இந்திய விடுதலைப் போரில் பத்திரிகைகள்

இந்திய சுதந்திர போராட்ட கால  பத்திரிக்கைகள்

விடுதலைப் போரில் பத்திரிகைகள்

மகாத்மா காந்தி

அவர் விடுதலை உணர்வு முழக்கங்களை பல பத்திரிகைகள் மூலம் மக்களிடம் பரப்பினார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக ‘இந்தியன் ஒப்பீனியன்’ என்ற பத்திரிகையை தொடங்கினார். இதன் உரிமையாளர் வேறொருவர் என்றாலும் காந்தியே பத்திரிகையின் முதுகெலும்பாக செயல்பட்டார். இந்தியாவில் 1919-ல் ‘யங் இந்தியா’ பத்திரிகையை தொடங்கி ஆசிரியராக செயல்பட்டார். அகிம்சையாக போராட வேண்டும் என்ற தத்துவம் தந்த காந்திஜி, பத்திரிகையில் ஆங்கிலேய அரசை கடுமையாக விமர்சித்து எழுதுவார். அதனால் தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நீண்ட சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்கள் நலன்கள் மற்றும் உரிமைகளுக்காக ஹரிஜன் என்ற ஆங்கில இதழையும் 1933-ல் காந்திஜி தொடங்கினார்.

 


பாலகங்காதர திலகர்

நாட்டில் சுதந்திர ஆர்வத்தை வளர்க்க ஆங்கிலத்தில் ‘மராட்டா’ என்றும் மராத்தியில் ‘கேசரி’ என்றும் இரண்டு பத்திரிகைகளை ஆரம்பித்தார் பாலகங்காதர திலகர். தனது பத்திரிகைகளின் மூலம் தேச பக்தியை தீவிரமாக பரப்பிய திலகர் மீது ஆங்கிலேயர் ஆட்சி குற்றம்சாட்டியது. இதனால் திலகர் சிறைக்கும் சென்றார்.

சுபாஷ் சந்திரபோஸ்

சுபாஷ் சந்திரபோஸ் இந்திய விடுதலைப் போராட்டத்தை தனி வழியில் நடத்திச் சென்றவர். லண்டனில் படித்தபோது மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் அறிந்திருந்த நேதாஜி கல்லூரி மாணவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டும் உரைகள் ஆற்றினார். தீவிரவாத காங்கிரஸ்காரராக விளங்கிய தாஸ், என்பவர் தொடங்கிய சுயராஜ்யா என்ற பத்திரிகையின் ஆசிரியராக நேதாஜி பொறுப்பு வகித்தார். காந்தியின் அமைதிப் போராட்டத்தைவிட ஆயுதம் தாங்கிய துணிச்சலான போராட்டமே விடுதலையை பெற்றுத் தரும் என்று முழங்கிய நேதாஜி, தீவிரமான கருத்துகளை பத்திரிகையில் எழுதினார்.

அன்னிபெசன்ட்

எந்த நாடு நம்மை அடிமைப்படுத்தியதோ அந்த நாட்டில் பிறந்த ஒரு பெண் நம் நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்தார், போராடினார், சிறை சென்றார் என்பது ஆச்சரியம்தானே! அந்த ஆச்சரியமிக்க பெண்மணி அன்னிபெசன்ட் அம்மையார். இங்கிலாந்தில் பிறந்த இவர், இந்தியாவிற்கு வந்து, நம் நாட்டு விடுதலைக் காக ‘ஹோம் ரூல்’ இயக்கத்தை ஆரம்பித்தார். தடைகளை மீறி சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார். ‘காமன் வீல்’, ‘நியூ இந்தியா’ பத்திரிகைகளை ஆரம்பித்து, தனது கருத்துக்களை மக்களிடம் பரப்பினார். பெண் கல்விக்காக குரல் கொடுத்தார். இப்படி தன் வாழ்நாள் முழுக்க நாட்டு முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார் அன்னி பெசன்ட்.

இந்திய தலைவர்களின் விடுதலை முழக்கங்கள் நாடு முழுவதும் சுதந்திர வேட்கையை தட்டியெழுப்பி, நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க வழி செய்தது என்றால் மிகையில்லை!

பாரதியார்

எளிய தமிழில் வீரமூட்டும் கவிதைகள் மூலம் நாட்டை சுதந்திர போராட்டத்துக்குத் தயாராக்கியவர் கவி.சுப்பிரமணிய பாரதியார். சுப்பிரமணிய ஐயரால் நடத்தப்பட்டு வந்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார் பாரதியார். பாரதியின் ஒவ்வொரு எழுத்தும், ஒவ்வொரு பேச்சும் தாய் மண்ணின் சுதந் திரத்தைப் பற்றியே இருந்தது. சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ் இதழ்களிலும், பாலபாரதா, யங் இந்தியா ஆகிய ஆங்கில இதழ்களிலும் பணியாற்றி விடுதலை உணர்வு பொங்க எழுதினார்.

பக்கிம் சந்திரர்

பிரபல நாவலாசிரியரான பக்கிம் சந்திர சட்டர்ஜி “ஆனந்த மடம்”, “தேவி”, “சவுது ராணி” முதலிய நாவல்களின் மூலம் புரட்சி உணர்ச்சி களை பரவச் செய்தார். இவருடைய ‘வந்தே மாதரம்’ தேசிய கீதப் பாடல் வங்காளிகளிடையே புரட்சி வேகத்தை அதிகரிக்கச் செய்தது.

இந்திய சுதந்திர போராட்ட கால  பத்திரிக்கைகள் / ஆசிரியர்கள் 

 

வ எண்.

   பத்திரிக்கை     

தொடங்கியவர் / ஆசிரியர் 

1

இந்து பேட்ரியாட்  (1853) ஹரிஸ் சந்திர முகர்ஜி 

2

ஷோம் பிரகாஷ்  ஈஸ்வர சந்திர வித்யாசாகர் 

3

ராப்ட் கோப்தார்  (1861) தாதாபாய் நௌரோஜி 

4

அம்ரித் பஜார் பத்ரிகா      (1868) சிசிர் குமார் கோஷ் 

5

ஸ்டேட்ஸ்மேன் (1875) ராபர்ட் நைட், சுனந்தா 

6

தி ட்ரீபியூன் (1877) தயாள் சிங் 

7

தி ஹிந்து (1878) சுப்ரமணிய ஐயர் 

8

மராட்டா (1881)     பால கங்காதர திலகர் 

9

கேசரி  (1881) பால கங்காதர திலகர் 

10

சுதேசமித்திரன் (1882) சுப்ரமணிய ஐயர் 

11

இந்தியா (1906), விஜயா (1909), சக்ரவர்த்தினி, கர்மயோகி, தர்மம்.         பாரதியார் (சுதேச மித்ரனில் உதவி ஆசிரியர்))

12

வந்தே மாதரம் (1906) அரவிந்த கோஷ், மேடம் பிகாஜி காமா 

13

நியாயபிமானி (1908) வைத்தியலிங்க முதலியார் 

14

சூர்யோதயம் (1910) நீலகண்ட பிரம்மச்சாரி 

15

அல்ஹிலால் (1912) அபுல் கலாம் ஆசாத் 

16

பாம்பே கிரானிக்கள் (1913) பெரோஸ் மேத்தா 

17

காமன் வீல் (1914), நியூ இந்தியா (1914), மெட்ராஸ் ஸ்டாண்டர்ட்      அன்னி பெசன்ட் 

18

பிரபஞ்ச மித்ரன் (1916) வரதராஜீலு நாயுடு, சுப்ரமணிய சிவா 

19

சுகாபவிருத்தினி (1916) வேங்கடாசல நாயக்கர் 

20

தேச பக்தன்  (1917) திரு.வி.க         

21

யங் இந்தியா (1919) காந்தியடிகள் 

22

இன்டிபென்டென்ட் (1919) மோதிலால் நேரு 

23

தமிழ் நாடு (1919) வரதராஜீலு நாயுடு

24

நவசக்தி (1920) திரு.வி.க 

25

சோசியல் லிஸ்ட் (1922) எஸ்.எ.டாங்கே 

26

லோகோபகாரி (1922) பரலி சு. நெல்லையப்பர் 

27

தேச சேவகன் (1922) சகோன்  சின்னையா 

28

தொழிலாளி (1923), புது உலகம் ம.சிங்கார வேலர் 

29

விடுதலை (1935), புரட்சி (1933), குடியரசு  (1924), பகுத்தறிவு (1934), Revolt (1928) (ஆங்கில இதழ்), உண்மை (1970). ஈ.வே.ரா.பெரியார் 

30

நவஜீவன்  காந்தியடிகள் 

31

ஞானபானு, இந்திய தேசாந்திரி      சுப்ரமணிய சிவா 

32

சுதந்திர சங்கு (1930) சுப்பிரமணியம், சங்கு கணேசன் 

33

நேஷனல் ஹெரால்ட்  ஜவஹர்லால் நேரு 

34

ஹரிஜன் (1931) காந்தியடிகள் 

35

சுதந்திரம் (1931) வ.சுப்பையா 

36

யுகாந்தர் (1931) பூபேந்திரநாத் தத் 

37

சந்தியா  பிரமபாந்த் உபாத்யாய் 

38

தினமணி (1934) எஸ்.சந்தானம் 

39

ஜனசக்தி (1937) ப.ஜீவானந்தம் 

40

சுவராஜ்  நேதாஜி 

41

பிரபு பாரதார, உத்போதனா விவேகானந்தர்

42

பண்டி ஜீவன்  சச்சின் சன்யால் 

43

சுயராஜ்யா (1922) டி.பிரகாசம் 

44

திராவிடன்  பக்தவச்சலம் 

45

ஹிந்துஸ்தான், லீடர் மதன் மோகன் மாளவியா 

46

ஜனதா (1930), மூக்நாயக், பகிஸ்கரித் பாரத்
அம்பேத்கர் 

47

இந்துஸ்தான் டைம்ஸ்  K.M.பணிக்கர் 

48

சர்வண்ட்ஸ் ஆப் இந்தியா      V.S.சீனிவாச சாஸ்திரி 

49

பஞ்சாபி  லாலா லஜபதிராய் 

50

பாலபாரதி,  தேச பக்தன்  வ.வே.சு.ஐயர் 

51

மெட்ராஸ் டைம்ஸ்  வில்லியம் டிக்பை 

52

ட்ரைபியூன்      D.S.மஜீதா 

53

பாம்பே ஹெரால்ட்  வில்லியம் ஹஸ்பர்னர்

54

ஜஸ்டிஸ்  டி.எம்.நாயர் 

55

பெங்கால் கெஜட் (1780) ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 

56

ஜனசக்தி (1937), தாமரை (1959), சமதர்மம், அறிவு. ப.ஜீவானந்தம் 

57

ஜகன் மோகினி  வை.மு.கோதைநாயகி 

58

விமோசனம், சுயராஜ்ஜியம்  இராஜாஜி 

59

உதயசூரியன்  வெங்கடராயலு நாயுடு 

60

மணிக்கொடி  சீனிவாசன் 

61

ஒரு பைசா தமிழன் (1907), திராவிட பாண்டியன் (1885) அயோத்திதாச பண்டிதர் 

62

விவேகபானு, இந்து நேசன்  வ.உ.சிதம்பரனார் 

63

செங்கோல், தமிழ் அரசு  ம.பொ.சிவஞானம்      

POTHU TAMIL BOOKS ORDER LINK 

Tamil Ilakkanam Complete PDF – All Topics in One PDF

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: