Blood – இரத்தம்
TNPSC Study Materials – General Science – Zoology PDF in Tamil Blood And Its Circulation- Biology Study Materials
இரத்தம் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு – ஹெமட்டாலஜி
இரத்தம்
இரத்தம் என்பது திரவ நிலையில் உள்ள ஒரு இணைப்பு திசு. ஆனால் சில
பண்புகளால் இணைப்பு திசுக்களில் இருந்து வேறுபடுகிறது.
1. இவை இரத்த செல்களிலிருந்து உற்பத்தியாவதில்லை.
2. எந்த விதமான செல் பிரிவு அடைவதில்லை.
3. நார் இழைகள் எதுவும் காணப்படுவதில்லை.
இரத்தத்தின் சுவை – உப்புத்தன்மை.
pH7.30 – 7.40.
நீரைவிட கனமானது. (இரண்டரை மடங்கு அதிகம்).
100 cc இரத்தம் 20 ml ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும்.
ஆண்களில் ஐந்து முதல் ஆறு லிட்டர் வரை காணப்படும்.
பெண்களில் நான்கு முதல் ஐந்து லிட்டர் வரை காணப்படும்.
இரத்தத்தின் மூலக்கூறுகளை இரண்டு ஆக்கக்கூறுகளாக பிரிக்கலாம்.

திரவ ஆக்க கூறு
பிளாஸ்மா
- தெளிவான மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
- இலேசான காரத்தன்மை கொண்டது.
- இரத்தத்தில் 55% காணப்படும்.
- இதில் நீரின் சதவீதம் 92 % இ புரதம் 7 %மற்றும் உப்பு 1%
- அல்புமின் – 4.4 %- சவ்வுடு பரவல் அழுத்தத்தை நடைமுறைப்படுத்தும்
- குளோபிலின் – 2.3 % – எதிர் பொருள் உற்பத்தி தூண்டும்.
- பை‡ப்ரினோஜென் – 0.3% – இரத்தம் உறைவதில் பங்கேற்கும்.
திண்ம ஆக்க கூறு
இரத்த சிவப்பு அணுக்கள்(RBC)
- எரித்ரோசைட்ஸ்/ஆக்ஸிஜன் படகு/Red Blood Corpulses
- உட்கரு அற்றவை. முதலில் உருவாகும் போது உட்கரு இருக்கும்,வளர்ச்சி அடையும் போது உட்கருவை இழக்கும்.
- ஆண்களில் எண்ணிக்கை – 5 மில்லியன் / ஒரு கனமில்லிமீட்டர்
- பெண்களில் எண்ணிக்கை – 4.5 மில்லியன் /ஒரு கனமில்லிமீட்டர்
- குழந்தைகளில் எண்ணிக்கை – 6.5 மில்லியன் / ஒரு கனமில்லிமீட்டர்
- கருவில் எண்ணிக்கை – 8.5 மில்லியன் / ஒரு கனமில்லிமீட்டர்
- இருபுறமும் குவிந்து தட்டு வடிவில் காணப்படும்.
- 7.8 மைக்ரான் விட்டம் கொண்டது.
- வடிவத்தை விவரித்தவர் கென்ட்ரு மற்றும் பெரூட்ஸ்
- 2.5 மைக்ரான் தடிமன் கொண்டது.
- மேல் உறையின் பெயர் : டோனன் உறை.
- இதில் உள்ள ஹீமோகுளோபின் (HB) என்னும் புரதத்தால் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கின்றது. இதற்கு சுவாசநிறமி என்று பெயர்.
- இது ஆக்ஸிஜன் கடத்தலில் பங்கு எடுப்பதால் இது ஆக்ஸிஹீமோகுளோபின் எனஅழைக்கபடுகின்றது.
Hb + 4 O2 → HbO5
- HB எண்ணிக்கை அளக்கும் கருவி : ஷாலி ஹிமோ மீட்டர்
- ஆண்களில் HB எண்ணிக்கை – 15.8 மில்லி கிராம் / 100 ml
- பெண்களில் HB எண்ணிக்கை – 13.7 மில்லி கிராம்/ 100 ml
- குழந்தைகளில் HB எண்ணிக்கை – 16.5 மில்லிகிராம் / 100 ml
- மூலக்கூறு எண்ணிக்கை – 68000 டால்டன்
- மூலக்கூறு வாய்ப்பாடு – C3032 H4816 O872 N780 S8 Fe4
- 4 மூலக்கூறு ஹீம் + 1 மூலக்கூறு குளோபின் = ஹீமோகுளோபின்
- ஹீம் புரதம் அல்லாத பகுதி, குளோபின் புரத பகுதி ஆகும்.
இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி
- இவை சிவப்பு எலும்பு மஜ்ஜைகளில் உற்பத்தி ஆகின்றன.
- இவை விலா எலும்பு மற்றும் முள் எலும்புகளில் காணப்படுகின்றது.
எலும்பு
மஜ்ஜை பிறந்த குழந்தை குழந்தை குழந்தை வயதானவர்கள்
அளவு
70 ml 2000 ml
4000ml
நிறம்
Pink Red
Yellow
- RBC முதிர்ச்சியடைய 72 மணிநேரம் தேவைப்படும்.
- ஒரு நிமிடத்திற்கு இரண்டு முதல் 10 மில்லியன் வரை உற்பத்தி மற்றும் அழிவு ஆகும்.
- இதன் வாழ்நாள் ஆண் – 120 நாள், பெண் – 110 நாள்
- வாழ்நாள் கண்டறிய உதவும் ரேடியோ கதிர் இயக்க தனிமம் குரோமியம் 51.
- RBC – மண்ணீரலில் அழிக்கப்படுகிறது. மண்ணீரல் RBC-ன் சுடுகாடு எனப்படுகிறது.
- இவை அழிக்கப்படும் போது பிலிரூபின் (மஞ்சள் நிறம்)ää பிலிவிரிடின் (பச்சை நிறம்) என்ற நிறமிகளாக மாற்றப்படுகிறது.
- இவை கழிவுபொருள்கள் மற்றும் சிறுநீரின் நிறத்திற்கு காரணமாக அமைக்கின்றது.
- RBC,WBC எண்ணிக்கை அளக்கும் கருவி : ஹீமோசைட்டோ மீட்டர்
- RBC நீர்க்கும் திரவம் : ஹேயம்ஸ்
- WBC நீர்க்கும் திரவம் : டர்க்ஸ்
நோய்கள்
- பாலிசைத்திமியா – இரத்தத்தில் RBC எண்ணிக்கை அதிகரிப்பு
- அனிமியா – இரத்தத்தில் RBC எண்ணிக்கை குறைவு
- ஹைபோகுரோமிக்அனிமியா – உணவில் இரும்பு சத்து குறைப்பாடு
- பெர்னிசினியஸ் அனிமியா – வைட்டமின் B12 குறைப்பாடு
- மெகாலாபிளாஸ்டிக்அனிமியா – போலிக் அமில குறைப்பாடு
- சிக்கில்செல் அனிமியா – மரபியல் குறைபாடு
- தாலசிமியா – மரபியல் குறைபாடு
- அப்லாஸ்டிக் அனிமியா – மருந்து அதிகம் எடுத்துக்கொள்வதால்
- ஹீமோலைட்டிக் அனிமியா – பாம்பு விஷம் ஏறுவதால்
- செப்டிசிமியா – இரத்தத்தில் விஷம் கலப்பதால்
பணிகள்:
- ஆக்ஸிஜனை செல்களுக்கு கடத்துதல்
- கார்பன் டை ஆக்ஸைடை வெளி கடத்துதல்
- pH சரி செய்தல்
இரத்த நிறம்:
Fe– சிவப்பு நிறம்
Cu– நீல நிறம்
Mn– பிரவுன் நிறம்
Mg– நிறமில்லை
இரத்த வெள்ளை அணுக்கள்(WBC)
- உடலின் போர்படை வீரர்கள் /லியூகோ சைட்ஸ் /White Blood Corpusles
- வெள்ளை நிறம் காரணம் HB நிறமி இல்லை
- RBC ஐ விட குறைவான எண்ணிக்கை
- RBC : WBC = 600 :1
- எண்ணிக்கை 8000 -10000 / கன மில்லிமீட்டர்
- ஆயுட் காலம் 3-4 வாரங்கள்
- தெளிவான உட்கருவை கொண்ட அமிபாயிடு செல்கள்
WBC
ஒற்றை உட்கரு கொண்டவை | மாறும் உட்கரு கொண்டவை |
1. லிம்போசைட்ஸ் 26%
2. மோனோசைட்ஸ் 6% |
1. ஈசினோபில் (அ) அசிடோபில் 2.8%
2. நியூட்ரோபில் 6% 3. பேசோபில் 0.2% |
- லிம்போசைட்ஸ் : (நிணநீர்ச் செல்கள்)
- சிறிய அளவு கொண்டவை
- 7 மைக்ரான் விட்டம்
- வாழ்நாள் மூன்று நாட்கள்
- பாக்டீரியங்களை அழிக்க B செல்களை உற்பத்தி செய்கின்றன.
- வைரஸ்களை அழிக்க T செல்களை உற்பத்தி செய்கின்றன.
- மோனோசைட்ஸ்/Macro policeman : (ஒற்றை செல்கள்)
- பெரிய அளவு கொண்டவை
- 22 மைக்ரான் விட்டம்
- வாழ்நாள் 28 நாட்கள்
- இறந்த செல்களை விழுங்கி செரிக்கும் தன்மை கொண்டவை.
- ஈசினோபில் (அ) அசிடோபில் :
- நியூக்ளியஸ் இரண்டாக பிளவு பட்டு இருக்கும்
- இயக்க சக்தி அதிகம்.
- வாழ்நாள் சில மணிநேரம் மட்டும்
- நியூட்ரோபில் /macro policeman: (நடுவமைச் செல்கள்)
- WBC – ல் அதிக எண்ணிக்கை கொண்டது
- நியூக்ளியஸ் பல பிளவு கொண்டது.
- வாழ்நாள் இரண்டு முதல் நான்கு நாட்கள்
- 10 மைக்ரான் அளவு கொண்டது.
- நொதிகளை கொண்டு நுண் கிருமிகளை செரித்து விழுங்கும் தன்மை
கொண்டது.
- பேசோபில் : (கராச்சாயமேற்பிகள்)
- WBC– ல் குறைந்த எண்ணிக்கை கொண்டது
- வாழ்நாள் 12 முதல் 15 நாட்கள் வரை
- இவை ஹெப்பாரின் எனும் பொருளால் இரத்த குழாய்களுக்குள் இரத்த
உறைதலை தடுக்கின்றது.
வேலை :
- வெள்ளை அணுக்கள் நோய் கிருமிகள் தாக்குதலில் இருந்து உடலை
பாதுகாக்கின்றது.
- உடலினுள் கிருமிகள் புகுந்தால்ää அவைகளை அழித்துää செரித்து விடும் தன்மை கொண்டவை.
ஆன்டிஜென் :
- உடலின் உள்ளே செலுத்தப்பட்ட ஒரு பொருள்ää எதிர்ப்பு பொருள் உருவாக்கத்தைத் தூண்டி அதனுடன் குறிப்பிட்ட முறையில் வெளிப்படையாக வினைபுரிந்தால் அது ஆன்டிஜென் எனப்படும்.
ஆன்டிபாடி :
- உடலில் உள்ள நிணநீர் முடிச்சுகள்ää மண்ணீரல்ää கல்லீரல்ää எலும்புமஜ்ஜைகள் ஆகியவற்றில் உள்ள சிறப்பு செல்கள் இம்யுனோகுளோபின் எனும் புரதப் பொருட்களை அன்னிய பொருட்களின் செயலை முறியடிக்க உருவாக்குகின்றன.இவையே நோய் எதிர்ப்பு பொருள் (அ) ஆன்டிபாடி எனப்படும்.
நோய்கள்:
- WBC இரத்தத்தில் அதிகரித்தால் – லூயூகிமியா (இரத்தப்புற்றுநோய்)
- WBC இரத்தத்தில் குறைந்தால் – லூயூகோபீனியா
Blood Important points Download PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.
TNPSC Study Materials – General Science – Zoology |PDF in Tamil Blood And Its Circulation | Biology Study Materials