TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 18

TNPSC Group 4 & VAO Model Questions  வினா விடை தொகுப்பு-PART 18

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் 

 

  (இந்தியப் பொருளாதாரம்)

1. இந்தியாவில் வர்த்தகத்தில் ஏக போக உரிமையைத் தடுக்கும் சட்டம் (MRTP) எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
அ) 1966 ஆ) 1969
இ) 1972 ஈ) 1975

2. 1991 புதிய தொழிற் கொள்கையின்படி கீழ்க்கண்ட சரத்துகளில் தவறானது எது?
அ) தனியார் முதலீடுகளுக்கு அதிகமாக அணுமதி அளிக்கப்பட்டது.
ஆ) உற்பத்தியில் நிலையான வளர்ச்சி
இ) லாபகரமான வேலைவாய்ப்பு
ஈ) மனித வளத்தைக் குறைவாகப் பயன்படுத்துதல்

 

 

3. ‘பணத்தின் மதிப்பு குறைவதும் விலைகள் உயர்ந்துகொண்டே செல்வதும்தான் பணவீக்கம்’ என வரையறுத்த பொருளாதார அறிஞர் யார்?
அ) ஆல்ஃப்ரட் மார்ஷல் ஆ) ஆடம் ஸ்மித்
இ) கிரௌத்தர் ஈ) செம்ஸ்போர்டு

4. கீழ்க்கண்டவர்களில் பணவீக்கத்தினால் பயன்பெறாதவர்கள் யார்?
அ) கடன் கொடுத்தவர்
ஆ) கடன் வாங்கியவர்
இ) ஏற்றுமதியாளர்கள்
ஈ) சேமிப்பாளர்கள்

5. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளில் கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
அ) விலைக் கட்டுப்பாடு
ஆ) இறக்குமதியில் கட்டுப்பாடு விதித்தல்
இ) மூலதனத் திட்டங்களில் அரசு செலவைக் குறைத்தல்
ஈ) வரிவிதிப்பைப் குறைத்தல்

6. இந்தியத் திட்டக்குழுவின் மாற்று அமைப்பான நிதி ஆயோக் எந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது?
அ) 01-01-2014
ஆ) 01-01-2015
இ) 01-01-2016
ஈ) 01–01-2017

7. 1952 இல் தொடங்கப்பட்ட தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் அலுவல் சாராத் தலைவர் யார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) துணைக் குடியரசுத் தலைவர்
இ) பிரதமர்
ஈ) நிதி அமைச்சர்

8. 15 ஆவது நிதிக்குழு தலைவர் யார்?
அ) Y.V. ரெட்டி
ஆ) N. K. சிங்
இ) உர்ஜித் படேல்
ஈ) மாண்டேக்சிங் அலுவாலியா

9. கீழ்க்கண்ட மாவட்டங்களில் தமிழ்நாட்டின் நெசவுப் பள்ளத்தாக்கில் அமையாத மாவட்டம் எது?
அ) கோயம்புத்தூர்
ஆ) ஈரோடு
இ) திண்டுக்கல்
ஈ) திருப்பூர்

10. தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என எந்த நகரம் பெயர் பெற்றுள்ளது?
அ) காஞ்சிபுரம்
ஆ) கரூர்
இ) ஈரோடு
ஈ) கும்பகோணம்

11. இந்தியாவின் பட்டு நெசவுத் தொழிலில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
அ) முதலாமிடம்
ஆ) இரண்டாமிடம்
இ) மூன்றாமிடம்
ஈ) நான்காமிடம்

12. இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான மதுரா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) உத்தராகண்ட்
ஆ) உத்தரப் பிரதேசம்
இ) மத்தியப் பிரதேசம்
ஈ) பிஹார்

13. ரோம ஆடைத்தொழிலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
அ) பஞ்சாப்
ஆ) ஹரியானா
இ) மேற்கு வங்கம்
ஈ) இமாசலப் பிரதேசம்

14. இந்தியாவில் பட்டு ஆராய்ச்சி நிறுவனம் எந்த நகரில் அமைந்துள்ளது?
அ) காஞ்சிபுரம்
ஆ) திருபுவனம்
இ) மைசூரு
ஈ) ஆரணி

15. பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா திட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
அ) 1990 ஆ) 1993
இ) 1996 ஈ) 1999

16. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ) கங்கா கல்யாண் திட்டம் – 1997
ஆ) அந்தோத்யா அன்ன யோஜனா திட்டம் – 2000
இ) பிரதம மந்திரி சுரக்க்ஷாபீமா யோஜனா – 2015
ஈ) பிரதம மந்திரி அவாஸ் கிராம யோஜனா – 2018

17. ஜிஎஸ்டி எத்தனை அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
அ) இரண்டு ஆ) மூன்று
இ) நான்கு ஈ) ஐந்து

18. கீழ்க்கண்ட வரிகளில் எது மாநில வரி அல்ல?
அ) நில வருவாய்த் தீர்வை
ஆ) மது வகை மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வைகள்
இ) வளர்விகித, தேய்விகித வரிகள்
ஈ) நிலம், மணை, கட்டிடங்கள் மீதான வரிகள்

19. இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்டும் அறிவியலார் யார்?
அ) டாக்டர் வர்கீஸ் குரியன்
ஆ) நார்மன் போர்லாக்
இ) டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
ஈ) டாக்டர் வேணுகோபால்

20. விவசாய முன்னேற்றம், விவசாயிகளின் நலன் காத்தல் எனும் கிரிஸி கல்யாண் திட்டம் எந்த ஆண்டு இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது?
அ) 2016 ஆ) 2018
இ) 2020 ஈ) 2022

 

ANS:

1. ஆ) 1969

2. ஈ) மனித வளத்தைக் குறைவாகப் பயன்படுத்துதல் (முழுமையாகப் பயன்படுத்துதல்)

3. இ) கிரௌத்தர்

4. அ) கடன் கொடுத்தவர்

5. ஈ) வரி விதிப்பைக் குறைக்கலாம்
(அதிகப்படுத்தலாம்)

6. ஆ) 01-01-2015

7. இ) பிரதமர்

8. ஆ) N. K. சிங் (2020-2025)

9. இ) திண்டுக்கல்

10. ஆ) கரூர்

11. ஈ) நான்காமிடம்

12. ஆ) உத்தரப் பிரதேசம்

13. அ) பஞ்சாப்

14. இ) மைசூரு

15. ஆ) 1993

16. ஈ) பிரதம மந்திரி அவாஸ் கிராம யோஜனா – 2018 (2016)

17. இ) நான்கு (5%, 12%, 18%, 28%)

18. இ) வளர்விகித மற்றும் தேய்விகித வரிகள்

19. இ) டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்

20. அ) 2016

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 1

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 2

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 3

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 4

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 5

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 6

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 10

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 11

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 12

TNPSC Group 4 – வினா விடை INM 100 Questions PDF-PART 13

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 14

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 15

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 16

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 17

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: