Important Current affairs Dec 28
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்த அவர், ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொண்டார். பினா-பாங்கி பல்பொருள் குழாய் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கான்பூரில் உள்ள பங்கி வரை நீட்டிக்கப்பட்டுள்ள குழாய், பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலியப் பொருட்களைப் பெற இப்பிராந்தியத்திற்கு உதவும். உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் புரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கான்பூர் ஐஐடியில் 54-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிளாக்செயின் தொழில்நுட்ப அடிப்படையில் டிஜிட்டல் முறையில் பட்டங்களை வழங்கினார்.
வடகிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களுக்கான சமையல் எண்ணெய்- எண்ணெய் பனை வணிக உச்சி மாநாட்டை மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் ஹைதராபாத்தில் தொடங்கி வைத்தார்.
சமையல் எண்ணெய்களுக்காக புதிதாக தொடங்கப்பட்ட மத்திய நிதியுதவி திட்டம் பற்றிய தகவல்களை விரிவாக பரப்புவதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் வணிக உச்சி மாநாடுகளை அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இத்திட்டத்தின் இரண்டாவது உச்சி மாநாடு இதுவாகும். வடகிழக்கு மாநிலங்களுக்கான முதல் மாநாடு இந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் குவஹாத்தியில் நடைபெற்றது.
கிராம உஜாலா திட்டத்தின் கீழ் சிஇஎஸ்எல் நிறுவனம் 50 லட்சம் எல்இடி பல்புகளை விநியோகித்து சாதனை படைத்துள்ளது
இஇஎஸ்எல் நிறுவனத்தின் துணை அமைப்பான சிஇஎஸ்எல் நிறுவனம் கிராம உஜாலா திட்டத்தின் கீழ் 50 லட்சம் எல்இடி பல்புகளை விநியோகித்து சாதனை படைத்துள்ளது.
பீகார், உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் ஊரகப் பகுதி வீடுகளில் கிராம உஜாலா திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் தலைமையின் கீழ் கிராமப்புறங்களில் ஒளியேற்றும் சிஇஎஸ்எல் திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இம்மாதம் நடைபெற்ற தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தின்போது ஒரே நாளில் 10 லட்சம் பல்புகளை விநியோகித்து சிஇஎஸ்எல் சாதனை படைத்தது.
தற்போது பயன்பாட்டில் உள்ள பல்புகளுக்கு மாற்றாக ஒவ்வொன்றும் ரூ.10 விலையில் மூன்றாண்டு உத்தரவாதத்துடன் அதிக தரமுள்ள 7 வாட் மற்றும் 12 வாட் எல்இடி பல்புகளை சிஇஎஸ்எல் வழங்குகிறது. ஒவ்வொரு வீட்டினரும் அதிகபட்சம் 5 பல்புகளை மாற்றிக் கொள்ளலாம். இந்த விநியோகத்தின் பயனாக மேற்குறிப்பிட்ட மாநிலங்களின் ஊரகப் பகுதிகளில் ஆண்டொன்றுக்கு ரூ.250 கோடி சேமிக்கப்படுவதோடு 71,99,68,373.28 யூனிட் மின்சாரமும் சேமிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2022 மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.
சர்வேதேச அறிவியல் தொழில்நுட்ப தரவரிசை குறியீட்டில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம்
உலக அளவில் முதல் 50 புதுமையான பொருளாதாரத்தை பின்பற்றும் நாடுகளில் இந்தியா 46 இடத்திற்கு முன்னேறியுள்ளது.அறிவியல் வெளியீடுகளில் முதல் மூன்று நாடுகள் பட்டியலில் தொடர்ந்து நீடிப்பதுடன், பி எச் டி ஆராய்ச்சி படிப்பை பயில்வோர் எண்ணிக்கை மற்றும் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
சூப்பர் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இந்தியா தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது
தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் இயக்கத்தின் கீழ், ஐ ஐ டி ஹைதராபாத், தேசிய வேளாண்-உணவு உயிரிதொழில்நுட்ப நிறுவனம் மொஹாலி, அதிநவீன கம்ப்யூட்டர் உருவாக்க மையம் பெங்களூரு மற்றும் ஐஐடி கான்பூர் ஆகிய 4 இடங்களில் 4 புதிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களுக்குக் கொண்டுவரப்பட்ட குங்குமப்பூ
காஷ்மீர் மட்டுமே இதுவரை, இந்தியாவின் குங்குமப்பூ கின்னமாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது வடகிழக்கு மாநிலங்களிலும் இதனை சாகுபடி செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெற்கு சிக்கிமின் யாங்காங் கிராமத்தில் முதன்முறையாக குங்குமப்பூ சாகுபடி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மற்றும் மேகாலயாவின் பாராபானி பகுதிகளிலும் இந்த சாகுபடி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அறிவியல்-தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் சமுதாய அதிகாரமளித்தல்
சமுதாயத்திற்கு அதிகாரமளிப்பதற்கான சான்றாகக் கருதப்படும் Tech@75திட்டம், பழங்குடியினர் கவுரவ தினத்தன்று தொடங்கப்பட்டது. ‘விஞ்ஞான் உத்சவ்‘ எனப்படும் ஓராண்டுகாலத் திட்டம், ஆகஸ்ட், 2022வரை ஒவ்வொரு மாதமும், ஒரு தலைப்பில் கொண்டாடப்படும்.