குரூப் 1 தேர்வுக்கு தடையில்லை
மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
TNPSC Group 1 Case 2019
CCS-I Examination (Group-I Services)
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 (TNPSC Group 1 Case) தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மார்ச் மாதம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வை நடத்தியது.
இந்தத் தேர்வுக்குப் பின்னர், தேர்வாணையம் மாதிரி விடைத்தாளை வெளியிட்டது.
இந்த விடைத்தாளில் பல கேள்விகளுக்கு விடைகள் தவறானவை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கி, பின்னர் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி விக்னேஷ் என்பவர் உள்ளிட்ட பலர் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தை அணுகினர்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், கடந்த ஏப்ரல் மாதம் முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
இதனையடுத்து விக்னேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் குரூப்-1 தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பதில் மனுவில், நடந்து முடிந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் மாதிரி விடைத்தாளில் 24 கேள்விகளுக்கான பதில்கள் தவறானவை.
இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த தேர்வர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
அப்படி மதிப்பெண் வழங்கியும் கூட இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள மனுதாரர் குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை.
எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நன்றி : தினமணி
TNPSC Group 1 Case 24 Questions Wrong
TNPSC Group 4 Detailed official Notification 2019
TNPSC Group 4 Exam Details