
அ. நேதாஜி மேல்நிலைப் பள்ளி ஆ. சேதுபதி உயர்நிலைப் பள்ளி இ. மதுரை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஈ. காந்திஜி உயர்நிலைப் பள்ளி
(விடை : சேதுபதி உயர்நிலைப் பள்ளி)
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் போற்றப்படுபவர் யார்?
அ. பாவேந்தர் ஆ. பாரதியார் இ. குழந்தைப் புலவர் ஈ. சுரதா
(விடை : பாரதியார்) - பாரதிதாசன் அவர்களால் படைக்கப்பட்ட எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு வழங்கப்பட்டது?
அ. பிசிராந்தையார் ஆ. பாண்டியன் பரிசு இ. கண்ணகி புரட்சிக் காப்பியம் ஈ. மணிமேகலை வெண்பா
(விடை : பிசிராந்தையார்) - புரட்சிக்கவி என்னும் சிறப்பினைப் பெற்றவர் யார்? அ. பாரதியார்
ஆ. கவிமணி இ. கண்ணதாசன் ஈ. பாரதிதாசன் (விடை : பாரதிதாசன்)