TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 4

TNPSC Group 4 & VAO Model Questions  வினா விடை தொகுப்பு-PART 4

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் 

 

JOIN GROUP 4 TEST BATCH- ONLINE TEST SERIES  WHATSAPP 8681859181

தமிழ் நாடு -2
(தமிழக அரசியல் – அ) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன:

தமிழ் நாடு -2 (தமிழக அரசியல் – அ)

1. இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்?
அ) சுப்பராயுலு
ஆ) ஓமாந்தூர் பி. ராமசாமி
இ) சி. ராஜகோபாலாச்சாரி
ஈ) கு. காமராஜர்

2. இந்தியா விடுதலை அடைந்தபின் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலுக்கு பின் மேலவை மூலம் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்?
அ) சுப்பராயுலு
ஆ) ஓமாந்தூர் பி. ராமசாமி
இ) சி. ராஜகோபாலாச்சாரி
ஈ) கு. காமராஜர்

3. தமிழ்நாட்டின் முதல்வராக தொடர்ச்சியாக அதிக காலம் இருந்தவர் யார்?
அ) எம்.ஜி. ராமச்சந்திரன்
ஆ) ஜெ.ஜெயலலிதா
இ) மு.கருணாநிதி
ஈ) கு. காமராஜர்4. தமிழ்நாட்டின் முதல்வராக அதிக முறை பதவியில் இருந்தவர் யார்?
அ) எம்.ஜி. ராமச்சந்திரன்
ஆ) ஜெ.ஜெயலலிதா
இ) மு.கருணாநிதி
ஈ) கு. காமராஜர்5. சி.என். அண்ணாத்துரை மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்?
அ) எம்.ஜி. ராமச்சந்திரன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) மு.கருணாநிதி
ஈ) எஸ்.டி. சோமசுந்தரம்

6. எம்.ஜி. ராமச்சந்திரன் மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்?
அ) ஜானகி ராமச்சந்திரன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) மு.கருணாநிதி
ஈ) எஸ்.டி. சோமசுந்தரம்

7. சி.ராஜகோபாலாச்சாரி தனது முதல்வர் பதவியை 1939 இல் ராஜினாமா செய்ததற்கு பின் அடுத்து 7வருடங்கள் ஆளுநர் ஆட்சிக்குப் பின்னர் முதல்வராக பதவியேற்றவர் யார்?

அ) சுப்பராயுலு
ஆ) ஓமாந்தூர் பி. ராமசாமி
இ) டி.பிரகாசம்
ஈ) கு. காமராஜர்

8. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க.
உலகத்தமிழ் மாநாடு. முதல்வர்
அ) இரண்டாம் – அண்ணாதுரை
ஆ) ஐந்தாம். – எம்.ஜி.ஆர்
இ) எட்டாம் – ஜெயலலிதா
ஈ) பத்தாம் – கருணாநிதி

9. நீதிக்கட்சி எந்த ஆண்டுகளில் சென்னை மாகாணத்தை ஆண்டது?
அ) 1921 -1926
ஆ) 1926 -1931
இ) 1936 -1939
ஈ) 1942 – 1947

10. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க.
கட்சி. தோன்றிய ஆண்டு
அ) தி.மு.க. 1949
ஆ) அ.தி.மு.க. 1970
இ) த.மா.கா. 1996
ஈ) தே.மு.தி.க. 2004

11. ஆதி திராவிடர் மகாஜன சபையை எந்த வருடம் இரட்டைமலை சீனிவாசன் நிறுவினார்?
அ) 1861
ஆ) 1876
இ) 1886
ஈ) 1891

12. இங்கிலாந்து நாடாளுமன்ற கவுன்சில் முன் சாட்சியளிக்க தமிழர் சத்தியமூர்த்தி எந்த வருடம் அனுப்பி வைக்கப்பட்டார்?
அ) 1917 ஆ) 1918
இ) 1919 ஈ) 1920

13. திருநெல்வேலியில் பிறந்த ‘காயிதே மில்லத்’ அவர்களின் இயற்பெயர் யாது?
அ) முகமது இஸ்மாயில்
ஆ) முகமது இக்பால்
இ) காதர் மொய்தீன்
ஈ) அப்துல் சமது

14. பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
அ) பி. ராமமூர்த்தி
ஆ) எஸ். சத்தியமூர்த்தி
இ) ஜீவா என்கிற பா.ஜீவானந்தம்
ஈ) பாலதண்டாயுதம்

15. தென்னிந்திய ரயில்வே தொழிற்சங்கம் உருவாகக் காரணமானவர் யார்?
அ) பி. ராமமூர்த்தி
ஆ) எஸ். சத்தியமூர்த்தி
இ) ஜீவா
ஈ) சிங்காரவேலர்

16. எட்டு வருடங்கள் நடைபெற்ற காளையார்கோவில் போரின் முடிவில் சிவகங்கையை மீட்ட தமிழ் வீராங்கனை யார்?
அ) ராமமிர்தம்
ஆ) வேலு நாச்சியார்
இ) வள்ளியம்மை
ஈ) அருண்டேல்

17. “தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்” என்ற நாவலை எழுதியவர் யார்?
அ) மூவலூர் இராமமிர்தம்
ஆ) வேலு நாச்சியார்
இ) தில்லையாடி வள்ளியம்மை
ஈ) ருக்மணிதேவி அருண்டேல்

18. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் கொண்டுவர மிகவும் உதவியர் யார்?
அ) மூவலூர் ராமமிர்தம்
ஆ) வேலு நாச்சியார்
இ) தில்லையாடி வள்ளியம்மை
ஈ) ருக்மணிதேவி அருண்டேல்

19. “இந்தியாவின் புனித மகள்” என காந்தியடிகளால் போற்றப்பட்டவர் யார்?
அ) மூவலூர் இராமமிர்தம்
ஆ) வேலு நாச்சியார்
இ) தில்லையாடி வள்ளியம்மை
ஈ) ருக்மணிதேவி அருண்டேல்

20. ருக்மணிதேவி அருண்டேல் எந்த ஆண்டில் கலாஷேத்ரா நடனப்பள்ளியை நிறுவினார்?
அ) 1926 ஆ) 1930
இ) 1932 ஈ) 1936

பொதுத்தமிழ் Pothu Tamil Study Material PDF

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 4 PDF

ANSWER KEY: VIDEO :

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 1

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 2

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 3

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: