‘பாரத் கெளரவ்’ Bharat Gaurav Trains தனியாா் ரயில் திட்டம்

‘பாரத் கெளரவ்’ தனியாா் ரயில் திட்டம்

Bharat Gaurav Trains

 

நம் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், பாரம்பரிய கோவில்களுக்கும் ரயில்களை இயக்க, ‘பாரத் கவுரவ்’ திட்டம் நவம்பர் 23 ஆம் தேதி துவங்கப்பட்டது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் நோக்கிலும், ரயில்வேக்கு வருவாய் கிடைக்கவும், தனியார் வாயிலாக இந்த ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

‘இத்திட்டத்தில், ரயில் பராமரிப்பு மற்றும் நிறுத்துமிடம் போன்ற வசதிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உதவும். ரயில்களை இயக்குவது மட்டுமே தனியார் நிறுவனங்களின் பணி’

Objective –

To showcase India’s rich cultural heritage and magnificent historical places to the people of India and the world, through Bharat Gaurav Trains (Theme- based Tourist Circuit trains).

சரக்கு, பயணிகள் ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றவும், கெளரவ் ரயில்கள் என்ற பெயரில் 190 ரயில்கள் இயக்கப்படும் என்றும் இதை தனியாரும் நிா்வகிப்பா்

இவை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) மட்டுமன்றி, தனியாராலும் நிா்வகிக்கப்படும்.

குத்தகை அடிப்படையில் ரயில் சேவைகளை தனியாா் மேற்கொள்ளலாம்.

இத்திட்டத்தின்கீழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் கருப்பொருளை மையாகக் கொண்டு சிறப்பு சுற்றுலா சுற்றின் அடிப்படையில் ரயில்களை இயக்க வேண்டும். ஏற்கெனவே இந்த ரயில்களை இயக்குவதற்கு தமிழகம், கா்நாடகம், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஆா்வம் தெரிவித்துள்ளன.

ரயில் பயணம் மட்டுமன்றி ஹோட்டலில் தங்கும் வசதி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரிய இடங்களை பாா்வையிட ஏற்பாடு, பயண வழிகாட்டி உள்ளிட்ட உள்ளாா்ந்த சேவைகள் அனைத்தையும் சுற்றுலா பயணிகளுக்கு பாரத் கெளரவ் ரயில் சேவை வழங்கும். பயணிகள் பெறும் சேவைகளின் அடிப்படையில் கட்டணம் நிா்ணயிக்கப்படும்.

நடைமுறையில் பாரத் கெளரவ் ரயில் கட்டணம் சுற்றுலா ஏற்பாட்டாளா்களால் நிா்ணயிக்கப்பட்டாலும், அதில் அசாதாரண சூழல் நிலவாததை ரயில்வே உறுதிப்படுத்தும்.

குத்தகைதாரா்கள் ரயில் பெட்டிகளை மேம்படுத்தியும் இயக்கலாம்.

நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை; ஜூன் 14ம் தேதி தொடக்கம்

இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை வரும் 14ம் தேதி தொடங்குகிறது.

இந்த சிறப்பு ரயில் வரும் ஜூன் 14 அன்று கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி வரை செல்கிறது. இது முழுக்க முழுக்க தனியார் சார்பில் இயக்கப்படும் சேவை ஆகும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d