12th Tamil Book– பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
1. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
- வசம்பு
- மணத்தக்காளியிலைச் சாறு
- கடுக்காய்
- மாவிலைக்கரி
விடை : கடுக்காய்
2. ‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?
- இலக்கியம்
- கணிதம்
- புவியியல்
- வேளாண்மை
விடை : கணிதம்
1. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எந்த நூற்றாண்டில் அதிகம் இருந்தன?
20-ம் நூற்றாண்டு
19-ம் நூற்றாண்டு
18-ம் நூற்றாண்டு
17-ம் நூற்றாண்டு
விடை : 19-ம் நூற்றாண்டு
2. குருகுலம் என்பது …………………
ஆசிரியரின் அறை
குருக்கள் தங்குமிடம்
ஆசிரியரின் வீடு
துறவியரின் குழல்
விடை : ஆசிரியரின் வீடு
3. மன்றத்திற்கு வழங்கும் பெயர்
அம்பலம்
சபை
சங்கம்
கோட்டை
விடை : அம்பலம்
4. ஜைன மடங்களுக்கான பெயர்
அம்பலம்
மன்றம்
திண்ணை
பள்ளி
விடை : பள்ளி
5. பள்ளியென்னும் பெயர் எவற்றிற்கெல்லாம் பொதுவாக வழங்கப்படும்
பாடசாலை, ஆலயம்
பாடசாலை, மடங்கள்
பாடசாலை, விருந்தினர் கூடும் இடம்
பாசறை, மடங்கள்
விடை : பாடசாலை, மடங்கள்
6. நெடுங்கணக்கு என்பது
அரிச்சுவடி
நீண்ட கணக்கு
பெருக்கல் கணக்கு
ஓலைச்சுவடி
விடை : அரிச்சுவடி
7. அக்ஷராப்பியாசம் என்பது
பாடம் படித்தல்க்ஷ
மனனம் செய்தல்
எழுத்தறிவித்தல்
ஏடு எழுதுதல்
விடை : எழுத்தறிவித்தல்
8. எழுத்தானணிக்கு வழங்கும் வேறுபெயர்
ஊசி
மடக்கெழுத்தாணி
குண்டெழுத்தாணி
எழுதுகோல்
விடை : ஊசி
9. கணக்காயர் என்பவர் …………..
உரையாசிரியர்
நூலாசிரியர்
உபாத்தியாயர்
மொழிபெயர்ப்பாளர்
விடை : உபாத்தியாயர்
10. பள்ளிக்கு முதலில் வருபவரை …………….. என்று சொல்வார்கள்
வேத்தான்
முதலான்
சட்டாம்பிள்ளை
சிசியான்
விடை : முதலான்
11. “தமிழ்த்தாத்தா” என அழைக்கப்பட்டவர் ……………………
திரு.வி.க
மா. பொ. சிவஞானம்
மறைமலை அடிகளார்
உ. வே. சாமிநாதர்
விடை : உ. வே. சாமிநாதர்
12. சென்னையில் உ.வே.சா. பெயரில் நூலகம் அமைந்துள்ள இடம் …………
திருவான்மியூர்
அடையாறு
அண்ணாநகர்
மயிலாப்பூர்
விடை : திருவான்மியூர்
13. பொருத்துக
1. உபாத்தியாயர் தாழைமடல்
2. குழிமாற்று ஆசிரியர்
3. சீதாளபத்திரம் எழுத்துப்பயிற்சி
4. அக்ஷராப்பியாசம் பெருக்கல் வாய்ப்பாடு
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ
14. வெள்ளைக்கால் சுப்பிரமணியானார் என்பார் ………….. ஆவார்
உயிரின மருத்துவர்
வழக்கறிஞர்
பொறியாளர்
நீதியரசர்
விடை : உயிரின மருத்துவர்
Tamil Nadu 6th -12 TAMIL Book Back Answers
Download TNPSC App