Tamil Nadu 6th Standard New தமிழ் எழுத்துகளின் வகை தொகை Tamil Book Term 1
Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil New Book Term 1 தமிழ் எழுத்துகளின் வகை தொகை Book Back Answers
தமிழ் எழுத்துகளின் வகை தொகை
I. கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக
1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்
விடை : அது
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல்
விடை : தீ
3. 4 மாத்திரை அளவுள்ள வல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சாெல்
விடை : கண்டேன்
4. 4 மாத்திரை அளவுள்ள மெல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங் கும் சொல்
விடை : நண்பகல்
5. 4 மாத்திரை அளவுள்ள இடையின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்
விடை : வாழ்த்து
6. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல்
விடை : அஃது
1. ஒலி வடிவாக எழுதப்டுவதும், வரிவடிவாக எழுதப்படுவதும் எனப் டுகிறது.
விடை : எழுத்து
2. குறுகி ஒலிக்கும் ____________ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள்.
விடை : அ, இ, உ, எ, ஒ
3. நீண்டு ஒலிக்கும் _________________ ஆகிய ஏழும் நெடில் எழுத்துகள்.
விடை : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
4. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு ________________
விடை : அரை மாத்திரை
மொழியை ஆள்வோம்
I. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
1. பழமொழியின் சிறப்பு சொல்வது
- விரிவாகச்
- சுருங்கச்
- பழமையைச்
- பல மொழிகளில்
விடை : சுருங்கச்
2. நோயற்ற வாழ்வை த் தருவது ______________________
விடை : சுத்தம்
3. உடல் ஆரோக்கியமே அடிப்படை _______________________
விடை : உழைப்பு
4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
உணவு, உடை, உறைவிடம்
5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
சுத்தம்
II. பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக
1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
விடை : எங்க பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டிப் போறாங்க,
2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க
விடை : பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னாங்க
கலைச்சொல் அறிக
- வலஞ்சுழி – Clock wise
- இடஞ்சுழி – Anti Clock wise
- இணையம் – Internet
- குரல்தேடல் – Voice Search
- தேடுபொறி – Search engine
- தொடுதிரை – Touch Screen
Tamil Nadu 6th Standard Tamil Book Term 1 Book Back Answers