Tamil Nadu 6th Standard Tamil Book Term 1 தமிழ்க்கும்மி Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil Book Term 1 தமிழ்க்கும்மி Book Back Answers
I. சொல்லும் பொருளும்
- ஆழிப்பெருக்கு – கடல்கோள்
- மேதினி – உலகம்
- ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
- உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை
- மெய் – உண்மை
- வழி – நெறி
- அகற்றும் – விலக்கும்
- மேன்மை – உயர்வு
- அறம் – நற்செயல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தாய் மொழியில் படித்தால் _____________ அடையலாம்
- பன்மை
- மேன்மை
- பொறுமை
- சிறுமை
விடை : மேன்மை
2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _____________ சுருங்கிவிட்டது
- மேதினி
- நிலா
- வானம்
- காற்று
விடை : மேதினி
3. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
- செந் + தமிழ்
- செம் + தமிழ்
- சென்மை + தமிழ்
- செம்மை + தமிழ்
விடை : செம்மை + தமிழ்
4. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- பொய் + அகற்றும்
- பொய் + கற்றும்
- பொய்ய + கற்றும்
- பொய் + யகற்றும்
விடை : பொய் + அகற்றும்
5. பாட்டு+ இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________
- பாட்டிருக்கும்
- பாட்டுருக்கும்
- பாடிருக்கும்
- பாடியிருக்கும்
விடை : பாட்டிருக்கும்
6. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________
- எட்டுத்திசை
- எட்டிதிசை
- எட்டுதிசை
- எட்டிஇசை
விடை : எட்டுத்திசை
III. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சாெற்களை எடுத்து எழுதுக.
- காெட்டுங்கடி – கோதையரே
- எட்டுத்திசை – எட்டிடவே,
- ஊழி – ஊற்று
- அறிவு – அழியாமலே
- மெய் – மேதினி
IV. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சாெற்களை எடுத்து எழுதுக.
- காெட்டுங்கடி – எட்டுத்திசை
- ஊழி – ஆழி
- பொய் – மெய்
- கண்டதுவாம் – கொண்டதுவாம்
- பூட்டறுக்கும் – பாட்டிருக்கும்
A. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- பெருஞ்சித்திரனார்
- கவிமணி
விடை : பெருஞ்சித்திரனார்
2. பாவலரேறு என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் கவிஞர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- பெருஞ்சித்திரனார்
- கவிமணி
விடை : பெருஞ்சித்திரனார்
3. நும் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடலைப் பாடியவர்
- பாரதியார்
- கண்ணதாசன்
- பெருஞ்சித்திரனார்
- கவிமணி
விடை : பெருஞ்சித்திரனார்
4. நும் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடல் இடம்பெறும் நூல்
- கனிச்சாறு
- கொய்யாக்கனி
- பாவியக்கொத்து
- நூறாசிரியம்
விடை : கனிச்சாறு
5. தென்மொழி. தமிழ்ச்சிட்டு. தமிழ் நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர்
- கல்யாண சுந்தரனார்
- கண்ணதாசன்
- பெருஞ்சித்திரனார்
- சுரதா
விடை : பெருஞ்சித்திரனார்
7. திசைகள் ____________ செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்.
- இரண்டிலும்
- எட்டிலும்
- நான்கிலும்
- பத்த்திலும்
விடை : நான்கிலும்
8. ______________ சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் காெண்டது தமிழ்.
- உலகம்
- ஊர்
- தெரு
- நாடு
விடை : உலகம்
B. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாலவர் ___________________
விடை : பெருஞ்சித்திரனார்
2. எட்டுதிசையிலும் ___________________ புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி- விடுபட்ட சொல்லை நிரப்புக
விடை : செந்தமிழின்
3. ___________________ பல நூறு ஆண்டுகளைக் கணடது
விடை : தமிழ்மொழி
4. பொய்யாமை அகற்றும் மொழி ___________________
விடை : தமிழ்மொழி
5. உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி ___________________
விடை : தமிழ்மொழி
C. பொருத்துக
ஆழி | உலகம் |
மேதினி | கடல் |
மேன்மை | நீண்டதொருகாலப்பகுதி |
ஊழி | உயர்வு |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 -இ |
D. பிரித்து எழுதுக
- காெட்டுங்கடி = காெட்டுங்கள் + அடி
- வழிகாட்டிருக்கும் = வழிகாட்டு + இருக்கும்
- செந்தமிழ் = செம்மை + தமிழ்
- ஊற்றெனும் = ஊற்று + எனும்
- பாட்டிருக்கும் = பாட்டு + இருக்கும்
E. சேர்த்து எழுதுக
- இளமை + காேதையர் = இளங்காேதையர்
- பூட்டு + அறுக்கும் = பூட்டறுக்கும்
- அறம் + மேன்மை = அறமேன்மை
- பல + நூறு = பலநூறு
- ஊற்று + எனும் = ஊற்றெனும்