மருத்துவர்  முத்துலட்சுமி ரெட்டி (1886-1968)

மருத்துவர்  முத்துலட்சுமி ரெட்டி (1886-1968)

 • சமுதாய மாற்றத்தில் தமிழகம் முன்னணியில் இருந்தது.
 • தமிழ்நாட்டின் சிறந்த கலாச்சார பாரம்பரியத்தில் இருக்கும் சில கருப்பு புள்ளிகள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப் பட்டன.
 • அத்தகைய ஒரு கரும்புள்ளி ‘தேவதாசி’ அமைப்பு ஆகும்.
 • இந்த முறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய முக்கியமான தலைவர்களில் ஒருவர் மருத்துவர்  முத்துலட்சுமி ரெட்டி.
 • மருத்துவர். முத்துலட்சுமி ரெட்டி 1886 ஆம் ஆண்டு  ஜூலை 30 ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.
 • இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் இவர் ஆவார்.
 • 1923 ஆம் ஆண்டில் அவரது சகோதரி புற்றுநோயால் இறந்தார். அன்று அவர் புற்றுநோயை அழிக்க சபதம் எடுத்தார். எனவே, அவர் 1949 ஆம் ஆண்டில்  புற்றுநோய் நிவாரண மருத்துவமனையைத் தொடங்கினார்.
 • சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் நிறுவனம் அவரது அரும்பெரும் முயற்சியால் தொடங்கப்பட்டது.
 • முதல் பாரதப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் அந்த நிறுவனத்திற்கு அடித்தளம் அமைத்தார்.
 • அவர் மருத்துவத்தில் மட்டுமல்ல, அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களிலும் ஆர்வமாக இருந்தார்.
 • கொடூரமான நடைமுறையான தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவதற்காகத் தன் வாழ்நாட்களை அவர் அதற்காக அர்ப்பணித்தார்.
 • தேவதாசி அமைப்புக்கு எதிராகத் தீவிரமாக பிரச்சாரம் செய்ததற்காக காந்திஜியால் அவர் தனிப்பட்ட முறையில் பாராட்டப்பட்டார்.
 • தேவதாசி அமைப்புக்கு எதிரானப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் விதமாக அவர் 1927 ஆம் ஆண்டு தமிழக சட்ட மேலவைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
 • இதன் விளைவாக, 1947 ஆம் ஆண்டில் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் இருந்த மதராஸ் மாகாண அரசு தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்தை இயற்றியது.
 • மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1930 ஆம் ஆண்டில் அவர் மதராஸ் சட்டமன்றத்தில் இருந்து பதவி விலகினார்.
 • 1930 ஆம் ஆண்டில், அவர் புனேவில் அகில இந்திய மகளிர் மாநாட்டை ஏற்பாடு செய்தார்.
 • அவர் 1933 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்தியப் பெண்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்தார்.
 • மதராஸில் உள்ள சாந்தோமில் (தற்போது அடையாரில்) அவ்வை இல்லம் என்ற பெயரில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தையும் தொடங்கியுள்ளார்.
 • மருத்துவர்  முத்துலட்சுமி ரெட்டி, தனது அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பின் மூலம் கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது என்றக் கருத்தை உலகிற்கு நிரூபித்துள்ளார்.
 • அவர் தனது 82 வது வயதில் 1968 ஆம் ஆண்டில் காலமானார்.
 • இவர் தனது பெயருக்கு முன்னால் பல்வேறு துறைகளில் முதலிடம் என்ற சிறப்பினைக் கொண்டிருந்தார்.
  • மகாராஜா ஆண்கள் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவி.
  • 1907 ஆம் ஆண்டில் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப் பட்ட முதல் மற்றும் ஒரே பெண் மாணவர்.
  • அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் பயிற்சி மாணவராக பணி செய்த முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.
  • 1954 ஆம் ஆண்டில் மாநில சமூக நல ஆலோசனைக் குழுவின் முதல் தலைவர்.
  • தமிழகச் சட்டமேலவையின் முதல் பெண் துணைத் தலைவர்.
  • 1937 ஆம் ஆண்டில் மதராஸ் மாநகராட்சிக் குழுவில் மேயருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய முதல் பெண் உறுப்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: