TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 7

TNPSC Group 4 & VAO Model Questions  வினா விடை தொகுப்பு-PART 6

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் 

 

JOIN GROUP 4 TEST BATCH- ONLINE TEST SERIES  WHATSAPP 8681859181

 

இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் 

 

 

1. ஒடிசாவில் எந்த நகரத்தில் ஜெகநாதர் கோயில் உள்ளது?
அ) புவனேஸ்வரம் ஆ) புரி
இ) கட்டாக் ஈ) கொனாரக்

2. இந்தியாவில் மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் எந்த நகரத்தில் உள்ளது?
அ) புவனேஸ்வரம் ஆ) புரி
இ) கட்டாக் ஈ) கொனாரக்

3. ஜாரவா பழங்குடி மக்கள் அதிக அளவில் வசிக்கும் இடம் எது?
அ) அந்தமான் ஆ) லட்சத்தீவு
இ) மாகே ஈ) யானம்

4. இந்தியாவின் ஏரிகள் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) ஜெய்ப்பூர் ஆ) அஜ்மீர்
இ) உதய்பூர் ஈ) கோட்டா

5. 18 – 05 – 1974 அன்று சிரிக்கும் புத்தர் என்கிற பெயரில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை எந்த நகரில் நடத்தியது?
அ) காந்திநகர் ஆ) தன்பாத்
இ) ராஞ்சி ஈ) பொக்ரான்

6. புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி அம்மன் மலைக்கோயில் அமைந்துள்ள உதம்பூர் எந்த மாநிலம்/மத்திய ஆட்சிப் பகுதியில் உள்ளது?
அ) இமாசல பிரதேசம்
ஆ) உத்தராகண்ட்
இ) ஜம்மு & காஷ்மீர்
ஈ) அருணாசல பிரதேசம்

7. இந்தியாவின் அரண்மனை நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) கொல்கத்தா ஆ) ஜெய்ப்பூர்
இ) மைசூரு ஈ) தஞ்சாவூர்

8. நிலப்பரப்புகளின் ஒற்றுமை காரணமாக இந்தியாவில் எந்த இடத்தை மகாத்மா காந்தி ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என குறிப்பிட்டுள்ளார்?
அ) புவனேஸ்வரம் ஆ) புரி
இ) கௌசாணி ஈ) கொனாரக்

9. இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம் (pink city) என அழைக்கப்படும் நகரம் எது?
அ) கொல்கத்தா ஆ) ஜெய்ப்பூர்
இ) மைசூரு ஈ) உதய்பூர்

10. எல்லோரா குகைக்கோயில் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) குஜராத் ஆ) மகாராஷ்டிரம்
இ) ஒடிசா ஈ) பிஹார்

11. மகாராஷ்டிரத்தில் உள்ள அஜந்தா குடவரைக் கோயில்களைப் பற்றிக் குறிப்பெழுதி வைத்த சீனப் பயணி யார்?
அ) யுவான் சுவாங் ஆ) பாஹியான்
இ) இட்சிங்
ஈ) மார்க்கோ போலோ

12. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எந்த நகரில் உள்ளது?
அ) டெல்லி ஆ) சென்னை
இ) கொல்கத்தா ஈ) மும்பை

13. சரயு நதி பாயும் இந்திய மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்திர பிரதேசம்
இ) உத்தராகண்ட்
ஈ) மகாராஷ்டிரம்

14. அல்மோரா சிறை இருக்கும் இந்திய மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்தர பிரதேசம்
இ) உத்தராகண்ட்
ஈ) பிஹார்

15. 1972 ஆம் ஆண்டு எந்த நகரில் கணிதமேதை இராமானுஜம் உயர் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது?
அ) டெல்லி ஆ) சென்னை
இ) கொல்கத்தா ஈ) மும்பை

16. இந்தியாவின் மிகப் பெரிய மத்திய ஆட்சிப் பகுதி எது?
அ) சண்டிகர்
ஆ) அந்தமான் நிகோபர் தீவுகள்
இ) டெல்லி
ஈ) புதுச்சேரி

17 இயற்கைச் செழிப்புடன் காணப்படும் சுந்தரவன காடுகள் அமைந்துள்ள மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்தர பிரதேசம்
இ) உத்தராகண்ட்
ஈ) மேற்கு வங்கம்

18. எந்த ஆண்டில் மேகாலயம் தனி மாநில அந்தஸ்தைப் பெற்றது?
அ) 1969 ஆ) 1970
இ) 1972 ஈ) 1974

19. ‘ஆப்பிள் மாநிலம்’ என அழைக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?
அ) ஜம்மு & காஷ்மீர்
ஆ) இமாசல பிரதேசம்
இ) உத்தரகாண்ட்
ஈ) அருணாசல பிரதேசம்

20. ‘இந்தியாவின் நறுமணத் தோட்டம்’ எனப் போற்றப்படும் மாநிலம் எது?
அ) கேரளம்
ஆ) இமாசல பிரதேசம்
இ) ஜம்மு & காஷ்மீர்
ஈ) அருணாசல பிரதேசம்

பொதுத்தமிழ் Pothu Tamil Study Material PDF

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: