BREAKING: TNPSC தேர்வு தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BREAKING: TNPSC தேர்வு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்
2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21ம் தேதி குரூப்-2 & குரூப்-2 ஏ தேர்வு நடைபெறும் குரூப்-2 தேர்வுக்கு பிப்.23 முதல் மார்ச் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் மொத்தமுள்ள 200 மதிப்பெண்களில் 100 மதிப்பெண்களுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும் என்று TNPSC தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
TNPSC குருப் 2 தேர்வுகள் :-
விண்ணப்பிக்க கடைசி தேதி – மார்ச் 23, 2022
தேர்வு நடைபெறும் நாள் – மே 21, 2022
முடிவுகள் வெளியிடும் நாள் – ஜூன், 2022
#TNPSC – நேரம் மாற்றம் ; இதுவரை காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வுகள், இனிமேல் காலை 9.30 மணிக்கு தொடங்கும். காலை 9.30 முதல் 12.30 வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மனி வரை
குரூப்- 2, 2 ஏ தேர்வுகளில் 300க்கு 90 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றால் தேர்ச்சி இல்லை .
மொத்தம் 5,417 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது
முதல் முறையாக காவல்துறையில் சிறப்பு பிரிவு உதவியாளர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு.