Tamil Nadu 6th Standard New மனதை கவரும் மாமல்லபுரம் Tamil Book Term 2
Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil New Book Term 2 மனதை கவரும் மாமல்லபுரம் Book Back Answers
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கலைகளும் இலக்கியங்களும் ஒருநாட்டின் __________________ உலகிற்கு உணர்த்துவன
விடை : பண்பட்ட நாகரிகத்தை
2. பல்லவ அரசன் ___________________ மற்போரில் சிறந்நதவன்
விடை : நரசிம்மன்
3. ஐந்து இரதங்கள் உள்ள இடம் ________________ எனப்படும்
விடை : பஞ்சபாண்டவர் இரதம்
4. பல்லவ அரசன் நரசிம்மன் _______________ சேர்ந்தவர்
விடை : ஏழாம் நூற்றாண்டைச்
5. ______________________ உள்ள இடம் மாமல்லபுரம்
விடை : நான்கு வகை சிற்பக்கலைகளும்
II. வினாக்கள்
1. இரதக்கோவில் என்று எதனை அழைக்கிறார்கள்?
- மாமல்லபுரத்தில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.
- இது இரதம் (தேர்) வடிவத்தில் இருக்கிறது.
- அதனால் இதனை இரதக் கோவில் என்று அழைக்கிறார்கள்
2. புடைச்சிற்பங்கள் பற்றி கூறு
- அர்ச்சுனன் தபசு என்றும் பாறையில் உள்ள மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிறப்பங்கள் உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல் அழகாக உள்ளன.
- இவற்றிற்கு புடைப்பு சிற்பங்கள் என்று பெயர்.
3. மகாபலிபுரம் என பெயர்வரக் காரணம் என்ன?
மாமல்லன் கேள்வியால் இந்த ஊர் உருவாகியுள்ள காரணத்தால் இதற்கு மகாபலிபுரம் என அழைக்கப்படுகிறது
4. மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்கள் எவை?
- அர்ச்சுன் தபசு
- கடற்கரைக் கோவில்
- பஞ்ச பாண்டவர் இரதம்
- ஒற்றைக்கல் யானை
- குகைக்கோவில்
- புலிக்குகை
- திருக்கடல் மல்லை
- கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து
- கலங்கரை விளக்கம்
5. சிற்பக்கலை எத்தனை வகைப்படும்
சிற்பக்கலை நான்கு வகைப்படும்
- குடைவரைக் காேயில்கள்
- கட்டுமானக் கோயில்கள்
- ஒற்றைக் கல் கோயில்கள்
- புடைப்புச் சிற்பங்கள்