பொருநை நாகரிகம்- DOWNLOAD PORUNAI REPORT

பொருநை

 பொருநை கரையில் அமைந்திருக்கும் கொற்கை இடைச்சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் புகழ்பெற்ற துறைமுகமாகவும் இருந்திருக்கிறது.
 கொற்கை கோநகர் இடைச்சங்கத்தை எடுப்பித்து வளர்த்தது
 இடைச்சங்கத்தை நிறுவிய வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 79 பாண்டியர்களின் ஆட்சி நகரமாக இருந்தது கொற்கை
 கொற்கையை கொல்சிஸ் , கொல்காய் என்று தாலமி , பிளினி , மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டவர் குறிப்பிடுகின்றனர்
 கிரேக்கம் , எகிப்து , அரேபியா போன்ற நாடுகளை சேர்ந்த கடல்வழி வணிகர்களுக்கு மிகப்பெரிய வணிக தளமாக விளங்கியிருக்கிறது
 கீழடியில் சூரியன் , நிலவு போன்ற வடிவியல் குறியீடுகள் கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக்காசு கண்டெடுக்கப்பட்டது
 அதை ஆய்வு செய்த நாணயவியல் நிபுணரும், கொல்கத்தா பல்கலைக்கழக பேராசிரியருமான சுஷ்மிதா பாசு பசும்தார் , இந்த காசு கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே , அதாவது மவுரிய பேரரசர் அசோகர் காலத்துக்கும் முற்பட்டது என்று கருத்து தெரிவித்தார்
 கரிம பகுப்பாய்வு முடிவுகளின்படி கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துக்களின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என்று தெரியவந்துள்ளது
 முந்தைய அகழாய்வுகளில் கிடைத்த கரிம பகுப்பாய்வுகளின் முடிவுகளின் படி கி.மு. 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாகவே கொற்கை ஒரு துறைமுகமாக செயல்பட்டு வந்திருக்கிறது
 இப்பொது நடைபெற்று வரும் அகழாய்வில் கருப்பு வண்ணம் கொண்ட பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன
 இவை கங்கை சமவெளியை சார்ந்தவை
 இவற்றை ஆராய்ந்த நிபுணர்கள் , கொற்கை துறைமுகம் 6ஆம் நூற்றாண்டுக்கு முன்பே வெளிநாடுகளுடனும் இந்தியாவின் பிற பகுதிகளுடனும் வணிகத்தொடர்பு கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்
 ஆதிச்சநல்லூர் அருகே சிவகளை பறம்பு பகுதியில் முதுமக்கள் தாழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது
 இதில் உமி நீங்கிய நெல்மணிகள் இருந்தன
 முறையில் ஆய்வு செய்தபோது அந்த நெல்மணிகள் காலம் கி.மு.1155 என்று தெரிய வருகிறது
 இதன்மூலம் ” தண்பொருநை ” என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கும் முற்பட்டது ஆகும்

பொருநை நாகரிகம்- DOWNLOAD PORUNAI REPORT

 

Install Athiyaman App

ORDER TNPSC GROUP 2 2A Group 4  BOOKS

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: