ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
கோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
கல்வி தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: பொதுப்பிரிவினருக்கு 18 வயது முடிந்தும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 வயது முடிந்தும் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.
காலியிடங்கள் :
ஊராட்சி செயலாளர் பதவியிடம் காலியாக உள்ள ஊராட்சியின் பெயர், இட ஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி எப்படி நடைபெறும், ஒவ்வொரு கிராமத்தின் குறியீடு எண் ஆகிய அனைத்து தகவலும் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : Rs : 7,700
கடைசி நாள் : 11.04.2018 மாலை 5.45 மணிக்குள்
தேர்வு செய்யும் முறை :நேர்முக தேர்வு
நிபந்தனைகள் :
1,விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி. இருப்பிடம். சாதிச்சான்று. முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2,இனசுழற்சி. வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்.
3,ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்,
4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க வேண்டும்.
5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அந்த ஊராட்சியின் எல்லையை
ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.
6. அரசு விதிகளின், இன சுழற்சி முறை பின்பற்றி நியமனம் மேற்கொள்ளப்படும்.
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Coimabtore- கிராம ஊராட்சி செயலர்
| கோயம்புத்தூர் | Download the Notification |
| விண்ணப்பங்கள் | Application |
வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
