பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம்
Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)
திறன் இந்தியா திட்டத்தின் கீழ், பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பயிற்சிகளை மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி அவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்வது தான் இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 3வது கட்ட திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த 2021 டிசம்பர் 31ம் தேதி வரை, 1.34 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தில் குறுகிய கால பயிற்சி மற்றும் கற்பதற்கு முன்பான அங்கீகாரம் என்ற இருவித பயிற்சிகள் உள்ளன. பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குறுகிய கால பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைகளும் வழங்கப்படுகின்றன. 53.89 லட்சம் பேருக்கு பயிற்சி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 23.70 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 2.95 லட்சம் பேர் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் மாநில வாரியான விவரங்களுக்கு கீழ்கண்ட இணைப்பை காணவும்.
தமிழகத்தில் 3,96,942 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் 3,14,887 பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர். 1,70,284 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Under Skill India Mission, Ministry of Skill Development and Entrepreneurship (MSDE) is delivering skills through Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) with an objective to impart short duration skill development training and certification to youth and to make them employable for better livelihood across the country.
Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) was firstly launched in 2015. Presently, the third phase of PMKVY, i.e., PMKVY 3.0 (2020-22) is being implemented across the country. Since inception, till 31.12.2021, 1.34 crore candidates have benefited from the PMKVY across the country.