பொதுத் தமிழ் திருக்குறள் சிறப்பு தகவல்கள்

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம்

சிறப்பு தகவல்கள்

 

பொதுத் தமிழ்  பகுதியில் பகுதி ஆ.  1. திருக்குறள் தொடர்பான செய்திகள்மேற்கோள்கள்தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்புபண்புகல்விகேள்விஅறிவுஅடக்கம்ஒழுக்கம்பொறைநட்புவாய்மைகாலம்வலிஒப்புரவறிதல்செய்நன்றிசான்றாண்மை பெரியாரைத் துணைக் கோடல்பொருள்செயல்வகைவினைத்திட்பம்இனியவை கூறல்ஊக்கமுடைமைஈகைதெரிந்து செயல்வகைஇன்னா செய்யாமைகூடா நட்புஉழவு… போன்ற  25 அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன.

 

இந்த பகுதியில் திருக்குறள் பற்றிய சிறப்பு தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

 

திருக்குறள் பற்றிய சிறப்பு தகவல்கள்

 

 

TNPSC GROUP 2  PREVIOUS YEAR QUESTION PDF

TNPSC Group 4 Last 6 Years Old Question Papers

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

TNPSC Group 2/2A- STUDY MATERIALS

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

 

 

“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை

 

மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்

 

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”

 

 

மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம்பொருள்இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

 

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

 

இவரது ஊர்பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது இறுதி.

 

திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார்தெய்வப்புலவர்நாயனார்முதற்பாவலர்நான்முகனார்மாதானுபங்கிபெருநாவலர்பொய்யில்புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.

 

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.

 

எ.கா: 2014 +31 = 2045 (கி.பி.2014-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2045 என்று கூறுவோம்)

 

* திரு+குறள்= திருக்குறள்

 

* திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.

 

* திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.

 

* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

 

* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

 

* திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும்1330 குறள்களையும் கொண்டது.

 

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

 

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

 

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

 

* திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.

 

* திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால்பொருட்பால்காமத்துப்பால் ஆகியவை ஆகும்.

 

* அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள்பொருட்பாலில் 70 அதிகாரங்கள்காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.

 

* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் – (பொருட்பால் – அதிகாரம் 71) குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)

 

* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும்யானை 8 முறையும்பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.

 

* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

 

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

 

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

 

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

 

* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,

 

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ்கடவுள்

 

* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

 

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

 

* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல்37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

 

* திருக்குறளில் 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

* திருக்குறள் மாந்தர்கள் தம் அகவாழ்வில் சுமுகமாக கூடி வாழவும்புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

 

* திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.

 

* திருக்குள் அறம்பொருள்இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

 

* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் – அனிச்சம்குவளை

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி

 

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனைமூங்கில்

* திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.

* திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.

* திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

* உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள். இது பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

* உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்.

* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

* திருக்குறள் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறதி‘ இதில் நாலு என்பது நாலடியாரையும்இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.

* மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-ல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.

‘”தொடிற்கடின் அல்லது காமநோய் போல விடிற்கடின் ஆற்றுமோ தீ” (1159) என்ற குறள் ஒரே எழுத்தில் முடிந்துள்ளது.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

* திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்- பரிமேலழகர்

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

* எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

* திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

* ெே என்ற இந்தக் கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன.

* சிறப்புப்பெயர்கள்: வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால்அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்.

* திருக்குறள்முப்பால்உத்தரவேதம்தெய்வநூல்பொதுமறைபொய்யாமொழிவாயுறை வாழ்த்துதமிழ் மறைதிருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

 

* திருக்குறள்  இனமொழிபாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகப் பொது மறை” என்றும் அழைக்கப்படுகிறது

* திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.

* திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர். மேலும் மு.வரததாசனார்மணக்குடவர் என பலர் எழுதியுள்னர்.

* விக்டோரியா மகாராணிகாலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.

* திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர் தருமர்தாமத்தர்பரிதிதிருமலையர்பரிப்பெருமாள்மணக்குதவர்நச்சர்பரிமேலழகர்மல்லர்காளிங்கர்.

* திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் – வீரமாமுனிவர்.

* அன்புடைமைஅடக்கமுடைமைஒழுக்கமுடைமைபொறையுடைமைஅருளுடைமைஅறிவுடைமைஊக்கமுடைமைஆள்வினையுடைமைபண்புடைமைநாணுடைமை என வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.

* “ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து” – என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள் குறிபிடப்பட்டுள்ளன.

* அன்னம்,கூகை (ஆந்தை)கொக்குகாக்கைபுள்(பறவை)மயில்ஆமைகயல் மீன். மீன் (விண்மீன்)முதலைநத்தம்(சங்கு)பாம்புநாகம்என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.

* பலோடு தேன்கலந் த்ற்றே பணிமொழி

வாலெயி றூறிய நீர் (112) – என்ற குறளில் பால்தேன்நீர் என்ற மூன்று நீர்மங்கள் இடம் பெற்றுள்ளன.

* “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு” – என்ற குறளில் ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ளது.

* ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும்ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும்ஒறே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.

 

* “துணை எழுத்தே இல்லாத குறள்

 

“கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக”. (391)

* திருக்குறளில் தமிழ் என்ற சொல் இடம் பெறவில்லை.

* முதன் முதலில் 1812 ஆம் ஆண்டு ஓலைச்சுவடியிலிருந்து அச்சிடப்பட்டதே திருக்குறளின் முதற்பதிப்பாகும்.

* திருக்குறளில் ஒரு முறை மட்டுமே இடம் பெற்றுள்ள எழுத்துகள் ‘”வீங”.

* 1330 குறட்பாக்களில் எந்த இடத்திலும் கடவுள் என்ற சொல் இடம் பெறவில்லை.

* திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

 

நெடில் வாராக் குறள் ஒன்று. 

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்

தகநக நட்பது நட்பு.”

 

துணைக் கால் வராத குறள்.

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

இதுபோன்று பல சுவையான அரிய தகவல்களுடன்கீழ்வரும் 25 அதிகாரங்களின் குறள்களையும்அவற்றின் அர்த்தங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். மேலும் இந்த 25 அதிகாரத்திலுள்ள எந்த ஒரு குறளும் எந்த அதிகாரத்தில் உள்ளது என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு பயன் பெறுங்கள்.

திருக்குறள் பற்றிய சிறப்பு தகவல்கள் PDF

  

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: