விஜயலட்சுமி பண்டிட்

விஜயலட்சுமி பண்டிட்

  • விஜயலட்சுமி பண்டிட் (Vijaya Lakshmi Pandit), (ஆகஸ்ட் 18, 1900 – டிசம்பர் 1, 1990), இவர் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி(Swarup Kumari) என்பது.மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி. சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மோதிலால் நேரு குடும்பத்தில் அவரது தாக்கம் அதிகம் கொண்ட நபராகக் கருதப்பட்டார்.
  • 1962 முதல் 1964 வரை மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.
  • இந்திரா காந்தியைக் கடுமையாக இவர் விமர்சனம் செய்தவர். இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி டேராடூன் சென்று வாழ்ந்து வந்தார்.
  • 1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். The Evolution of India (1958) மற்றும் The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.
  • இவரது மகள் நயந்தரா சாகல் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.
  • அலாகாபாத் நகராட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து அவரது நீண்ட அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1932, 1940, 1942-ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரசு இவரை சிறைக்கு அனுப்பியது.
  • 1937-ம் ஆண்டு முதல் 1939-ஆம் ஆண்டு வரை உள்ளாட்சி மற்றும் பொது சுகாதாரத் துறையின் அமைச்சராக பதவி வகித்தார்.
    இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இந்தியா போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்ற காங்கிரஸ் கட்சி தலைவர்களை போல, இவரும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
  • ஐ.நா. பொதுச் சபையின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த முதல் நபர் மற்றும் முதல் பெண் இவரே.
  • சிறந்த கவிஞரும் அரசியல்வாதியுமான இவர் இருபதாம் நூற்றாண்டில் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பெண்களுள் முக்கியமானவர். தனது கவிதைகள் மூலம் ‘கவிக்குயில்’ ‘இந்தியாவின் நைட்டிகேல்’ ஆகிய பட்டங்களுக்கு சொந்தக்காரராக மாறியவர்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: