Tamil Nadu 6th Standard New முதலெழுத்தும், சார்பெழுத்தும் Tamil Book Term 1
Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil New Book Term 1 முதலெழுத்தும், சார்பெழுத்தும் Book Back Answers
I. சிறுவினா
1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர். |
2. சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?
சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்ப டும்.
|
3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?
தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தன க்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது
II. சிந்தனை வினா
1. உயிர்மெய், ஆய்தம் இவை இரண்டும் சார்பு எழுத்துகளாகக் கூறப்படக் காரணம் தருக
உயிர்மெய் எழுத்துகள்மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின.
முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும். ஆய்த எழுத்து தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது. முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும் |
முதல் எழுத்துகள் சார்பு எழுத்துகள் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் __________________
விடை : சார்பெழுத்துகள்
2. _____________________ பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன
விடை : முதல் எழுத்துகள்
3. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் _____________________ சேர்ந்ததாக இருக்கும்.
விடை : மெய்யும் உயிரும்
4. மூன்று புள்ளிகளை உடைய _____________________ தனித்த வடிவம் பெற்றது.
விடை : ஆய்த எழுத்து
5. _____________________ தனித்து இயங்காது.
விடை : ஆய்த எழுத்து
6. உயிர் எழுத்துகள் _____________________
விடை : பன்னிரண்டு
7. மெய்யெழுத்துகள் _____________________
விடை : பதினெட்டு
8. உயிர்மெய் எழுத்துக்கள் _____________________
விடை : இருநூற்றி பதினாறு
II. சேர்த்து எழுதுக
- சார்பு + எழுத்து = சார்பெழுத்து
- முதல் + எழுத்து = முதெலழுத்து
- உயிர் +எழுத்து = உயிரெழுத்து
- மெய் + எழுத்து = மெய்யெழுத்து
- குறுமை + இயல் + உகரம் = குற்றியலிகரம்
III. பிரித்து எழுதுக
- உயிர்மெய் = உயிர் + மெய்
- தனிநிலை = தனி + நிலை
- முப்புள்ளி = மூன்று + புள்ளி
- உயிரளபெடை = உயிர் + அளபடை
- ஐகாரக்குறுக்கம் = ஐகாரம் + குறுக்கம்
IV, சிறுவினா
1. எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
எழுத்துகள் இரண்டு வகைப்படும்1. முதல் எழுத்து, 2. சார்பு எழுத்து |
2. உயிர்மெய் எழுத்துக்கள் எவ்வாறு சார்பெழுத்தினுள் அடங்கும்?
உயிர்மெய் எழுத்துக்கள் முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும் |
3. உயிர்மெய் எழுத்தின் வரி வடிவம் எதனை ஒத்திருக்கும்?
உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். |
4. உயிர்மெய் எழுத்தின் ஒலிக்கும் கால அளவு எதனை ஒத்திருக்கும்?
உயிர்மெய் எழுத்தின் ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும். |
5. ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் யாவை?
ஆய்த எழுத்திற்கு வேறு சில பெயர்களும் உண்டு
|
6. ஆய்த எழுத்து எவ்வாறு சார்பெழுத்து ஆகும்?
முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும். |