TNPSC Latest News Group 4 Exam councelling

TNPSC  PRESS RELEASE

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி-IV-ல் அடங்கிய) தட்டச்சர் பதவிகளுக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி IV-ல் அடங்கிய) 2018-2019 மற்றும் 2019-2020 [Combined Civil Services Examination-IV (Group-IV Services)] – இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 14.08.2019 ஆம் நாளிட்ட அறிவிக்கை எண்:19/2019 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 01.09.2019 அன்று நடைபெற்று எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 1211.2019 அன்று வெளியிடப்பட்டது.

இத்தெரிவு தொடர்பான மூன்றாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை -3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் தட்டச்சர் பதவிக்கு 15.022022 அன்று நடைபெற உள்ளது.

 மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண் / இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய “அழைப்புக்கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

TNPSC GROUP 2  PREVIOUS YEAR QUESTION PDF

TNPSC Group 4 Last 6 Years Old Question Papers

விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை | இட ஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

 எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு உரிய நாளில் நேரத்திற்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

The Tamil Nadu Public Service Commission in its Notification No.19/2019, dated 14.06.2019 had invited applications for selection of candidates for appointment by direct recruitment to the posts included in Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020. The Written Examination was held on 01.09.2019 FN and results published on 12.11.2019. In order to verify the genuineness of claim of the candidates made in their on-line application regarding age, qualification, community, etc. and to fill up the remaining vacancies for the post of Typist by Original Certificate Verification cum Counselling (Phase-III) is scheduled to be held on 15.02.2022 at the O/o. Tamil Nadu Public Service Commission, TNPSC Road, (Near Broadway Bus Stand and Fort Railway Station) VOC Nagar, Chennai – 600 003.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி-IV-ல் அடங்கிய) தட்டச்சர் பதவிகளுக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு

DOWNLOAD TNPSC PRESS RELEASE

TNPSC January Daily Current Affairs 2022

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: