கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரம்

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி செல்கிறது. வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் விவரங்கள்படி, 2020-21 நிதி ஆண்டில் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சமாக இருந்தது. 2021-22 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.31 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2020-21 நிதி ஆண்டில் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரையில் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 72.66 லட்சமாக இருந்தது.

2021-22 நிதி ஆண்டில் அது 76.90 லட்சமாக உயர்ந்துள்ளது.கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் மும்பை முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் டெல்லி, மூன்றாம் இடத்தில், கொல்கத்தா, நான்காம் இடத்தில் பெங்களூரு, ஐந்தாவது இடத்தில் ஹைதராபாத்தும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: