அரசியலமைப்புச் சட்ட நாள் constitution-day
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி (இன்று) இந்திய அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதியான இதே நாளில், இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது மற்றும் இது ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை தான் நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.
சுவாரஸ்யமாக அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று கொண்டதற்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான 2 மாத காலமானது, சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்க (ஆங்கிலத்திலிருந்து இந்தி வரை) எடுத்து கொள்ளப்பட்டது. பின் 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கையால் எழுதப்பட்ட 2 ஆவண பிரதிகள் இருந்தன.
அடுத்த 2 நாட்களில் அவை இந்தியாவின் சட்டமாக மாறின. இதனிடையே இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு இன்றோடு 72 ஆண்டுகள் ஆகிறது.
இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக்குழு தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை நினைவுகூர்ந்து கவுரவிக்கும் விதமாகவும், இந்திய அரசியலமைப்புக்காக அயாரது பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாகவும் கடந்த 2015-ல் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய அரசியல் சாசன தின கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 19, 2015 அன்று, அரசிதழில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மோடி அரசு, நவம்பர் 26-ம் தேதியை இந்திய அரசியலமைப்பு தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.